15. வெளிநாட்டில் ஊழியம்

15. வெளிநாட்டில் ஊழியம்

இவ்வுலகம் தொழில் பிரிவினை என்னும் தத்து வத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கி றது. ஒருவனிடமே எல்லாப் பொருள்களும் இருக்கும் என்று எண்ணுதல் வீணாகும். எனினும் நாம் எவ் வளவு குழந்தைப் புத்தியுள்ளவர்களாயிருக்கிறோம்? குழந்தை தன் அறியாமையால் இப்புவியில் விரும்பத் தக்க பொருள் தன்னிடமுள்ள பொம்மை ஒன்றே எனக் கருதுகிறது. அவ்வாறே இவ்வுலக அதிகாரம் மிகப்படைத்த ஒரு தேயத்தார், அவ்வதிகாரம் ஒன்றே விரும்பத்தக்க பொருளென்றும், முன்னேற்றம், நாகரிகம் என்பவையெல்லாம் அது தானென் றும் கருதுகிறார்கள். அவ்வதிகாரம் பெறாத, அதில் பற்று மில்லாத வேறு சாதியார் இருப்பின் அவர்கள் உயிர் வாழ்வதற்கே தகுதியற்றவர்களென்றும், அவர்களுடைய வாணாள் வீண் என்றும் எண்ணு கிறார்கள்! இதற்கு மாறாக, வேறொரு சாதியார் வெறும் உலகாயத நாகரிகம் அணுவளவும் பயனற்ற தென்று எண்ணுதல் கூடும். ஒருவன் இவ்வையகத்தி லுள்ள எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாயினும், பாரமார்த்திகச் செல்வம் மட்டும் பெறாதவனாயின் அவன் பாக்கியம் பெறாதவனே என்னும் வாக்கியம் கீழ் நாட்டில் எழுந்தது. இது கீழ் நாட்டு இயற்கை; முன்னது மேல் நாட்டு இயற்கை. இவ்விரண்டுக்கும் தனித்தனியே மேன்மையும், மகிமையும் உண்டு. இவ்விரண்டு இலட்சியங்களையும் கலந்து சமரசப் படுத்தலே தற்போது செய்ய வேண்டிய காரியமா கும். மேனாட்டுக்குப் புலனுலகம் எத்துணையளவு உண்மையோ அத்துணையளவு கீழ்நாட்டுக்கு ஆத்ம உலகம் உண்மையாகும். கீழ் நாட்டானைப் பகற் கனவு காண்பவனென்று மேனாட்டான் எண்ணுகி றான். அவ்வாறே மேனாட்டானைக் கனவு காண்பவ னென்றும், இன்றிலிருந்து நாளை அழியக்கூடிய விளை யாட்டுக் கருவிகளை சாசுவதமெனக் கருதி விளையாடு பவனென்றும் கீழ்நாட்டான் நினைக்கிறான். இன்றோ நாளையோ விட்டுப் போகவேண்டிய ஒரு பிடி மண்ணுக்காக வயதுவந்த ஸ்திரீ புருஷர்கள் இவ்வளவு பாடுபடுகிறார்களே என்றெண்ணி அவன் நகையாடுகிறான். இவ்விருவரும் ஒருவரையொருவர் கனவு காண்பவரென்று கருதுகிறார்கள். ஆனால் மக்கட்குலத்தின் முன்னேற்றத்துக்கு மேனாட்டு இலட்சியத்தைப் போல் கீழ் நாட்டு இலட்சியமும் அவசியமேயாகும். கீழ் நாட்டு இலட்சியமே அதிக அவசியமானதென்றும் நான் கருதுகிறேன்.

மேனாட்டார் பாரமார்த்திக உயர் ஞானத்தை அறிந்து கொள்வதற்கு நீண்டகாலம் ஆக வேண் டும். பவுன் ஷில்லிங் பென்ஸே அவர்களுக்கு எல் லா மாகும். ஒரு மதமானது அவர்களுக்குப் பணம், சுகம், அழகு அல்லது தீர்க்காயுளை அளிக்குமானால் எல்லோரும் அதனிடம் ஓடுவார்கள்; இல்லாவிடில் அதன் அருகில் நெருங்க மாட்டார்கள்.

எவ்வித வளர்ச்சிக்கும் முதன்மையாக வேண் டுவது சுதந்திரம். உங்கள் முன்னோர்கள் ஆன்மாவுக் குப் பூரண சுதந்திரமளித்தார்கள். அதன் பயனாக மதம் வளர்ச்சி பெற்றது. ஆனால் அவர்கள் உடலை எல்லாவகைப் பந்தங்களுக்கும் உட்படுத்தினார்கள். ஆதலின் சமூகம் வளரவில்லை. மேனாட்டில் இதற்கு நேர் மாறாக சமூகத் துறையில் எல்லாச் சுதந்திரமு மளித்து, சமயத்துறையில் சுதந்திரமேயில்லாமல் செய்யப்பட்டது.

மேனாட்டு சமூக முன்னேற்றத்தின் மூலமாகவே பாரமார்த்திக ஞானம் பெற விரும்புகிறது. வேறு வழியில் வரும் பாரமார்த்திகம் அதற்குத் தேவை யில்லை. கீழ் நாடோ பாரமார்த்திக அபிவிருத்தியின் மூலமாகவே சமூக அதிகாரம் பெற விழைகிறது. வேறு வகையான சமூக முன்னேற்றம் அதற்கு வேண்டாம். பார்

இயந்திரங்கள் மானிடர்க்கு என்றும் மகிழ்ச்சி அளித்ததில்லை, என்றும் மகிழ்ச்சியளிக்கப் போவது மில்லை. அவை மகிழ்ச்சியளிக்கும் என்று நமக்குச் சொல்வோன் இயந்திரத்தில் இன்பமிருப்பதாகச் சொல்பவனாகிறான். உண்மையில் இன்பம் எப்போ தும் நமது உள்ளத்தில் இருக்கிறது. எனவே மன தை அடக்கிய மனிதன் ஒருவனே உண்மை மகிழ்ச்சியடைதல் கூடும். மற்றவர்கள் அடைய முடியாது. இயந்திர சக்தி என்பது தான் என்ன? கம்பியின் மூலம் மின்சார சக்தியை அனுப்பக் கூடிய ஒருவனைப் பெரியவனென்றும், மேதாவி என்றும் ஏன் கருத வேண்டும்? அதைவிடக் கோடானுகோடி மடங்கு பெரிய காரியங்களை இயற்கை ஒவ்வொரு கணமும் செய்யவில்லையா? அந்த இயற்கையை ஏன் வணங் கிப் போற்றுதல் கூடாது? இவ்வுலகம் முழுவதிலும் உன் ஆணை செல்லலாம்; இந்த புவனத்திலுள்ள ஒவ்வோர் அணுவையும் நீ வயப்படுத்திவிடலாம்; ஆயினும் பயன் என்ன? உன்னை நீ வெற்றிகொண் டிருந்தாலன்றி, உனக்குள் நீ இன்பமுறும் சக்தி பெற்றிருந்தாலன்றி, உண்மை மகிழ்ச்சியடைய முடியாது.

நமது துன்பங்களையெல்லாம் என்றைக்கும் அழித்துவிடவல்லது ஆத்ம ஞானம் ஒன்றேயாம். மற்ற ஞானங்கள் எல்லாம் சிறிது காலத்திற்கு நமது தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்; ஆனால் ஆத்ம ஞானம் உண்டாகும் போது தான் பூரண உள்ள நிறைவு ஏற்பட்டுத் தேவை உணர்வை அடியோடு நசித்து விடுகிறது.

உடல் வலிமையினால் மிகப் பெருங் காரியங் கள் செய்யப்படுகின்றன. மூளைத் திறமையினால், பௌதிக சாஸ்திரங்களின் துணைபெற்ற இயந்திர சாதனைகளைக் கொண்டு இன்னும் அதி ஆச்சரிய மான வினைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் இவை யெல்லாம், ஆத்ம சக்தியின் மூலம் இவ்வுலகில் செய்யக்கூடிய மகத்தான காரியங்களுக்கு முன்னால் அற்பமானவையாகும்.

மேனாட்டு நாகரிகத்தின் பகட்டையும் பளபளப் பையும் நான் அறிவேன். அதனின்றும் வெளித் தோன்றும் ஆச்சரியமான புற சக்திகளையும் அறி வேன். ஆயினும் இந்த மேடை… மீது நின்று இவை யெல்லாம் வீண்; வெறும் பிரமை; உருவெளித் தோற்றம்; ஆண்டவன் ஒருவனே மெய்ப்பொருள்” என்று நான் கூறுகிறேன்.

மேனாட்டாராகிய நீங்கள் உங்களுக்குரிய துறை களில், அதாவது இராணுவம், அரசியல் முதலிய வற்றில் காரியவாதிகளாயிருக்கிறீர்கள். இத்துறை களில் கீழ் நாட்டான் செயல் திறன் அற்றவனாயிருக்க லாம். ஆனால் அவன் தனக்குரிய சமயத்துறையில் சிறந்த காரிய வாதியாய் விளங்குகிறான்.

”ஹுர்ரா” என்ற கோஷத்துடன் பீரங்கி யின் வாயில் குதிக்க உங்களுக்குத் தைரியமுண்டு. தேச பக்தியென்னும் பெயரால் நீங்கள் தீரச் செயல்கள் புரிவீர்கள். தேசத்திற்காக உயிர் கொடுக் கவும் சித்தமாயிருப்பீர்கள். இது போன்றே, கீழ் நாட்டார் கடவுளின் நாமத்தைச் சொல்லிக்கொண்டு தீரச் செயல்கள் புரிவார்கள்.

இக வாழ்க்கையில் சுகாநுபவம் மேனாட்டு இலட்சியமாயிருப்பது போல் உயரிய ஆத்மசாதனம் எங்கள் இலட்சியமாயிருக்கின்றது. ”சமயம் என்பது வெறும் வாய்ப் பேச்சன்று; இவ்வுலக வாழ்க்கை யில் முற்றும் அனுஷ்டித்தற்குரியது” என்று நிரூ பித்தல் கீழ் நாட்டின் இலட்சியம்.

