கே: சுவாமிஜி, மேலை நாட்டு மதங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

விவேகானந்தரிடம் கேளுங்கள்…

நமது கேள்விகளுக்கு;  சுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி: 

‘சுவாமி, மேலை நாட்டு மதங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?’

சுவாமிஜியின்  பதில்:

 ‘இந்த உலகில் மதங்கள் என்று கொள்ளத்தக்க எல்லா மதங்களுக்கும் ஆதாரமாக இருக்கக்கூடிய ஒரு தத்துவத்தையே நான் போதிக்கிறேன். எல்லாவற்றையும் அன்போடு ஆதரிப்பது தான் என் நோக்கம். என் உபதேசம் எதற்கும் பகை அல்ல. நான் என் கவனத்தைச் செலுத்துவது தனிமனிதனிடம். அவனை வலிமையுடையவனாக்கி அவனது தெய்வீகத் தன்மையை அவனுக்கு உணர்த்துகிறேன். தங்களுக்குள் ஒளிரும் தெய் வீகத்தை உணரும்படி ஒவ்வொருவரையும் கூவி அழைக்கிறேன். தெரிந்தோ, தெரியாமலோ ஒவ்வொரு மதத்தின் லட்சியமும் இதுதான்.’

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 6, Chapter II. பேட்டிகள், Topic 5. லண்டனில் ஓர் இந்து யோகி.