பயங்கரவாதத்திற்கு சுவாமி விவேகானந்தரின் தீர்வு

கி.பி.2000 செப்டம்பர் 11-ஆம் தேதி நியூயார்க்கில் பயங்கரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அது தொடர்பாக, 2002, செப்டம்பர் 11-இல் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பல்வேறு மதத்தினர் கலந்து கொண்ட சர்வ சமயப் பேரவையில் சுவாமி கௌதமானந்தர் ஆற்றிய உரை இது.

பயங்கரவாதத்திற்கு சுவாமி விவேகானந்தரின் தீர்வு

2000செப்டம்பர் 11- இல் நியூயார்க் கில் நடந்த துயரமான நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது பரிவைத் தெரிவிக்கவே நாம் இங்கு கூடியுள்ளோம். லட்சக்கணக்கான கற்றறிந்த இந்தியர்களின் மனதில் இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்.

இதே தேதியில் (செப்டம்பர் 11) அமெரிக்காவில் நிகழ்ந்த மற்றொரு அற்புத நிகழ்ச்சியையும் முதலில் நினைவுறுத்த விரும்புகிறேன். அது 1893-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வமத மகா சபைக் கூட்டத் தில் சுவாமி விவேகானந்தர் தோன்றிய நாள்.

ஆச்சரியம் என்னவென்றால் அன்று சகிப்புத் தன்மை , சர்வசமய சமரசம் என் பவை பற்றியே பெரும்பாலும் சுவாமிஜி பேசினார்.

”நாங்கள் (இந்தியர்கள்) எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நம்புவதோடு, அனைத்து மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ள வும் செய்கிறோம்” என்று சுவாமிஜி அன்று அமெரிக்கர்களிடம் கூறினார்.

‘ஆறுகள் வெவ்வேறு இடங்களில் தோன்றினாலும், அவை அனைத்தும் கடலில் கலப்பது போல மனிதர்கள் அவரவர் மன இயல்புக்கேற்ப, குறுக்குப் பாதையையோ, நேரான பாதையையோ, எதை ஏற்றுக் கொண்டாலும் அவை அனைத்தும், இறைவா, உன்னையே அடைகின்றன’ என்ற கருத்துள்ள, பல நூற்றாண்டுகளுக்கு முன், புஷ்பதந்தரால் எழுதப்பட்ட சிவ மஹிம்ன ஸ்தோத் திரத்தை மேற்கோள் காட்டி அன்று சுவாமிஜி பேசினார்.

சுவாமிஜி தமது சொற்பொழிவைச் சிறப்பான கருத்தாழம் நிறைந்த வார்த்தை களோடு முடித்தார்.”

நியூயார்க்கில் நடந்த துயர நிகழ்ச்சி யின் பின்னால் எந்தெந்த சிந்தனைகள் வேலை செய்தன என்பதை நாம் இனி மேல்தான் முழுமையாகக் கண்டறிய வேண்டும். தீவிர மதவெறியும், மற்ற தத்துவங்களையெல்லாம் அற்பமாக நினைத்து, தன்னுடைய கருத்து ஒன்றே உலகில் இருக்க வேண்டும் என்ற வெறியுமே இந்தக் கோழைத்தனத்திற்குப் பின்னணி.

எளிதில் எதுவும் பதியக்கூடிய இளைஞர்களின் மனங்களில் இத்தீவிர வாதம் வளர்க்கப்பட்டு, நியூயார்க், உலக வர்த்தக மையத்தைத் தகர்க்கும் அளவுக்கு அவர்களைக் கருவியாகப்பயன்படுத்தியுள்ளது என்பதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள் மூலம் அறிந்தோம்.

இந்த மதவெறி காரண காரியங்களை அறியும் தன்மையை விரட்டியடித்து, இளைஞர்களை மிருகங்களைப் போல மட்டுமல்லாமல் இயந்திர மனிதனாகவே வேலை செய்ய வைத்துவிடுகிறது.

பயங்கரவாதம் என்ற இயந்திரத்தின் எரிபொருள் மதவெறியே. மக்களுக்கு வாழ்க்கையில் ஆன்மீக உணவு கிடைக் காதபோது மதவெறி ஏற்படுகிறது.

ஆன்மீக உணவு என்பது என்ன? மனிதனை, அவன் பிரம்மாண்டத்திலும் இறைவனிடத்திலும் ஒன்றி இருப்பவன் என்பதை உணர வைக்கவும், மனித குலத்தையும் இறைவனையும் நேசிக்கவும் வழிகாட்டும் மார்க்கம்தான், ஆன்மீக உணவு என்பது.

மனித சமுதாயத்தின் புராதனமான புனித நூல்களான வேதங்களில் ரிஷிகள் ‘படைப்பு முழுவதும் இறைவனே‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம -‘ என்று கூறுகிறார்கள். ஒவ்வோர் உயிரிலும் தெய்விகம் அடிப்படையானதாகவும், பிரிக்க முடியாததாகவும் இருக்கிறது என்பது இதன் பொருள்.