ஒரு மனிதன் எவ்வளவு பொருள் படைத்தல் கூடும் என்னும் பிரச்னைக்கு முடிவு காண மேனாட்டில் முயன்று வருகிறார்கள். இங்கு நாம் எவ்வளவு சொற்பத்தில் ஒருவன் வாழ்க்கை நடத்தக் கூடும் என்று கண்டு பிடிக்க முயன்று வருகிறோம்.

ஒரு நாட்டார் நிலைபெற்று வாழவும், மற்ற வர்கள் அழிந்து படவும் காரணமாயிருப்பதெது? வாழ்க்கைப் போராட்டத்தில் எது மிஞ்சி நிற்கும்? அன்பா, பகைமையா? துறவொழுக்கமா, சுகா நு பவமா? சடமா, ஆன் மா வா? எது நிலைக்கும்…. துறவு, தியாகம், அஞ்சாமை, அன்பு இவையே நிலைக்குமென்பது நமது முடிவு.

ஆசியாவின் போதனை சமய போதனையாகும். ஐரோப்பாவின் படிப்பினை அரசியல் படிப்பினை யா கும்.

அரசியலிலும், பௌதிக சாஸ்திர ஆராய்ச்சி யிலும் மேனாடு தீரர்களுக்குப் பிறப்பளித்திருக்கிறது. கீழ்நாடு பாரமார்த்திகத் துறையில் பெரியோர்களைத் தந்திருக்கிறது.

கீழ் நாட்டான் இயந்திரம் செய்யக் கற்றுக் கொள்ள விரும்பினால் அவன் மேனாட்டானின் கால டியில் அமர்ந்து கற்றுக்கொள்ளல் தகுதியுடைத்தா கும். அவ்வாறே மேனாட்டான் ஆத்மாவைப்பற்றி யும், கடவுளைப்பற்றியும், சிருஷ்டி இரகசியங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினால் அவன் கீழ் நாட்டான் அடியின் கீழ் உட்கார்ந்து தெரிந்து கொள்ளல் வேண்டும்.

நமது சமயத்தின் மகத்தான உண்மைகளை உலகுக்கெல்லாம் எடுத்துரையுங்கள். உலகம் அவற் றிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

சமயப் பிரசாரம் செய்ய நீங்கள் வெளியே செல்ல வேண்டும். உலகிலுள்ள ஒவ்வொரு தேசத் தார்க்கும் ஒவ்வொரு ஜாதியாருக்கும் உங்கள் சமய உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும். இதுவே முத லில் செய்ய வேண்டிய வேலை.

நூற்றுக்கணக்கான வருஷங்களாய் மனிதனு டைய சிறுமையைப் பற்றிய கொள்கைகளையே ஜனங்கள் கேட்டிருக்கிறார்கள். ‘நீங்கள் வெறும் பூஜ்யங்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அவர்கள் ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்ளட்டும். தாழ்ந்தவனிலும் தாழ்ந்த மனிதனிடத்தும் கூட ஆத்மா உண்டென் றும் அதற்குப் பிறப்பிறப்பில்லையென்றும் அவர் களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

இந்தியாவின் ஆத்ம வித்தையினால் உலகை வெற்றி கொள்ள வேண்டும். நமது தேசீய வாழ்வு அவ்வெற்றியையே பொறுத்திருக்கிறது. அப்போது தான் நமது தேசீய வாழ்வு புத்துயிரும் புதிய பல மும் பெற்றுச் சிறந்து விளங்கும்.

நாம் வெளிப்புறப்பட வேண்டும். நமது பார மார்த்திக ஞானத்தினாலும், ஆத்ம வித்தையினாலும் உலகை ஜெயிக்க வேண்டும்; அல்லது இறந்துபட வேண்டும். வேறு வழி இல்லை.

சமயம், பாரமார்த்திகம் இவற்றின் வெற்றியே பாரத நாட்டின் வெற்றியென்பதாக இந்தியாவின் மகிமை வாய்ந்த சக்கரவர்த்தியான அசோகவர்த் தனர் கூறுயிருக்கிறார். உலகம் மற்றொரு முறையும் இந்தியாவினால் ஜெயிக்கப்படவேண்டும். இதுவே என் வாழ்க்கையின் கனவாகும். உங்களில் ஒவ்வொரு வரும் இக்கனவைக் கண்டு வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அக்கனவு மெய்யாகும் வரையில் நீங்கள் சோர்வடைந்து நிற்கக்கூடாது. பாரத நாடு இப்பூவுலக முழுவதையும் ஜெயித்தல் என்பதே நம் முன்னுள்ள மகத்தான இலட்சியமாகும். அதற்குக் குறைவான இலட்சியம் நமக்கு வேண்டாம். அந்த இலட்சியத்திற்கு நாம் ஒவ்வொருவரும் சித்தமாக வேண்டும். அதற்காக அரும்பாடு பட வேண்டும். அன்னிய நாட்டார் வந்து இந்நாடு முழுவதையும் தங்களுடைய சைன்ய மயமாக்கட்டும். அதைப் பொருட்படுத்த வேண்டாம். பாரதர்களே! எழுந் திருங்கள். உங்கள் பாரமார்த்திக ஆயுதத்தினால் உலகை வெற்றி கொள்ளுங்கள்.

உலகாயத நாகரிகத்தையும் அதனுடைய துன் பங்களையும் உலகாயதத்தினாலேயே ஒரு நாளும் ஜெயிக்க முடியாது. சைன்யங்கள் சைன்யங்களை ஜெயிக்க முயலும் போது அவை பல்கிப் பெருகி மக்களை மாக்களாக்குகின்றனவேயல்லாது வேறில்லை. மேனாட்டைப் பார மார்த்திகத்தினாலேயே வெற்றி கொள்ள வேண்டும். –

நீங்கள் பிறருக்கு அளிக்கக்கூடிய விலை மதிக்க வொண்ணாத பெருஞ்செல்வம் உங்களிடம் இருக் கிறது. அது தான் உங்கள் சமயம்; உங்கள் ஆத்ம வித்தை. மேனாட்டாருக்கு அச்செல்வத்தை அள்ளி வழங்குங்கள்.

14. இந்திய நாகரிகம்- அதைப் பாதுகாத்து வளர்த்தல்

14. இந்திய நாகரிகம்- அதைப் பாதுகாத்து வளர்த்தல்

அருவியொன்று இமாலயத்தில் உற்பத்தியாகி யுக யுகாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஓடத் தொடங்கியது எப்போதென்று யாருக்கும் தெரியாது. அந்த அருவியைத் தடுத்துத் திருப்பி அது உற்பத்தியான இடத்துக்குக் கொண்டு போக முடியுமெனக் கருதுகிறீர்களா? அம்முயற்சி சாத்தி யமானால் கூட நீங்கள் ஐரோப்பிய நாகரிகத்தை மேற்கொள்ளுதல் இயலாத காரியமாகும். ஐரோப் பிய நாகரிகம் பிறந்து வளரத் தொடங்கிச் சில நூற்றாண்டு காலமே ஆகிறது. அந்நாகரிகத்தையே மேனாட்டார் துறக்க இயலவில்லையென்றால், எவ் வளவோ நூற்றாண்டு காலமாக ஒளிவீசித் திகழ்ந்து வரும் உங்கள் நாகரிகத்தை நீங்கள் எங்ஙனம் கை விட இயலும்?

இந்தியாவில் நமது முன்னேற்ற மார்க்கத்தில் குறுக்கிடும் இரண்டு பெரிய தடைகள் இருக்கின்றன ஒன்று பழைய குருட்டு வைதிகம்; மற்றொன்று நவீன ஐரோப்பிய நாகரிகம். என்னைக் கேட்டால் இவ்வி ராண்டினுள் பழைய குருட்டு வைதிகமே மேல் என் பேன். பழைய வைதிகன் ஒருவன் அறியாமையில் மூழ்கியவனாயிருக்கலாம்; பயிற்சியற்றவனாயிருக்க லாம். ஆனாலும் அவன் ஆண் மகன்; அவனுக்கு நம்பிக்கையுண்டு; பலமுண்டு; அவன் தன் வலிமை கொண்டு தான் – நிற்கிறான். ஐரோப்பிய நாகரிக வயப்பட்ட மனிதனோ முதுகெலும்பற்றவன். அவன் பற்பல இடங்களிலிருந்தும் பகுத்தறிவின்றிப் பொறுக்கிய கருத்துக்களின் கலப்புப் பிண்டமாவான். இக்கருத்துக்களை அவன் ஜீரணித்துக் கொள்வதில்லை அவற்றின் சாராம்சத்தைக் கிரஹிப்பதில்லை, முரண் பட்ட அக்கருத்துக்களினால் அவன் உள்ளம் அமைதி யின்றி அலைக்கப் பெறுகின்றது.

ஐரோப்பிய நாகரிக வயப்பட்ட இந்தியன் நமது பழக்க வழக்கங்களில் சிலவற்றைத் தீமை யென்று சொல்கிறான். இதற்கு அவன் கூறும் கார ணம் யாது? ஐரோப்பியர்கள் அப்படிச் சொல்கிறார் கள் என்பது தான்! நான் இதற்கு ஒருப்படேன், இருந்தாலும், இறந்தாலும் நமது சொந்த பலங் கொண்டு நாம் நிற்றல் வேண்டும்.

இந்த நிதானமில்லாத பிராணிகள் (ஐரோப் பிய நாகரிகத்திலாழ்ந்த இந்தியர்கள்) இன்னும் தங் களுக்கென்று தனித்த நிலை ஒன்று எய்தவில்லை. அவர்களை என்ன வென்று நாம் அழைப்பது? ஆண் களென்றா, பெண்களென்றா, விலங்குகளென்றா?

நன்மைக்கோ, தீமைக்கோ, நமது உயிர் நிலை நமது மதத்தில் அமைந்திருக்கிறது. அதை உங்க ளால் மாற்ற முடியாது. மதத்தை அழித்துவிட்டு அதனிடத்திற்கு வேறொன்றைக் கொண்டுவரவும் முடியாது. பெரிதாக வளர்ந்துவிட்ட மரம் ஒன்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தில் பெயர்த்து நட்டு அங்கே உடனே வேர்கொள்ளச் செய்ய முடியுமா?

