ஸ்ரீராமகிருஷ்ணர்: நாட்டின் லட்சிய புருஷர்

ஸ்ரீராமகிருஷ்ணர்: நாட்டின் லட்சிய புருஷர்

சுவாமி விவேகானந்தர்

ஒரு நாடு விழித்தெழ வேண்டுமானால் அதற்கு உயர்ந்ததோர் லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் எது? அறுதிப் பரம் பொருளே. ஆனால் குணம் எதுவுமில்லாத அத்தகைய லட்சியத் தினால் எல்லோரும் விழிப்புப் பெற முடியாது. எனவே உருவ லட்சியம் ஒன்று தேவை. அத்தகைய லட்சிய உருவே ஸ்ரீராமகிருஷ்ணர். மற்றவர்கள் தற்போது நமது லட்சியமாக இருக்க முடியாது. ஏனெனில் அவர்களின் காலம் மலையேறி விட்டது. எல்லோரும் வேதாந்த வாழ்வு வாழ வேண்டுமானால் தற்போதைய தலைமுறையினருடன் அனுதாபமுள்ள ஒருவர் வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ணர் இதை நிறைவேற்றுகிறார். எனவே இவரை எல்லோருக்கும் முன் வைக்க வேண்டும். அவர் ஒரு சாதுவா அவதார புருஷரா என்பது பற்றிய கவலை வேண்டியதில்லை.

மீண்டும் ஒருமுறை அவர் நம்மிடையே வருவதாகக் கூறினார். அப்போது அவர் விதேக முக்தி பெறுவார் என்று நினைக்கிறேன். நீங்கள் செயல்புரிய வேண்டுமானால் Guardian Angel (காக்கும் தேவதை) என்று கிறிஸ்தவர்கள் சொல்கிறார் களே அதுபோல், அவர்போன்ற ஓர் இஷ்டதெய்வம் வேண்டும்.

ஒவ்வொரு நாடும் ஒவ்வோர் இஷ்டதெய்வத்தைக் கொள் கிறது, இவை ஒவ்வொன்றும் மற்றவற்றை அடக்கித் தாமே மேலோங்கி நிற்க விரும்புவதுபோல் தோன்றுகிறது. இத்தகைய இஷ்டதெய்வம் ஒரு நாட்டிற்கு நன்மை செய்ய முடியாதென்றே சிலவேளைகளில் நான் நினைக்கிறேன்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  III. ஸ்ரீராமகிருஷ்ணர் –   6. ஸ்ரீராமகிருஷ்ணர்: நாட்டின் லட்சிய புருஷர்