அதனாலேயே சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தமது பல சொற்பொழிவு களிலே மனிதனின் தெய்விகத்தை மீண்டும் மீண்டும் உறுதிபடக் கூறினார். பூமியில் படைக்கப்பட்ட தெய்விகம் நிறைந்தவர் களைப் பாவிகள் என்பதா? ஒரு மனிதனைப் பாவியென அழைப்பதுதான் மாபெரும் பாவம் என்று அவர் முழங்கினார்.

மனிதன் தெய்விகமானவன் என்ற கருத்து, நமது பள்ளிகளிலும் கல்லூரி களிலும் மட்டுமல்ல, கள்ளம்கபடமற்ற மனங்கள் ஆயிரக்கணக்கில் கூடும் சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் பௌத்த விஹாரங்களிலும் போதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களும் ஆண்களும் இனம், அறிவு, சக்தி, செல்வம் இவற்றிற்கு அப்பாற்பட்ட நன் மதிப்பையும், பெருமையும் பெறுவார்கள். மற்றவர்களைத் துன்புறுத்துவது என்பது, அது எந்தக் காரணத்திற்காக இருந்தாலும் – எவ்வளவு கொடுமையானது என்ற நினைப்பு அப்போதுதான் அவர்களுக்குத் தோன்றும். அதன் பிறகே வன்முறை ஒட்டு மொத்தமாகச் சமுதாயத்திலிருந்து வேரோடு களைந்து எறியப்படும்.

மிகச் சிறந்த தொழில் மற்றும் அறிவியல் கல்வி பெற்றுவரும் இந் நாளிலும் நம் மக்களிடம் சக மனிதர் களிடமோ, இறைவனிடமோ அன்பு, மரியாதை போன்றவை காணப்பட வில்லை . இதுவே நம்முடைய அரசியல் வாதிகளையும், அறிவியல் வல்லுநர் களையும் அணு ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது. ஹிட்லர் செய்தது போலவும், செப்டம்பர் 11-ல் செய்யப் பட்டது போலவும் சக மனிதர்களைக் கூட்டம் கூட்டமாக அழிக்கும் திட்டங் களில் ஈடுபட வைக்கிறது. இதுவே என் கருத்து. என் சக சிந்தனையாளர்களுடைய கருத்தும் இதுவாகத்தான் இருக்கும்.

மக்களை மூளைச்சலவை செய்யும் ஜிஹாத் (சமயப் போர்) போன்ற பல்வேறு முகமூடிகளுடன் வரும் விரும்பத்தகாத சிந்தனைகளுக்கு இரையாகிவிடாமல் நம் சகோதரர்களைப் பாதுகாக்க, நல்ல அறிவுரைகளைப் போதிக்க வேண்டிய ஓர் அவசரம் தோன்றியுள்ளது. இந்த விழிப் புணர்ச்சியே, என்னிடமும் மற்றும் எல்லா நாட்டு மக்களிடையேயும் இந்நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ள தாக்கமாகும்.

ஏழைகளும் புறக்கணிக்கப்பட்ட வர்களுமே பெரும்பாலும் தீவிரவாதப் பயிற்சி முகாம்களில் சேர்கிறார்கள். தன் இனத்தைச் சாராதவர்களைக் கொல்வதன் மூலம் சொர்க்கமும், அதன் முடிவில்லாத இன்பமும் அவர்களுக்கு வெகுமதியாக இறைவன் அளிப்பார் என அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

பொதுவாக மக்களுக்கு அடிப்படை யான சுதந்திரமும் ஜனநாயகமும் இல்லாத இடங்களிலேயே இவை சாத்தியம். ஜனநாயக விரோதிகளுக்கும், போலி ஜனநாயகவாதிகளுக்கும் உதவுவதை நாம் நிறுத்த வேண்டும். நமது பெண்களையும், ஆண்களையும் வல்லுநர்களாக மட்டு மின்றி, நல்லவர்களாகவும் ஆக்கக்கூடிய அர்த்தமுள்ள கல்வியைக் கொடுக்க உறுதியாக முயல வேண்டும். அத்தகைய கல்வி அறிவியல் திறமைகளுடன் ஆன்மீக விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும்.

நல்லவை என்பதன் இலக்கணமாக, உண்மை , உலகளாவிய சகோதரத்துவம், உதவும் பண்பு, மொத்த மனித சமுதாய மும் ஒரே குடும்பம் என்ற உறுதி, மற்றவரைத் துன்புறுத்துவது தமக்கே செய்துக் கொள்ளும் தீங்கு என்ற மனப் பான்மை போன்றவற்றைக் கூறலாம்.

”எங்களுடைய எல்லா சகோதரர்களுக்கும், அவர்கள் எங்கிருந்தாலும் அன்பையும் சகோதரத்துவத்தையும் அவர்களிடையே பரப்பும் உறுதியையும் சக்தியையும் எங்களுக்கு அருள்வாயாக!” என்பதுதான் இன்று இறைவனிடம் நான் வேண்டும் பிரார்த்தனை.