உண்ணலும், குடித்தலும், களியாட்டயர் தலுமே மனித வாழ்க்கையின் இலட்சியம் என்று இந்தியா வில் ஒருவன் போதனை செய்வானாயின்–இந்தச் சதி உலகையே ஆண்டவனாக்க முயல்வானாயின்,–அவன் உடனே பொய்யனாகிறான். இப்புண்ணிய பூமியில் அவனுக்கு இடமில்லை. இந்திய மக்கள் அவனுக்குச் செவிசாய்க்க ஒருப்படார்கள்.

மற்ற நாட்டாரின் ஸ்தாபனங்களை நான் நிந் திக்கவில்லை. அந்த ஸ்தாபனங்கள் அவர்களுக்கு நல் லவை; ஆனால் நமக்கு நல்லவையல்ல. அவர்களுக்கு உணவாயிருப்பது நமக்கு விஷமாகலாம். நாம் கற்று கொள்ள வேண்டிய முதற்பாடம் இதுவாகும்.

இந்தியாவை இங்கிலாந்தைப் போல் ஆக்கி விடப் புத்தியுள்ள மனிதன் எவனும் கருதமாட்டான். எண்ணத்தின் வெளித் தோற்றமாக அமைவதே உடம்பு. அவ்வாறே சமூக வாழ்வும் தேசீய உள்ளத்தின் வெளித் தோற்றமேயாகும். இந்தியா வில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் சிந்தனையி னால் சமூக வாழ்வு அமைந்திருக்கிறது. எனவே இந் தியாவை ஐரோப்பிய நாகரிகவயப்படுத்தல் இய லாத காரியம். அதற்காக முயலுதல் அறிவீனம்.

மேனாட்டார் நம்மினின்றும் வேறான சாஸ்தி ரங்களும், பரம்பரை தர்மங்களும் உடையவர்கள். அவற்றிற் கிணங்க அவர்கள் தற்போது ஒருவகை வாழ்க்கை முறையைப் பெற்றிருக்கின்றனர். நமக் குச் சொந்தமான பரம்பரை தர்மம் இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்த கர்மம் நமக்கு பின்னால் இருக்கிறது. எனவே நாம் நமது சொந்த வழியிலேயே செல்லக்கூடும். அதுவே இயற் கையாகும்.

நமது முன்னேற்ற மார்க்கத்திலே பல அபா யங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, உலகில் நம்மைத் தவிர வேறு ஜனங்கள் இல்லை யென்றெண் ணிக் கண்ணை மூடிக் கொள்வதாகும். பாரத நாட் டினிடம் எனக்கு அளவற்ற அன்புண்டு. நமது முன் னோர்களை நான் போற்றுகிறேன்; தேச பக்தியில் நான் குறைந்தவனல்லன். ஆயினும் மற்ற நாட் டாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உண்டென்பதை நான் ஒப்புக் கொண்டே தீரவேண்டும். எனவே, எல்லாருடைய காலடியிலும் உட்கார்ந்து உபதேசம் பெற நாம் சித்தமாயிருக்க வேண்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்வதற்குரிய சிறந்த பாடங்கள் உண்டு .

மேனாட்டிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண் டிய விஷயங்கள் பல இருக்கின்றன. மேனாட்டாரின் கலைகளையும், பூதபௌதிக சாஸ்திரங்களையும் அவர் களிடமிருந்து நாம் கற்றறிதல் வேண்டும். புற உல கைப்பற்றிய விஷயங்களையெல்லாம் அவர்களிட மிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஆனால் சமயத்திற்கும், பாரமார்த்திக ஞானத்திற்கும் அவர் கள் நம்மிடம் வரவேண்டியவர்களாவர்.

வெளி உலகத்துடன் தொடர்பின்றி நாம் உயிர் வாழ முடியாது. அப்படி வாழ முடியும் என்று எண்ணியது நமது மடமையாகும். அதற்குரிய தண் டனையை ஓராயிரம் ஆண்டு அடிமை வாழ்வு வாழ்ந்து நாம் அனுபவித்துவிட்டோம். நமது நிலையைப் பிற தேசத்தாரின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க நாம் வெளியே போகாததும், நம்மைச் சுற்றிலும் நடந்து வந்த காரியங்களைக் கவனியாததும், இந்தியர் தாழ் வடைந்ததற்கு ஒரு பெரிய காரணமாகும். இந்தி யர்கள் இந்தியாவை விட்டு வெளியே போகக்கூடா தென்பது போன்ற மூடக் கொள்கைகள் குழந்தைத் தனமானவை. அவற்றை மண்டையில் அடித்துவிட வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் வெளியே சென்று பிற நாட்டாரிடையே பிரயாணம் செய் கிறீர்களோ அவ்வளவுக்கு உங்களுக்கும் உங்கள் நாட்டுக்கும் நன்மையுண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன் பிருந்தே நீங்கள் அவ்வாறு செய்து வந்திருந் தால் இன்று இந்நிலையில் இருக்க மாட்டீர்கள். இந் தியாவை ஆள விரும்பிய ஒவ்வொரு நாட்டாருக்கும் அடிமையாகியிருக்க மாட்டீர்கள்.

என் மகனே! எந்த மனிதனாவது, எந்த தேச மாவது பிறரைப் பகைத்து உயிர் வாழமுடியாது. என்றைய தினம் இந்நாட்டில் மிலேச்சன் என்னும் வார்த்தையைச் சிருஷ்டித்தார்களோ, என்றைய தினம் பிறருடன் கலந்து பழகுவதை நிறுத்தினார் ளோ அன்றே இந்தியாவுக்கு அழிவு காலம் தோன் றிற்று. எனவே எச்சரிக்கை! அத்தகைய கொள்கை களை வளர்த்தல் வேண்டாம். வாயினால் வேதாந்தம் பேசுதல் எளிது, ஆனால் வேதாந்தத்தின் மிகச்சிறு போதனைகளையும் செயலில் கொணருதல் மிக அரிது.

நாம் யாத்திரை செய்ய வேண்டும். வெளி நாடுகளுக்குச் செல்ல வேண்டும். மற்ற நாடுகளில் சமூக வாழ்வு எவ்வாறு நடைபெறுகிறதென்று பார்க்க வேண்டும். பிற நாட்டாரின் மனப்போக் கைக் கவனித்து அவர்களுடைய சிந்தனைகளுடன் நாம் சுதந்திர மான தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் மீண்டும் ஒரு பெரிய ஜாதியாராக உயிர்த்தெழல் முடியும்.

உங்களுடைய பலங்கொண்டு நில்லுங்கள். ஆனால் கூடுமானவரை வெளியிலிருந்து வலிமை பெற்று அதை உங்களுடைய தாக்கிக் கொள்ளுங் கள். வெளி நாட்டார் ஒவ்வொருவரிடமிருந்தும் உங் களுக்கு உபயோகமான விஷயங்களைக் கற்றுக்கொள் ளுங்கள். ஆனால் ஹிந்துக்களாகிய நமக்கு நமது தேசீய இலட்சியங்களே முதன்மையானவை. மற்ற வையெல்லாம் இரண்டாந்தரம், மூன்றாந்தரமேயா கும் என்பதை நினைவு கூருங்கள்.

13. சாதிப் பிரச்னை சமூகத்திற்கே சாதி-சமயத்திற்கு அன்று

13. சாதிப் பிரச்னை சமூகத்திற்கே சாதி-சமயத்திற்கு அன்று

சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடேயாகும். மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும், மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்நாட்டில் சந்நியாசியா கலாம். அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன.

சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சம யத் தொடர்புடையனவாக வெளிக்குத் தோன்றிய போதிலும் உண்மையில் அவை அத்தகையனவல்ல. நம்மை ஒரு தனி சமூகமாகக் காப்பாற்றி வருவதற்கு அவ்வேற்பாடுகள் அவசியமாயிருந்து வந்திருக்கின் றன. தற்காப்புக்கு அவசியம் இல்லை யாகும்போது அவை இயற்கை மரண மடைந்து மறையும்.

கௌதம புத்தர் முதல் ராம்மோஹன் ராய் வரையில் (சீர்திருத்தக்காரர்) எல்லோரும் ஒரு தவறு செய்திருக்கிறார்கள். அவர்கள் சாதியை சமய ஸ்தாபனமாகக் கொண்டு சாதி, சமயம் எல்லாவற் றையும் சேர்த்து அழித்துவிட முயன்றார்கள். எனவே அவர்கள் அடைந்தது தோல்வியேயாகும். புரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் சரியே, சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடே என்பதில் சந்தேக மில்லை. அந்த ஸ்தா பானம் தன்னுடைய வேலையைச் செய்த பின்னர் இப்போது அழுகி நாற்றமெடுத் திருக்கிறது. இந்திய ஆகாய வெளியில் அந்நாற்றம் நிறைந்துளது.

சாதி ஏற்பாடு வேதாந்த மதத்துக்கு விரோத மானது. சாதி என்பது ஒரு வழக்கமேயல்லாது வேறில்லை. நமது பெரிய ஆசாரியர்கள் எல்லோரும் அதைத் தாக்க முயன்றிருக்கிறார்கள். புத்தர் காலத் திலிருந்து சாதிக்கு விரோதமாக அநேகர் பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையி லும் அது வலிமை பெற்று வந்ததேயன்றி வேறு பயனில்லை. இந்தியாவின் அரசியல் ஸ்தாபனங்களி லிருந்து வளர்ச்சி பெற்றதே சாதியாகும், அதைப் பரம்பரையான தொழிற் சங்க முறை என்று சொல் லலாம். ஐரோப்பாவுடன் நேர்ந்த தொழிற் போட்டி. யானது எந்த போதனையையும் விட சாதியை அதி கம் தகர்த்திருக்கிறது.

