இந்து மதத்திலிருந்து விலகியவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாமா?

விவேகானந்தரிடம்கேளுங்கள்…

நமதுகேள்விகளுக்கு;  சுவாமிஜியின்பதில்கள்.

கேள்வி: இந்து மதத்திலிருந்து விலகியவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாமா?

சுவாமிஜி: நிச்சயமாகச் சேர்த்துக் கொள்ளலாம், சேர்த்தேயாக வேண்டும். (ஒரு கணம் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு) இல்லாவிட்டால் நாம் எண்ணிக்கையில் குறைந்து விடுவோம். முகமதியர்கள் நம் நாட்டிற்கு வந்தபோது நாம் அறுபது கோடி பேர் இருந்ததாக முகமதிய வரலாற்று ஆசிரியர்களுள் காலத்தால் முந்தியவரான ஃபெரிஷ்டா (Ferishta) கூறுகிறார். இப் போது அது இருபது கோடியாகி விட்டது. ஒருவன் இந்து மதத்தை விட்டு விலகு வானானால் நமது எண்ணிக்கையில் ஒன்று குறைவதுடன் நமது எதிரிகளில் ஒருவன் அதிகமாகிவிடுகிறான் அல்லவா?

முகமதிய, கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பெரும்பாலான இந்தியர்கள் வாளுக்கு அஞ்சியே சேர்ந்திருக்க வேண்டும், அல்லது அப்படிச் சேர்ந்தவர் களின் மரபில் தோன்றியவர்களாக இருக்க வேண்டும். இவர்களை எந்தவிதமான துன்பத்திற்கும் ஆளாக்குவது சரியல்ல என்பது தெளிவு. பிறவியிலேயே பிற மதத்தவராக இருப்பவர்களைப்பற்றி நீங்கள் கேட்கலாம். ஆனால் அவர்களும் கூட்டம்கூட்டமாக பண்டைக் காலத்தில் மதமாற்றம் செய்யப்பட்டவர்களே. அது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இசைந்த மனத்துடன் தாய் மதம் திரும்புபவர்களுக்குப் பரிகாரச் சடங்குகள் வேண்டும். ஆனால் காஷ்மீர், நேபாளம் போன்ற பகுதிகளில் படையெடுப்பின் காரணமாகப் பிற மதங்களைத் தழுவியவர் களுக்கும், புதிதாக நமது மதத்தில் சேர விரும்புபவர்களுக்கும் எந்தப் பரிகாரச் சடங்கும் கூடாது. (எழுந்திரு! விழித்திரு! , 8.84-85.)

பிரார்த்தனையால் என்ன பயன்?

விவேகானந்தரிடம் கேளுங்கள்

நமது கேள்விகளுக்குசுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி

கே: ‘பிரார்த்தனையால் என்ன பயன்?’

சுவாமிஜியின் பதில்:

ப: ‘பிரார்த்தனையால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக விழிப்படைகின்றன. தன்னுணர்வுடன் பிரார்த்தனை செய்தால் எல்லா விருப்பங்களும் நிறைவேறும்; உணர்வற்ற நிலையில் செய்தால் பத்தில் ஒன்று ஒருவேளை நிறைவேறலாம். அத்தகைய பிரார்த்தனை சுயநலமானது, அதனை விட்டுவிட வேண்டும்.’

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 6,  Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)

இறைவன் மனிதனாக வரும்போது அவரை எப்படி அறிந்து கொள்வது?

விவேகானந்தரிடம் கேளுங்கள்

நமது கேள்விகளுக்குசுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி

கே: இறைவன் மனிதனாக வரும்போது அவரை எப்படி அறிந்து கொள்வது?’

சுவாமிஜியின் பதில்:

ப: ‘மக்களின் விதியை மாற்றும் வல்லமை பெற்றிருந்தால் அவர் இறைவன். ஒரு சாது எவ்வளவுதான் முன்னேறியவராக இருந்தாலும் இந்த ஈடிணையற்ற நிலையை அடைய முடியாது. ஸ்ரீராமகிருஷ்ணரை இறைவனாக உணர்ந்த யாரையும் நான் காணவில்லை. நாங்கள் ஏதோ சிலவேளைகளில் மங்கலாக உணர்கிறோம், அவ்வளவுதான். அவரை இறைவனாக உணர் வதும், அதேவேளையில் உலக வாழ்க்கையில் பற்றுடன் இருப்பதும் முரணானது.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 6,  Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)

மக்களுக்கு சேவை செய்வது முக்தியை தருமா?

