19. ராமாயணம்: சில குறிப்புகள்

ராமாயணம்: சில குறிப்புகள்

அன்பு ஒருவனைக் கீழே தள்ளுவதில்லை; அது வியாபார நோக்கு உடையது அல்ல, சுயநலம் என்பதை அறிவதில்லை. நாம் நல்லது செய்தாலும் தீமை செய்தாலும் நமக்குத் துணை நிற்பவனையே வழிபட வேண்டும். முதுமை எய்திய சக்கரவர்த்தி யின் உயிராக விளங்கினான் ராமன். அந்தச் சக்கரவர்த்தியால் வாக்குத் தவற முடியவில்லை .

‘ராமன் எங்கு போனாலும் அங்கே நானும் போவேன்’ என்று கூறினான் ராமனின் தம்பியாகிய லட்சுமணன். இந்துக்களாகிய எங்களுக்கு அண்ணனின் மனைவி தாய் போன்றவர். மெலிந்து, முகம் வெளுத்து, அடிவானத்தில் காணப்படும் பிறைச் சந்திரன் போல் சீதை இருந்ததைக் கடைசியாக அனுமன் கண்டான்.

சீதை கற்பே உருவானவள்; கணவனின் உடம்பைத் தவிர வேறு உடம்பை அவள் தீண்ட மாட்டாள். ‘பரிசுத்தமானவள். கற்பே உருவானவள்’ என்று ராமன் அவளைப் பற்றிக் கூறுகிறான். தன்னளவில் நாடகமும் இசையும் மதமே. எத்தகைய பாடல் ஆனாலும், காதல் பாடலாக இருந்தாலும் கவலை வேண்டாம்; ஆன்மா அதில் லயித்துவிட்டால் ஒருவன் முக்தி பெறுகிறான். அதுவே போதும், வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஆன்மா முற்றிலுமாக அதில் ஈடுபடுமானால் அவனுக்கு முக்திதான். அதுவும் நம்மை ஒரே லட்சியத்திற்கே கொண்டு செல்கிறது என்று சொல்கிறார்கள்.

மனைவி என்பவள் சகதர்மிணி. இந்து செய்ய வேண்டிய சடங்குகள் நூற்றுக்கணக்கானவை. மனைவி இல்லாமல் இதில் எதையும் செய்ய முடியாது. கணவனையும் மனைவியையும் சேர்த்துப் புரோகிதர்கள் ‘முடி போட்டு’ விடுவதை நீங்கள் காணலாம். இவ்வாறு போடப்பட்ட முடிச்சுடனேயே அவர்கள் கோயில்களை வலம் வருகிறார்கள்; தீர்த்தத் தலங்களுக்கு யாத்திரை செல்கிறார்கள். ராமன் தன் உடலைவிட்டு, மறு உலகில் சீதையுடன் சேர்ந்தான். சீதை, பரிசுத்தமான சீதை, ஆரம்பமுதல் இறுதிவரை துன்பத்திலேயே உழன்ற சீதை!

எவை எல்லாம் நல்லனவோ, எவை எல்லாம் பரிசுத்த மானவையோ, எவை எல்லாம் புனிதமானவையோ அவை அனைத் தும் சீதை என்றே இந்தியாவில் போற்றப்படுகிறது. பெண்களி லுள்ள பெண்மை எதுவோ அதுவே சீதை. சீதை ஆரம்பம் முதல் கடைசிவரை பொறுமையுடன், துன்பத்தையே அனுபவித்து, என்றும் விசுவாசமாக, பரிசுத்தமாக விளங்கிய மனைவி. அவ்வளவு துன்பங்களை அனுபவித்தும் ராமன்மீது கடிந்து ஒரு சொல்லும் சொல்லாதவள். தான் பெற்ற துன்பத்திற்கு எதிராகத் துன்பம் செய்யாதவள் சீதை. ‘சீதையாக விளங்குங்கள்!’

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 19. ராமாயணம்: சில குறிப்புகள்