சாதி ஏற்பாட்டின் உட்கருத்து

ஐரோப்பிய நாகரிகத்திற்குரிய சாதனம் பலாத் காரமாகும். ஆரிய நாகரிகமோ வர்ண தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வர்ணப் பிரி வினை நாகரிக மென்னும் உச்சிக்கு ஜனங்களை அழைத்துச் செல்லும் படிக்கட்டாகும். ஒருவனு டைய கல்வியும், அறிவுப் பயிற்சியும் அதிகமாக ஆக அவன் அந்தப் படிக்கட்டின் மூலமாய் மேலே மேலே ஏறிக்கொண்டிருக்கிறான். ஐரோப்பிய நாகரி கத்தில் பலசாலிகளுக்கே வெற்றி; பலவீனர்கள் அழிந்து போக வேண்டியது தான். ஆனால் பாரத தேசத்திலோ ஒவ்வொரு சமூக விதியும் பலவீனர் களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்ட தாகும்.

சாதி என்பது நல்ல ஏற்பாடுதான். ஆனால் உண்மையில் சாதி என்றால் என்னவென்று லட்சத்தில் ஒருவர் கூட அறிந்து கொள்வதில்லை. உலகில் சாதி இல்லாத தேசமேயில்லை. இந்தியாவில் நாம் சாதி என்னும் கீழ்ப்படியில் தொடங்கி சாதியற்ற மேல் நிலையை அடைகிறோம். சாதி என்பது இந்தத் தத் துவத்தையே அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவில், பிராமணன் மக்கட் குலத்தின் இலக் கியமாவான். ஒவ்வொருவனையும் பிராமணனாக்குவது சாதி ஏற்பாட்டின் நோக்கமாகும். இந்திய சரித் திரத்தைப் படித்தால் கீழ் வகுப்பாரை மேலே கொண்டுவர எப்போதும் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருப்பதைக் காண்பீர்கள். பல வகுப்புகள் கை தூக்கி விடப்பட்டிருக்கின்றன. மற்றும் பல வகுப்பு களும் மேலே வந்து முடிவில் எல்லோரும் பிராம ணர்களாவார்கள். இதுவே சாதி ஏற்பாட்டின் நோக் கம். யாரையும் கீழே கொண்டுவராமல் எல்லோரை யும் நாம் மேலே தூக்கிவிட வேண்டும். இதைப் பெரிதும் பிராமணர்களே செய்தாக வேண்டும். எல்லா உரிமை பெற்ற கூட்டங்களும் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்ளுகிறார்கள். ஆகை யால் மற்றவர்களையும் தங்களுக்குச் சமமாக உயர்த் துதலே அவர்கள் கடமையாகும். இதை எவ்வளவு விரைவில் செய்கிறார்களோ அவ்வளவுக்கு நன்மை.

ஆத்ம சாதனத்தையும் துறவு நெறியையும் மேற் கொண்ட பிராமணன் நமது இலக்கியமா வான். பிராமண இலட்சியம் என்றால் என்ன? உல கப்பற்று அறவே நீங்கி உண்மை ஞானம் குடி கொண்டுள்ள பிராம்மணீய இலட்சியத்தையே நான் குறிப்பிடுகிறேன். இதுவே ஹிந்து சமூகத்தின் இலட்சியமாகும்.

உலக முழுவதிலும் ஆரம்பத்தில் பிராமணர் களேயிருந்தார்களென்றும், அவர்கள் இழிவடையத் தொடங்கியபோது பற்பல சாதிகளாகப் பிரிந்தார்களென்றும், மீண்டும் கிருதயுக ஆரம்பத்தில் எல்லோரும் பிராமணர்களாவார்களென்றும் மகா பாரதத்தில் படிக்கிறோம். ஆதலின் சாதிப் பிரச்னை யைத் தீர்த்து வைப்பதற்கு வழி, ஏற்கனவே மேலே யுள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; உண்ணல், குடித் தல் விஷயங்களில் மூளை கெட்டுத் தடுமாறுவது மன்று; அதிக சுகா நுபவங்களுக்காக நமது கட்டுக் களை மீறி நடப்பது மன்று; நம்மில் ஒவ்வொரு வரும் வேதாந்த சமயத்தின் கட்டளைகளை நிறை வேற்றிப் பாரமார்த்திக வாழ்வு எய்தலும், உண் மைப் பிராமணராதலுமே வழியாகும்.

உங்கள் எல்லோருக்கும் விதிக்கப்பட்டுள்ள கட் டளை ஒன்று தான். அதாவது நீங்கள் அனை வரும் இடையில் நில்லாமல் முன்னேறிக் கொண்டே யிருத்தல் வேண்டும். மிக உயர் நிலையிலுள்ளவனிலி ருந்து மிகத் தாழ்ந்துள்ள பறையன் வரைக்கும் இந்நாட்டில் எல்லோரும் முயன்று உண்மைப் பிராமணர் ஆதல்வேண்டும்.

பின்னர் நாளடைவில் ஏற்பட்ட ஸ்மிருதிகளில், சிறப்பாக இக்காலத்திற்கு முழு அதிகாரம் உள்ள ஸ்மிருதிகளில், நாம் காண்பதென்ன? சூத்திரர்கள் பிராமணர்களுடைய பழக்க வழக்கங்களைக் கைக் கொண்டால் அவர்கள் நன்றே செய்கிறார்கள்; இவ்வழியில் அவர்களுக்கு ஊக்கமளிக்கவேண்டும் என்று கூறப்படுவதைக் காண்கிறோம். எல்லாச்சாதி களும் மெதுவாக, நிதானமாக, மேலே வரவேண்டு மென்பதே நோக்கமென்று பிர தயட்சமாகத் தெரிய வருகிறது. ஆயிரக்கணக்கான சாதிகள் இருக்கின் றன. அவற்றுள் சில பிரம்மண்ய பதவி அடைந்தும் இருக்கின்றன.

பிராமணனுடைய மகன் ஒவ்வொருவனும் பிராமணனாகவேயிருத்தல் வேண்டும்மென்னும் கட் டாயமில்லை. பிராமணனுடைய மகன் பிராமணன் ஆவது பெரிதும் சாத்தியமாயினும், அவன் பிராம ணனாகாமலும் போதல் கூடும், பிராமண சாதியும், பிரம்மண்ய குணங்களும் முற்றும் வேறானவை. சத் துவம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்கள் இருப்பது போல் ஒருவனை பிராமணன், க்ஷத்திரி யன், வைசியன், சூத்திரன் என்று குறிப்பிடும் குணங்கள் இருக்கின்றன. எனவே, ஒருவன் ஒரு சாதியிலிருந்து மற்றொரு சாதிக்கு மாறுதல் முற்றி லும் சாத்தியமாகும்; அது இயற்கையுமாகும். இல் லாவிடில் விசுவாமித்திரர் பிராமணராகவும், பரக ராமர் க்ஷத்திரியராகவும் எவ்வாறு ஆகியிருக்க முடியும்?

சாதி நல்லது: உரிமைதான் கெட்டது

சாதி என்பது நல்ல ஏற்பாடே… சமூக வாழ்க் கையை ஒழுங்குபடுத்துவதற்கு அது ஒன்றே இயற் கை வழி. எந்த சமூகத்திலும் மனிதர்கள் தனித் தனிக் கூட்டமாகச் சேர்ந்தேயாகவேண்டும். இந்த இயற்கை நியதியை மாற்ற முடியாது. நீங் கள் எங்கே போனாலும் சாதி இருப்பதைக் காண லாம். |

சாதி அடியோடு போகவேண்டியதில்லை. அதை அடிக்கடி சீர்திருத்தி அமைத்தலே அவசியமாகும். அந்தப் பழைய ஏற்பாட்டில் இரு நூறாயிரம் புதிய ஏற்பாடுகளை அமைப்பதற்கு வேண்டிய ஜீவசக்தி இருக்கிறது. சாதியை அடியோடு ஒழிக்க விரும்பு தல் அறிவீனமாகும்.

நம்மை ஒரு தனிச்சமூகமாகக் காப்பாற்றுவ தற்கு இந்த ஏற்பாடுகள் அவசியமாயிருந்திருக் கின்றன. தற்காப்புக்கு இந்த அவசியம் இல்லாமற் போகும்போது அவை இயற்கை மரணமடையும்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சாதி ஏற்பாட்டைக் காட்டிலும் இந்திய சாதி ஏற் பாடு சிறந்ததாகும். அது முற்றிலும் நல்லது என்று நான் சொல்லவில்லை. சாதி இல்லாவிட்டால் இப் போது உங்கள் கதி என்னவாயிருக்கும்? உங்கள் கல்வியும், பிறவும் என்ன கதி அடைந்திருக்கும்?

தனி வகுப்புகளாகப் பிரிந்தமைதல் சமூகத்தின் இயற்கை. விசேஷ உரிமைகளே தொலை தல் வேண் டும். சாதி என்பது ஓர் இயற்கை நியதி. சமூக வாழ்வில் நான் ஒரு கடமையைச் செய்கிறேன்; நீ மற்றொரு கடமையைச் செய்கிறாய். நீ நாட்டைஆள்கிறாய்; நான் பழைய செருப்புத் தைக்கிறேன். இதனாலேயே நீ என்னைவிடப் பெரியவனாவதெங்ங னம்? நான் நாடாள முடியாதெனில் நீ செருப்புத் தைக்க முடியுமா? நான் செருப்புத் தைப்பதில் கெட்டிக்காரன்; நீ வேதம் ஓதுவதில் சமர்த்தன்; அதனால் நீ என் தலை மீதேறி மிதிக்க வேண்டு மென்பதென்ன?

ஆண்டவன் மக்கட் குலத்து அளித்த மிகச் சிறந்த சமூக ஸ்தாபனங்களில் சாதி ஏற்பாடு ஒன் றென்பதாக நாங்கள் நம்புகிறோம். விலக்க முடியாத பல குறைபாடுகளும், அன்னிய நாட்டாரின் கொடு மைகளும் எல்லாவற்றிற்கும் மேலாக பிராமணர் என்னும் பெயருக்குத் தகுதியற்ற பிராமணர் பல ரின் மகத்தான அஞ்ஞானமும் கர்வமும், அவ்வுயரிய ஸ்தாபனமானது உரிய பயனளியா வண்ணம் செய்திருக்கின்றன. அங்ஙனமிருப்பினும், அந்த ஸ்தா பனத்தினால் பாரத நாட்டுக்கு ஆச்சரியகரமான நன் மைகள் விளைந்திருக்கின்றனவென்றும், இனியும் இந்திய சமூகத்தை அதன் இலட்சியத்துக்குக் கொண்டு சேர்க்கப் போவது அந்த ஸ்தாபனமே யென்றும் நாங்கள் நம்புகிறோம்.