விவேகானந்தரிடம் கேளுங்கள்

நமது கேள்விகளுக்குசுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி

கே: ‘ஜீவ சேவை மட்டும் முக்தி தருமா?’

சுவாமிஜியின் பதில்:

ப: ‘ஜீவ சேவை நேரடியாக முக்தி தராது; உள்ளத்தைத் தூய்மை செய்வதன்மூலம் மறைமுகமாக முக்தி தரும். ஒரு காரியத்தைச் சரியாகச் செய்ய வேண்டுமானால், அந்த வேளை யில் அந்த வேலையே எல்லாம் என்று கருதி அதில் ஈடுபட வேண்டும். எந்தப் பிரிவைப் பின்பற்றினாலும், ஊக்கம் இல்லை யானால் பயனில்லை. நிஷ்டை வேண்டும், இல்லாவிடில் எந்தப் பயனும் இல்லை. இப்போது கர்மத்தில் கருத்துச் செலுத்துவது அவசியமாக உள்ளது.’

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 6,  Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)

சிலவேளைகளில் ஜபம் சோர்வைத் தருகிறது. அப்போது ஜபத்தைத் தொடர்வதா, நல்ல நூல்களை வாசிக்கலாமா?

விவேகானந்தரிடம் கேளுங்கள்

நமது கேள்விகளுக்குசுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி

கே: ‘சிலவேளைகளில் ஜபம் சோர்வைத் தருகிறது. அப்போது ஜபத்தைத் தொடர்வதா, நல்ல நூல்களை வாசிக்கலாமா?’ 

சுவாமிஜியின்பதில்:

ப: ‘ஜபத்தினால் சோர்வு இரண்டு காரணங்களால் ஏற்பட லாம் ஒன்று, மூளை களைத்துவிடுவதால்; இரண்டு, சோம் பலினால். முதல் காரணமாயிருந்தால் ஜபத்தைச் சற்று நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் இந்த நிலையில் ஜபத்தைத் தொடர்ந் தால் போலிக் காட்சிகளில் மயங்க நேரும், சிலவேளைகளில் பைத்தியமும் பிடிக்கலாம். சோம்பலினால் ஏற்பட்ட சோர்வு என்றால், அதற்குப் பரிகாரம் மனத்தைப் பலவந்தப்படுத்தி, ஜபத்தில் தொடர்ந்து ஈடுபடச் செய்வதே.’ 

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 6,  Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)

தியானம் செய்யப் பூஜையறை தேவையில்லை என்று சிலர் சொல்கின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை ?

விவேகானந்தரிடம் கேளுங்கள்

நமது கேள்விகளுக்குசுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி

கே: ‘தியானம் செய்யப் பூஜையறை தேவையில்லை என்று சிலர் சொல்கின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை ?’ 

சுவாமிஜியின்பதில்:

ப: ‘இறைவனது சான்னித்தியத்தை உணர்ந்தவர்களுக்குத் தேவையில்லை, மற்றவர்களுக்கு வேண்டும். உருவக் கடவுளைக் கடந்து, இறைவனின் அருவ நிலையைத் தியானிக்க வேண்டும். ஏனெனில் உருவக் கடவுள் வழிபாடு முக்தியைத் தர முடியாது. ஆனால் அதன்மூலம் உலகச் செல்வங்களைப் பெறலாம். தாயை வழிபடுபவன் வெற்றி அடைகிறான், தந்தையை வழிபடுபவன் சொர்க்கத்தை அடைவான். சாதுவை வழிபடுபவன் ஞானத்தை யும் பக்தியையும் பெறுவான்.’ 

உருவ வழிபாட்டின்மூலம் ஒருவன் முக்திபெற முடியுமா?

விவேகானந்தரிடம் கேளுங்கள்

நமது கேள்விகளுக்குசுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி

கே: ‘உருவ வழிபாட்டின்மூலம் ஒருவன் முக்திபெற முடியுமா?’