தற்கால சாதி வேற்றுமையானது இந்தியாவின் முன்னேற்றத்துக்கு ஒரு தடைகல்லாகும். அது வாழ் வைக் குறுக்குகின்றது; கட்டுப்படுத்துகின்றது; பிரி வினை செய்கின்றது. அறிவு வெள்ளத்தின் முன்பாக அது விழுந்து மாயும்.

தற்காலப் போட்டியின் காரணமாக, சாதி எவ் வளவு விரைவில் மறைந்து வருகிறதென்று பாருங் கள். இப்போது அதைக் கொல்ல மதம் எதுவும் தேவையில்லை. வடஇந்தியாவில் கடைக்கார பிரா மணனும், செருப்புத் தைக்கும் பிராமணனும், சாராயம் காய்ச்சும் பிராமணனும் சர்வ சாதாரண் மாயிருக்கிறார்கள், இந்நிலைமைக்குக் காரணம் என்ன? வாழ்க்கைப் போட்டியேயாகும்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், எவனும் தன் ஜீவனோபாயத்துக்காக எந்தத் தொழிலும் செய்யலாம். தடை எதுவும் கிடையாது. எனவே வாழ்க்கைப் போட்டி பலமாகி விட்டது. இதன் பயனாக ஆயிரக்கணக்கானவர்கள் அடியில் கிடந்து உழலாமல், தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் பயன்படுத்தி மேனிலைக்கு வந்திருக்கிறார்கள்.

தனி உரிமைகளும், விசேஷ பாத்தியங்களும் கோரும் காலம் என்றென்றைக்கும் இத்தேசத்தி லிருந்து மலையேறிவிட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியினால் விளைந்துள்ள பெரு நன்மை களில் இது ஒன்றாகும்.

சாதிப் பிரச்சனையைத் தீர்க்கும் உபாயம்

சாதிச்சண்டை போடுவதில் பயனில்லை. அத னால் நன்மை என்ன? அச்சண்டை நம்மை இன்னும் அதிகமாகப் பிரிக்கும்; இன்னும் அதிகமாக பலவீனப் படுத்தும்; இன்னும் அதிகமாகத் தாழ்த்தும்.

சாதிப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு வழி மேலே யுள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; கீழேயுள்ளவர் களை மேலுள்ளவர்களின் நிலைக்கு உயர்த்துவதே யாகும். |

நமது இலட்சியத்தின் மேல்படியில் பிராமணன், கீழ்ப்படியில் சண்டாளன். சண்டாளனை பிராமண னுடைய நிலைக்கு உயர்த்துவதே நமது வேலை .

உயர் வகுப்பாரின் கடமை தங்களுடைய விசேஷ உரிமைகளைத் தாங்களே தியாகம் செய்வ தாகும். இது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவுக்கு நன்மை. தாமதம் ஆக ஆக அவை அதிகமாய்க் கெட்டுக் கொடிய மரணம் அடைகின் றன.

தான் பிராமணன் என்பதாக உரிமை பாராட்டிக்கொள்ளும் ஒவ்வொருவனும் அவ்வுரிமை யை இரண்டு வழிகளில் நிரூபிக்க வேண்டும். முத லாவது தன் பாரமார்த்திக மேன்மையை விளங்கச் செய்தல்; இரண்டாவது மற்றவர்களைத் தன் நிலைக்கு உயர்த்தல். ஆனால் தற்போது அவர்களில் பலர் பொய்யான பிறவிக் கர்வத்தையே பேணி வருவ தாகக் காணப்படுகிறது. பிராமணர்களே! எச்சரிக் கை! இது சாவின் அறிகுறியாகும். விழித்தெழுங் கள். உங்களைச் சுற்றியுள்ள பிராமணரல்லா தாரை உயர்த்துவதின் மூலம் உங்களுடைய மனிதத் தன் மையையும், பிரம்மண்யத்தையும் நிரூபியுங்கள். ஆனால் இதை எஜமானன் என்ற இறுமாப்புடன், குருட்டு நம்பிக்கை கலந்த கர்வப்புரையுடன் செய்ய வேண்டாம். ஊழியன் என்ற தாழ்மை உள்ளத் துடன் செய்யுங்கள்.

பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வதா வது: ‘ ‘ உங்களுக்குத் தெரிந்திருப்பதைப் பிறருக் குக் கற்பியுங்கள். பல நூற்றாண்டு காலமாக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் ஞானச் செல்வத்தை எல் லோருக்கும் அளியுங்கள். இவ்வாறு இந்திய ஜாதி யை உயர்த்தப் பெருமுயற்சி செய்யுங்கள்” என் பதே. உண்மைப் பிரம்மண்யம் எதுவென்பதை நினைவு கூர்ந்திருத்தல் பிராமணர்களின் கடமையா கும். பிராமணனிடம் ‘தர்ம பொக்கிஷம்’ இருப்ப தினாலேயே அவனுக்கு இவ்வளவு சிறப்புகளும், விசேஷ உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று மனு சொல்கிறார். பிராமணன் அப்பொக்கிஷத்தைத் திறந்து அதிலுள்ள செல்வங்களை உலகிற்கெல்லாம் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

பாம்பு தான் கடித்த மனிதன் உடலிலிருந்து தன் விஷத்தைத் திரும்ப உறிஞ்சிவிட்டால் அம் மனிதன் பிழைத்துக் கொள்வானென்று வங்காளத் தில் ஒரு குருட்டு நம்பிக்கை உண்டு. அவ்வாறே பிராமணன் தன்னால் விளைந்த தீமையைத் தானே நிவர்த்தி செய்யவேண்டும்.

இந்தியாவிலுள்ள மற்றச் சமூகங்களின் கதி மோக்ஷத்திற்காக உழைப்பது பிராமணனின் கடமையாகும்.

பிராமணரல்லாதாருக்கெல்லாம் நான் கூறு வதாவது: ”பொறுங்கள்; அவசரப்பட வேண்டாம். பிராமணனுடன் சண்டையிட எங்கே சந்தர்ப்ப மென்று காத்திராதீர்கள். நீங்கள் கஷ்டப்படுவத தற்குக் காரணம் உங்கள் தவறேயாகும். பாரா மார் திகத் துறையையும், சமஸ்கிருதக் கல்வியையும் அலட்சியம் செய்யும்படி உங்களுக்கு யார் சொன் னார்கள்? இவ்வளவு காலம் என்ன செய்துகொண் டிருந்தீர்கள்? இத்தனை நாள் அசட்டையாயிருந்து விட்டு, இப்போது மற்றவர்கள் உங்களை விட அதிக மூளையும், ஊக்கமும், சாமார்த்தியமும் உள்ள வார் களாயிருப்பது குறித்து எரிச்சலடைவதில் யாது பயன்? பயனற்ற விவாதங்களிலும், பத்திரிகைச் சண்டைகளிலும் உங்கள் சொந்த வீடுகளில் வீணான போர் நடத்திப் பாவந்தேடிக் கொள்வதற்குப் பதிலாக பிராமணன் பெற்றிருக்கும் அறிவுச் செல் வத்தையடைவதில் உங்கள் எல்லா சக்திகளையும் பயன்படுத்துங்கள். உபாயம் அதுவே யாகும்.”

தாழ்ந்த சாதியர்களுக் கெல்லாம் நான் சொல் வதாவது: ‘ உங்களுக்கு ஒரே வழி சம்ஸ்கிருதம் படித்தலேயாகும். உயர் சாதியார்களிடத்து எரிந்து விழுதலும், அவர்களுடன் சண்டை போடுதலும் பயனளியா. அவ்வழியினால் யாருக்கும் நன்மையில்லை, அதனால் துரதிர்ஷடவசமாக ஏற்கனவே பிரிவினை அதிகமாயுள்ள நமது சமூகத்தில் நாளுக்கு நாள் அதிக வேற்றுமையே ஏற்படும். உயர் சாதிகளின் வலிமையெல்லாம் அவர்களுடைய கல்வியும், பயிற் சியுமேயாம். நீங்களும் அவற்றைக் கைக்கொள்வதொன்றே சாதி சமத்வத்தை ஏற்படுத்தும் வழியாகும்.”

நீங்கள் ஏன் சமஸ்கிருத பண்டிதர்கள் ஆகக் கூடாது? இந்தியாவிலுள்ள எல்லா சாதிகளுக்கும் சம்ஸ்கிருதக் கல்வியளிப்பதற்காக நீங்கள் ஏன் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யலாகாது?

இவைகளை நீங்கள் செய்து முடிக்கும்போது பிராமணனுடன் சமமாகிறீர்கள். இந்தியாவில் செல் வாக்குப் பெறும் இரகசியம் அதுவேயாகும். இந் தியாவில் சம்ஸ்கிருதமும் மரியாதையும் பிரிக்க முடி யாதவையாயிருக்கின்றன. நீங்கள் சம்ஸ்கிருதக் கல்வி பெற்றவுடன் உங்களுக்கு விரோதமாய் யாரும் எதுவும் சொல்லத் துணியார்கள்.

12. பெண் மக்கள் முன்னேற்றம்

12. பெண் மக்கள் முன்னேற்றம்

பல நூற்றாண்டுகளாகட்ட பலவகைச் சந்தர்ப் பங்களினால் நமது பெண்களுக்குப் பாதுகாப்பு அவசி ய! மாயிருந்து வந்திருக்கிறது. நமது பழக்க வழக்கங் களுக்கு உண்மைக் காரணம் இதுவேயன்றி, ஸ்திரீ கள் தாழ்ந்தவர்கள் என்னும் கொள்கையன்று.

நமது பெண்கள் திக்கற்றவர்களாகவும், பிறரை நம்பி வாழ்பவர்களாகவும் நீண்ட காலமாகப் பயிற்சி செய்யப்பட்டு வந்திருக்கின்றனர். இதன் பயனாக, மிகச் சிறு அபாயம் அல்லது துன்பம் நேர்ந்துவிட்டாலும் அவர்கள் கண்ணீர் பெருக்கு வதற்கே தகுந்தவர்களாகிவிட்டனர்.

குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந் தியாவில் வழங்கும் முறைகள் மற்ற எந்த நாட்டா ரின் முறைகளிலும் பல அம்சங்களில் உயர்ந்தவை என்று நான் திட்டமாகக் கூறுவேன்.

இந்தப் புண்ணிய பாரத பூமியில், சீதையும் சாவித்ரியும் வாழ்ந்த இந்நாட்டில், இன்னமும் பெண்மைக்கு இலக்கியமானவர்களைக் காணலாம். அவ்வளவு தூய நடக்கையும், தொண்டில் விருப்ப மும், அன்பும், தயாளமும், திருப்தியும், பக்தியும் ஒருங்கே வாய்ந்த பெண்களை உலகில் வேறெந்த நாட்டிலும் நான் காண்பதற்கில்லை.

சீதைக்குப் பிறப்பளித்த ஒரு ஜாதியார் பெண் குலத்தினிடம் வைத்திருக்கும் மரியாதை உலகில் ஒப்புவமை யற்றதாயிருக்குமென நான் அறிவேன். சீதை அவர்கள் கனவில் கண்ட பெண்ணரசியா யிருப்பினும் இது பொருந்தும்.

பண்டை நாளில் ஆரண்யங்களில் நடைபெற்ற நமது சர்வ கலாசாலைகளில்—–குரு குலங்களில் சிறு வர் சிறுமிகளுக்கு அளிக்கப்பட்ட சமத்வத்தினும் பூரண சமத்வம் வேறுண்டா ? நம்து சமஸ்கிருத நாடகங்களைப் படியுங்கள். சகுந்தலையின் சரிதத்தை படித்துவிட்டு, டென்னிஸன் இயற்றிய ‘ இளவரசி’ என்னும் கவிதை நமக்குக் கற்பிக்கக்கூடியது ஏதேனு முண்டாவெனப் பாருங்கள்.

விதவைகளின் பிரச்னையைப் பற்றியும், பொது வாக ஸ்திரீகள் நிலையைப்பற்றியும் எனது கருத் தென்னவென்று அடிக்கடி கேட்கப்படுகிறது. நான் இதற்கு முடிவான பதிலாகச் சொல்வதென்னவெ னில்–இந்த அசட்டுக் கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நான் விதவையா? அல்லது ஸ்திரீ யா? பின்னர், என்னை ஏன் கேட்க வேண்டும்?

பெண் மக்கள் சம்பந்தமான பல முக்கிய பிரச்னைகள் உண்டென்பது உண்மையே. ஆனால் ‘கல்வி’ என்னும் மந்திரத்தினால் தீர்த்து வைக்க முடியாதது அவற்றில் எதுவுமில்லை.

ஸ்திரீகளின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு நீ யார்? ஒவ்வொரு விதவையையும், ஸ்திரீயையும் அடக்கி ஆள்வதற்கு நீ என்ன, அவர்களைப் படைத்த ஆண்டவனா? விலகி நில். அவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள்.

உங்கள் பெண்மக்களுக்குக் கல்வியளியுங்கள்; பின்னர் அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். தங் களுக்கு என்னென்னசீர்திருத்தங்கள் வேண்டுமென்று அவர்களே சொல்வார்கள். அவர்களைப் பொறுத்த விஷயங்களில் தீர்ப்புச் சொல்ல உங்களுக்கென்ன அதிகாரம்?

ஹிந்து பெண்மணிகளில் பெரும்பான்மையோ ரால் நினைக்கவும் முடியாத அளவு ஒவ்வோர் அமெரிக்கப் பெண்மணியும் கல்வி பயின்றிருக்கிறாள் . நமது பெண்களும் ஏன் அத்தகைய கல்வி பெறுதல் கூடாது? பெற்றேயாதல் வேண்டும்.

அமெரிக்காவில் ஆண்மக்கள் தங்கள் பெண் மக்களை மிக நன்றாக நடத்துகிறார்கள். எனவே அவர் கள் செல்வத்திலும் கல்வியிலும் சிறந்து, ஊக்கமு டைய சுதந்திர வாழ்வு நடத்துகிறார்கள். ஆனால் நாம் துன்பத்திலாழ்ந்து ந.ை- பிணங்கள் போல் அடிமை வாழ்வு வாழ்வதேன்? இதற்கு விடை சொல்ல வேண்டுவதில்லை.

பெண் கல்விக்கு ஆரம்பம் செய்வதெப்படி? கற்பு என்பது ஹிந்து மா தரின் பரம்பரைச் செல்வம் எனவே, கற்பு என்றால் என்னவென்று அவர்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள். முதலில், இந்த இலட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்துங் கள். இதனால் அவர்கள் சிறந்த ஒழுக்க வலிமை பெறுவார்கள். அவர்கள் இல்லறத்தை மேற்கொள் ளலாம்; அல்லது விரும்பின் கன்னிகைகளாகவே காலங்கழிக்கலாம். எங்ஙனமாயினும், அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், தங்கள் கற் பினின்று ஓரணுவேனும் வழுவுவதினும் உயிரையே விட்டுவிடவும் அஞ்சாத மனத்திண்மை பெறுவார்கள்

ஸ்திரீகள் தங்களுடைய பிரச்னைகளைத் தாங் களே தீர்த்துக் கொள்ளும்படியான நிலைமைக்கு அவர்களைக் கொண்டு வந்து விடவேண்டும்.

நமது பாரதத் தாயின் க்ஷேமத்திற்கு அவளுடைய புதல்வர்களில் சிலர் ஆத்மத் தூய்மையுள்ள பிரம்மசாரிகளாகவும் பிரம்மசாரிணிகளாகவும் வாழ்வு நடத்தல் அவசியமிருக்கிறது.

தற்காலத்தின் தேவைகளை முன்னிட்டு ஆராய்ந் தால் பெண்மக்களில் சிலரைத் துறவி இலட்சியங் களில் பற்றுண்டாகுமாறு பயிற்சி செய்தல் அவசிய மெனக் காண்கின்றது. அவர்கள் அநாதி காலமாகத் தங்களுடைய இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் பாதி விரதா தர்ம பலத்தினால் ஊக்கமடைந்து வாணாள் முழுதும் கன்னிகைகளாகவே இருந்து தொண்டு செய்வதாக விரதங் கொள்ள வேண்டும்.

நவீன பௌதிக சாஸ்திரங்கள் அவர்களுக்குக் கற்பிக்கப் படவேண்டும். அவர்களுக்கும் மற்றவர் களுக்கும் பயன்படக் கூடிய வேறு விஷயங்களும் கற்பிக்கப்பட வேண்டும்.

தேச சரித்திரம், புராணங்கள், குடும்ப நிர் வாக முறைகள், உயர் கலைகள், சன்மார்க்க தத்து வங்கள் இவை எல்லாம் நவீன பௌதிக சாஸ் திரத்தின் துணைகொண்டு அவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும். அத்துடன் அறநெறியிலும் பாரமார்த் திக வாழ்க்கையிலும் பயிற்சியளிக்க வேண்டும். உரிய காலத்தில் அவர்கள் அன்னை மார்களுக்கு இலக்கியங்களாய் விளங்கும் வண்ணம் பயிற்சி செய்வித்தல் வேண்டும்.

பெண் பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பிக்கும் கடமை, படிப்புள்ள கைம்பெண்களுக்கும் பிரம்ம சாரிகளுக்குமே எவ்வாறாயினும் உரிய தாகும். இந்த நாட்டில் பெண் பள்ளிக்கூடங்களில் ஆண்மக்களின் தொடர்பை விலக்குதல் நலம்.

சமயம் கலைகள் பௌதிக சாஸ்திரம், வீட்டு வேலை, சமையல், தையல், சுகாதாரம் இவற்றில் எல்லாம் முக்கியமான அம்சங்கள் நமது ஸ்திரீ களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். நவீனங்கள், கதைகள் முதலியவை அவர்கள் படித்தல் நன்மை யன்று. ஆனால் பூஜாவிதிகள் மட்டும் சொல்லிக் கொடுத்தலும் போதாது. அவர்களுக்களிக்கப்படும் கல்வி எல்லா விஷயங்களிலும் கண் திறப்பதாய் இருக்க வேண்டும். நற்குணங்களுக்கு இலக்கியங்க ளான பெண்மணிகளின் சரிதங்களை அடிக்கடி. பெண் குழந்தைகளுக்குச் சொல்லி, சுய நலத்தியாக வாழ்க் கையில் அவர்களுக்குப் பற்றுண்டாகும்படி செய்ய வேண்டும். சீதை, சாவித்ரி, தமயந்தி, லீலாவதி, மீராபாய் முதலிய உத்தமிகளின் உதாரணங்கள் எப்போதும் அவர்கள் உள்ளத்தில் குடிகொண்டி ருக்கச் செய்தல் அவசியம், அக்கற்பரசிகளை இலக் கியமாகக் கொண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கை யை அமைத்துக் கொள்ளுமாறு செய்தல் நமது கடமையாகும்.

இந்நாட்டின் ஆண் மக்களுக்கு நான் சொல்வ தையே பெண்மணிகளுக்கும் கூறுவேன். இந்தியா விலும், இந்திய தர்மத்திலும் நம்பிக்கை வையுங் கள். பலசாலிகளாயும், வருங்காலத்தில் நம்பிக்கை உடையவர்களாயு மிருங்கள். உங்களுடைய பழைய நாகரிகத்தைக் குறித்து வெட்கப்பட வேண்டாம். ஹிந்துக்கள் பிறரிடமிருந்து பெற வேண்டியது கொஞ்சம் உண்டாயினும், உலகில் வேறெந்த நாட் டாரையும் விட அவர்களிடம் கொடுப்பதற்கதிக மிருக்கிற தென்பதை நினைவில் வையுங்கள்.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் முப்பதாண்டு பிரம்மசரியம் காத்த பின்னரே அவர்களுக்குக் கலி யாணம் செய்து வைக்க வேண்டும். அது போன்ற பெண்களும் பிரம்மசரியங்காத்தல் அவசியம். அக் காலத்தில் அவர்களுக்குப் பெற்றோர்களால் கல்வி யளிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் பெண்கள் சீதையின் அடிச்சுவடு களைப் பின்பற்றியே முன்னேற வேண்டும். வேறு வழி கிடையாது.