சுவாமிஜியின்பதில்:

ப: ‘உருவ வழிபாடு நேரடியாக முக்தி தராது. அது ஒரு மறைமுகக் காரணம், முக்திப் பாதையில் உதவக்கூடிய ஒன்று. உருவ வழிபாட்டைக் கண்டிக்கக் கூடாது. பலருடைய விஷயத் தில், அத்வைத நிலையை அடைய இது அவர்களுடைய உள்ளத்தைப் பண்படுத்துகிறது. அத்வைத நிலை மட்டுமே பூரண நிலையை அளிக்க முடியும்.’

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 6,  Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)

எல்லையற்ற பரம்பொருளான கடவுள் எப்படி எல்லைக்கு உட்பட்ட மனிதனாக அவதரிக்க முடியும்?

விவேகானந்தரிடம் கேளுங்கள்

நமது கேள்விகளுக்குசுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி: 

கே: ‘எல்லையற்ற பரம்பொருளான கடவுள் எப்படி எல்லைக்கு உட்பட்ட மனிதனாக அவதரிக்க முடியும்?’ 

சுவாமிஜியின்பதில்:

ப: ‘கடவுள் எல்லையற்றவர் என்பது உண்மைதான். ஆனால் அவர் எல்லையற்றவர் என்பது நீங்கள் புரிந்துகொண்ட விதத்தில் அல்ல. உலகத்தில் நீங்கள் காண்கின்ற ஏதோ ஒரு பொருளைப்போல் அவரும் பரந்திருப்பதாகக் கொண்டு, எல்லையற்றது என்பதற்குப் பொருளைக் குழப்பிக் கொள் கிறீர்கள். கடவுள் மனித உருவில் அவதரிக்க முடியாது என்று சொல்லும்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பரந்த எல்லை யற்ற தூலப் பொருளாகக் கடவுளை நினைக்கிறீர்கள். அவ்வளவு பெரிய பரந்த ஒன்று இவ்வளவு சிறிய உடலில் எவ்வாறு அடங்கும் என்பதே உங்கள் கேள்வி. ஆனால் எல்லையற்ற பரம்பொருள் என்கிறபோது தனி ஆன்மாவையே குறிப்பிடு கிறோம். அந்த ஆன்மா மனித உருவத்தில் தோன்றுவதா – துளியளவுகூடப் பாதிக்கப்படுவதில்லை .’

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 6,  Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)

இந்தியாவில் வேலை செய்வதற்கு எத்தகைய முறையைப் பின்பற்ற வேண்டும்?

விவேகானந்தரிடம் கேளுங்கள்…

நமது கேள்விகளுக்கு;  சுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி: 

‘இந்தியாவில் வேலை செய்வதற்கு எத்தகைய முறையைப் பின்பற்ற வேண்டும்?’

சுவாமிஜியின்  பதில்:

 ‘முதலில் மக்களைச் செயல்முறைக்குப் பயிற்சி அளிக்க வேண்டும், பலசாலிகளாக்க வேண்டும். இத்தகைய சிங்கங்கள் ஒரு டஜன் இருந்தால் போதும், உலகையே வென்றுவிடலாம்; ஆடுகள் பல கோடி இருந்தாலும் பலனில்லை. இரண்டாவதாக, எப்படிப்பட்ட மாமனிதராக இருந்தாலும், அந்தத் தனிமனிதரை லட்சியமாகக் கொள்வதை ஊக்குவிக்கக் கூடாது.’

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 6,  Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)

கே: ‘புதிய பாரதத்தை உருவாக்குவதில் ராமகிருஷ்ண மிஷனின் பங்கு என்ன?’

விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு;  சுவாமிஜியின்  பதில்கள்.

கேள்வி: 

 ‘புதிய பாரதத்தை உருவாக்குவதில் ராமகிருஷ்ண மிஷனின் பங்கு என்ன?’

சுவாமிஜியின்  பதில்: 

‘இந்த மடத்திலிருந்து நற்பண்புகள் மிக்கோர் பலர் புறப்பட்டு, உலகம் முழுவதையும் ஆன்மீகப் பெருவெள்ளத்தால் நிரப்புவார்கள். இந்த ஆன்மீகப் பேரெழுச்சியைத் தொடர்ந்து பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு பிராமண, க்ஷத்திரிய, வைசியர்கள் உருவாகுவார்கள். சூத்திர ஜாதியே இருக்காது. அவர்களுடைய வேலையை எந்திரங்கள் செய்யும். இந்தியாவின் இன்றைய தேவை க்ஷத்திரிய பலமே.’

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 6,  Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)