மற்றவைகளுடன், அவர்கள் வீரமும் வலிமை யும் கூடப்பெற வேண்டும். இந்நாளில் அவர்கள் தற்காப்பு முறைகள் தெரிந்து கொள்ளுதலும் அவசி யமாகிவிட்டது.

நமது ஸ்திரீகளைத் தற்கால நாகரிகத்தில் பழக் குவதற்குச் செய்யப்படும் எந்த முயற்சியாயினும், அது சீதையின் இலட்சியத்திலிருந்து அவர்களை அகற்றிக்கொண்டு போவதாயிருந்தால், உடனே தோல்வியடைதல் நிச்சயம். இதைப் பிரதிதினமும் நாம் பார்க்கிறோம்.

உங்கள் பெண் மக்களின் நிலைமையை உங்க ளால் உயர்த்த முடியுமா? முடியுமென்றால், வருங் காலத்தில் நீங்கள் க்ஷேமமடைவீர்களென்று நம்பு தற்கிடமுண்டு. இன்றேல் இப்போதுள்ள கீழ் நிலை யிலேயே இருக்க வேண்டியது தான்.

உண்மையான சக்தி உபாசகன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? இவ்வுலகத்தில் ஆண்ட வன் சர்வ வியாபியான சக்தியாயுள்ளான் என்பதையறிந்து, பெண் மக்களிடத்தே அந்த சக்தியின் வெளித் தோற்றத்தைக் காண்பவனேயாவான்.

11. பாமரர் முன்னேற்றம்

11. பாமரர் முன்னேற்றம்

நமது மூதாதைகளில் பிரபு குலத்தவர்கள் நாட் டின் பாமர மக்களைத் தங்கள் காலின் கீழ் நசுக்கிக் கொண்டே வந்ததின் பயனாக அவ்வேழை மக்கள் திக்கற்றவர்களாகிக் கடைசியில் பாவம், தாங்கள் மக்கட் குலத்தவர் என்பதையே அநேகமாக மறந்து விட்ட னர்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் அவர் கள் பிறருக்கு உழைக்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டவர்களாதலின், நாம் அடிமைகளாகவே பிறந் தோம், குற்றேவல் புரியவே வாழ்க்கையெடுத்தோம் என்று அவர்கள் உண்மையாகவே நம்பத் தலைப் பட்ட னர்.

ஹிந்து மதத்தைப் போல மக்கட் குலத்தின் மேன்மையை உயர்வு படுத்திக் கூறும் மதம் இப் பூவுலகில் பிறிதொன் றில்லை; ஹிந்து மதத்தைப் போல் இப்பொழுது அனுஷ்டானத்தில் ஏழை எளிய வர்களை மிதித்து நசுக்கும் மதமும் வேறொன்றில்லை.

இந்தியாவில் ஏழை எளியவர்களுக்கும் பாவி களுக்கும் துணையே கிடையாது; நண்பர்கள் இல்லை. அவர்கள் எவ்வளவு தான் முயன்றாலும் முன்னேற முடியாது. ஒவ்வொரு நாளும் அவர்கள் தாழ்ந்து கொண்டே யிருக்கிறார்கள். கொடூரமான சமுதாய மானது அவர்கள் மீது சொரிந்து கொண்டேயிருக் கும் அடிகளை அவர்கள் உணருகிறார்கள். ஆனால் அவ்வடிகள் எங்கிருந்து வருபவை என்று அவர் களுக்குத் தெரிவதில்லை. தாங்களும் மனித குலத் தைச் சேர்ந்தவர்களே என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். இதன் பயனே அடிமைத்தனமாகும்.

பாமர ஜனங்களை அசட்டை செய்வதே நமது தேசீயப் பெரும்பாவம் என்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சியின் காரணங்களுள் அது ஒன்றாகும். இந்தியாவின் பாமர மக்கள் கல்விப் பயிற்சியுடை யவர்களாய், வயிற்றுச் சோற்றுக்குக் கவலையற்ற வர்களாய் ஆகும் வரையில் அரசியல் என்று எவ் வளவு தான் கூச்சலிட்டாலும் பயன் விளையாது, அப் பாமர ஜனங்களே நமது கல்விக்குப் பணந் தருகிறார்கள். நமது கோயில்களை அவர்களே கட்டு கிறார்கள். பதிலுக்கு அவர்கள் பெறுவதென்ன? உதை கள் தான், ஏறக்குறைய அவர்கள் நமது அடிமை களாகி விட்டார்கள். பாரத நாட்டை நாம் புனருத் தாரணம் செய்ய விரும்பினால் இப்பாமர ஜனங் களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்.

இந்தியாவிலுள்ள லட்சோப லட்சம் ஏழை களின் துயரங்களையும் துன்பங்களையும் நினைந்து உண்மையில் கண்ணீர் விடுவோர் எத்தனை பேர் இருக்கின்றனர்? நாமும் மனிதர்கள் தானா? அவர்களுடைய பசி தீர்வதற்காக, அவர்களுடைய முன்னேற்றத்துக்காக நாம் செய்வது என்ன? அவர்களை நாம் தொடுவதில்லை. அவர்கள் அருகிலும் நெருங்குவதில்லை! நாம் மனிதர்களா!

நான் ஏழை; நான் ஏழைகளை நேசிக்கிறேன். இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஏழைகள் எனப்படு வோரைப் பார்க்கிறேன்; அவர்கள் கதிக்கிரங்குவோர் எத்தனைபேர் உளர் என்பதையுங் காண்கிறேன். இந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எவ்வளவு பெரிய வேற்றுமை? இந்தியாவில், நித்திய தரித்திரத்திலும், அறியாமையிலும் மூழ்கிக் கிடக்கும் இருபது கோடி ஸ்திரீ புருஷர்களுக்காக இரங்குவோர் யார்? அவர் கள் முன்னேற்றத்துக்கு வழி என்ன? அவர்கள் கல்வி யறிவில்லாதவர்கள்; ஒளி காணாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு அறிவொளியை அளிப்போர் யாவர்? வீட்டுக்கு வீடு சென்று அவர்களுக்குக் கல்வி புகட்ட யார் தயாராயிருக்கிறார்?

தேசம் குடிசையில் இருக்கிறதென்பதை நினைவு கூருங்கள். ஆனால், அந்தோ ! அக்குடிசைகளில் வதி வோருக்கு எவரும் எதுவும் செய்தாரில்லை.

ஒரு தேசத்தினுடைய கதிமோட்சம் அந்நாட் டிலுள்ள விதவைகள் பெறும் கணவர்களின் தொகை யையா பொறுத்திருக்கிறது? அன்று, அன்று, பாமர மக்களின் நிலையையே அது சார்ந்ததாகும். அப்பா மர ஜனங்களை உங்களால் கை தூக்கிவிட முடியுமா? அவர்கள் இயல்பாகப் பெற்றுள்ள பாரமார்த்திகத் தன்மையை இழந்துவிடாத வகையில், அவர்கள் இழந்துவிட்ட தன்னம்பிக்கையை நீங்கள் அவர் களுக்குத் திரும்ப அளிக்க முடியுமா?

இந்நாட்டில் லட்சோப லட்சம் ஏழை மக்கள் பசிப்பிணிக்கும், அறியாமைக்கும் இரையானவர் களாயிருக்கும் வரையில் அவர்களுடைய உழைப்பின் பயனைக் கொண்டு கல்வி கற்று அவர்களைக் கவனியா திருக்கும் ஒவ்வொரு மனிதனையும் நான் துரோகி என்றே சொல்வேன்.

துன்பத்திலாழ்ந்த ஏழைகளை வதைத்துப் பெற்ற பணத்தைக்கொண்டு ஆடையாபரணங்களால் தங்களை அலங்கரித்துத் திரியும் மனிதர்கள், பசி பசி என்று பறந்து காட்டுமிராண்டிகளே போல் வாழும் அந்த இருபது கோடி மக்களுக்காக எதுவும் செய்யாவிடில், அவர்களை நன்றி கெட்ட பாதகர்கள் என்றே நான் கூறுவேன்.

வறுமை, புரோகிதம் கொடுங்கோன்மை என் னும் இத்தகைய துன்பங்களால் நசுக்கப்பட்டு உயிர் வாழும் இந்தியாவின் ஏழைகளுக்காக நாம் ஒவ் வொருவரும் இரவு பகல் பிரார்த்தனை செய்வோமாக.

ஆண்டவனைத் தேடி நீங்கள் எங்கே போகி றீர்கள்? துன் டப்பட்டவர்கள், ஏழைகள், பலவீனர்கள் இவர்கள் எல்லோரும் அத்தனை தெய்வ வடி வங்களேயல்லவா? ஏன் முதலில் இவர்களை ஆராதிக் கக்கூடாது? கங்கைக் கரையில் கிணறு வெட்டப் போதல் உண்டா ? இந்த ஏழைகளையே உங்கள் கட வுளாய்க் கொள்ளுங்கள். அவர்களைப் பற்றிச் சிந்தி யுங்கள்; அவர்களுக்கு ஊழியம் புரியுங்கள்; அவர் களுக்காக இடைவிடாது பிரார்த்தனை செய்யுங்கள். அப்போது ஆண்டவன் உங்களுக்கு வழி காட்டுவார்.

எவனுடைய இதயம் ஏழைகளுக்காக இரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா வென் பேன்; மற்றவர்கள் துராத்மாக்களேயாவர்.

நான் தத்துவ ஞானியல்லேன்; ஆத்ம ஞானியு மல்லேன் நான் ஏழை; ஏழைகளை நேசிக்கிறேன்’ அவ்வளவு தான்.

நமது பாமர ஜனங்கள் உத்தமர்கள். ஏனெனில் நமது நாட்டில் ஏழ்மை ஒரு குற்றமாகக் கருதப்படு வதில்லை. நமது பாமரர்கள் பலாத்காரப் பற்றுள்ள வர்கள் அல்லர். ஐரோப்பாவிலுள்ள பாமர ஜனங் களை விட நம்முடைய பாமர ஜனங்கள் அதிக நாகரிக மடைந்தவர்கள். இவர்களுக்கு நாம் லௌகிகக் கல்வியளித்தல் வேண்டும். நமது மூதாதைகள் விடுத் துப் போயுள்ள உபாயத்தையே நாமும் கடைப் பிடிக்க வேண்டும். அதாவது எல்லா உயரிய இலட் சியங்களும் மெள்ள மெள்ளப் பாமர ஜனங்களி டையே வேரூன்றச் செய்ய வேண்டும். அவர்களை மெதுவாக உயர்த்துங்கள்; சமத்வம் பெறுமாறு உயர்த்துங்கள். லௌகிகக் கல்விகூட மதத்தின் மூல மாகவே அளியுங்கள்.

வேத மந்திரங்களில் பிராம்மணர்களுக்கு எவ் வளவு உரிமையுண்டோ அவ்வளவு உரிமை அவர் களுக்கும் உண்டென்பதை அவர்கள் மனதில் பதியச் செய்யுங்கள். அவ்வாறே வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள், வியாபாரம், கைத்தொழில் ஆகியவை களைப்பற்றியும் எளிய மொழிகளில் அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்களால் இது செய்ய முடியாவிடில் உங்கள் கல்வியும், பயிற்சியும், வேதாத்திய யனமும், வேதாந்த விற்பத்தியும் பழிக்குரியனவாகின்றன.

வயிற்றுக் கடவுள் பூசையே இப்போது முதன் மையான தேவையாகும். வயிற்றுக் கடவுளை முதலில் திருப்தி செய்தாலன்றி உங்கள் சமய உபதேசங் களுக்கு யாரும் செவிகொடார். முதலில் இந்தக் கொடிய பட்டினியை நீக்குங்கள். நீங்கள் யாருக்கு மதபோதனை செய்ய விரும்புகிறீர்களோ அவர்கள் இடைவிடாமல் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பற் றியே சிந்திக்க வேண்டியவர்களா யிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் கவலையில்லாமல் செய்தாலன்றி உங்கள் உபந்நியாசங்களும் பிறவும் எவ்வகைப் பயனும் தரமாட்டா .

நமக்கு இப்போது வேண்டியது ஏராளமான இராஜச சக்தியாகும். ஏனெனில் தேசமனைத்தும் இதுகாலை தாமஸத்தில் மூழ்கியிருக்கிறது. இந்நாட்டு மக்களுக்குப் பசிக்கு உணவும், உடுக்கத் துணியும் அளிக்க வேண்டும்; அளித்து, அவர்களைத் தூக்கத்தி னின்றும் எழுப்ப வேண்டும்; எழுப்பி, முழுமன துடன் செயலில் இறங்கச் செய்ய வேண்டும்.

வாழ்க்கையின் மிக முக்கியமான பிரச்னை களைப்பற்றி நமது முன்னோர்களும் மற்ற நாட்டாரும் கொண்ட கொள்கைகள் அவர்களுக்குத் தெரி விக்கப்பட வேண்டும். முக்கியமாக, தற்போது மற்ற நாட்டார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என் பதை அவர்களே பார்த்துக் தாங்கள் செய்தற்குரிய தென்னவென்று முடிவு செய்யவேண்டும். இரசா யனப் பொருள்களைச் சேர்த்து வைப்பதே நம்மு டைய வேலை. அப்போது அதனின்றும் புதியதோர் இரசாயனப் பொருள் இயற்கை விதிகளின் படி உற்பத்தியாகிவிடுகிறது.

கொஞ்சம் நிதி சேர்த்துக் கொள்ளுங்கள், பின்னர், சில ஜால விளக்குகள் (Magic Lantern), தேச படங்கள், பூகோளங்கள், இரசாயனப் பொருள்கள் இவற்றைச் சேகரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாள் மாலையும் ஏழை எளியவர்கள் தாழ்த்தப்பட்ட வர்களின் கூட்டம் ஒன்று சேருங்கள். முதலில் சம யத்தைப்பற்றி உபந்நியாசம் செய்யுங்கள்; பிறகு ஜால விளக்கு முதலியவற்றின் உதவியினால் வான நூல், பூகோள சாஸ்திரம் முதலியன ஜனங்களின் தாட்ட மொழியின் மூலம் கற்பியுங்கள்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மக்கட் குல மானது எத்தனை யெத்தனை உயரிய கருத்துக்களை வளர்த்திருக்கிறதோ அவ்வளவையும், ஏழையிலும் ஏழையும் தாழ்ந்தவரிலும் தாழ்ந்தவனும்கூட அடை யுமாறு அவர்களுடைய வீட்டுக்கே கொண்டு செல் லுதல்; பின்னர் அவர்களைத் தங்களுக்குத் தாங்களே சிந்திக்கச் செய்தல்; இவையே என்னுடைய! அவா வாகும்.

‘‘பாமர ஜனங்களின் மதத்துக்கு ஊறு செய் யாமல் அவர்களை முன்னேற்றுதல்” என்பதையே உங்கள் வாழ்க்கை நோக்கமாய்க் கொள்ளுங்கள்.

10. கல்வி —எல்லாச் சமூகத் தீமைகளுக்கும் அருமருந்து

10. கல்வி —எல்லாச் சமூகத் தீமைகளுக்கும் அருமருந்து

தேசத்தின் பாரமார்த்திகக் கல்வியும் லௌகிகக் கல்வியும் நம் வசத்தில் இருக்கவேண்டும். உங்களுக்கு விளங்குகிறதா? அதைப்பற்றியே நீங்கள் கனவு காணவேண்டும். அதைப்பற்றியே பேசவும், நினைக்கவும் வேண்டும். அதைச் செயலில் நடத்தி வைக்கவும் வேண்டும். அதுவரையில் இந்த ஜாதிக்குக் கதிமோக்ஷம் இல்லை.

என் வாழ்க்கையின் பேரவா இது தான்; ஒவ் வொருவனுடைய வீட்டு வாசலுக்கும் உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு போகக் கூடிய ஓர் இயக் கத்தை ஏற்படுத்தி அதை நடத்தி வைத்தல்; பின் னர் ஜனங்களைத் தங்கள் விதியைத் தாங்களே நிர் ணயித்துக் கொள்ளும்படி விட்டுவிடுதல். வாழ்க்கை யின் மிக முக்கியமான பிரச்னைகளைப்பற்றி நமது மூதாதைகள் கொண்டிருந்த கருத்துக்களையும், பிற நாட்டாரின் கொள்கைகளையும் அவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தற்போது அயல் நாட்டார் என்ன செய்து வருகிறார்களென்பதையும் அவர்கள் பார்க் கட்டும். பின்னர் தங்களுக்குத் தாங்களே முடிவு செய்து கொள்ளட்டும். இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதே நமது வேலை; இயற்கைச் சட்டங்களின்படி அவைதாமாக மாறுதலடையும்.

பெண்களைப் பொறுத்த வரையில் மிக முக்கிய மான பிரச்னைகள் பல உண்டு என்பதில் சநதேக மில்லை. ஆனால் ”கல்வி” என்னும் மந்திரத்தினால் தீர்த்துவைக்க முடியாதது அவற்றில் எதுவு

தற்போது நீங்கள் பெற்று வரும் கலவி நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அதிலு ஒரு பெரிய பிரதிகூலத்தினால் அந்த நல்ல * ளெல்லாம் அமிழ்த்தப்பட்டு விடுகின்றன. முக்கி யமாக, அது மனிதத்தன்மை அளிக்கும் கலவியன்று; முழுதும் எதிர்மறைக் கல்வி இது கெட்டது, அது கெட்டது என்றே எப்பொழுதும் கூறும் எதிர் மறை யான பயிற்சி மரணத்தை விடக் கொடியதாகும். இப்பொழுது நம் நாட்டில், குழந்தை பள்ளிக்கூடம் சென்றதும் முதன் முதலில் கற்றுக் கொளவதென்ன! தன் தந்தை மூடன் என்பதேயாகும். இரண்டாவ தாக, தன் பாட்டன் பெரிய பைத்தியக்காரனென் றும், மூன்றாவதாகத் தன் உபாத்தியாயாகளெல்லா ரும் ஆஷாடபூதிகள் என்றும், நான்காவதாக, வேத சாஸ்திரங்கள் எல்லாம் வெறும் பொய்க் களஞ் சியங்கள் என்றும் அவன் கற்றுக்கொள்கிறான். அவ னுக்குப் பதினாறு வயதாகும்போது, உயிரற்ற, எலும்பற்ற, எதிர்மறைப் பிண்டமாக இருக்கிறான். எல்லாம் அவனுக்குக் கெடுதலாகவே காணப்படு கின்றன.

அப்பப்பா! பி.ஏ. பட்டத்திற்காக எனன தட புடல்? என்ன ஆர்ப்பாட்டம்? சில நாளைக்குள் அவ் வளவும் பறந்து விடுகின்றன. கடைசியில் அவர்கள் கற்றுக் கொள்வது தான் என்ன? நம்முடைய சமயம் பழக்க வழக்கங்கள் எல்லாம் கெட்டவை என்றும், மேனாட்டாருடையனவெல்லாம் நல்லவையென்றும் கற்றுக்கொள்கிறார்கள்; அவ்வளவுதான்! இக்கல்வியினால் அவர்கள் தங்கள் பசிப் பிணியைக்கூட நீக்கிக் கொள்ள முடிவதில்லை. இத்தகைய உயர் தரக் கல்வி இருந்தாலென்ன? போனாலென்ன? இதை விட ஜனங்கள் சிறிதளவு தொழிற்கல்வி பெறக்கூடுமா னால் நன்மையுண்டு. ” உத்தியோகம், உத்தியோகம்’ என்று அடித்துக்கொண்டு திரிவதற்குப் பதிலாக அவர்கள் ஏதேனும் தொழில் செய்து ஜீவனோபாயம் தேடிக்கொள்வார்கள்.

கழுதையை நன்கு புடைத்தால் அது குதிரை யாகிவிடுமென்று யாரோ சொல்லக் கேட்டு அவ் விதமே ஒருவன் செய்தான் என்றொரு கதை உண்டு. இந்தகைய முறையிலேயே நமது சிறுவர்களுக்குக் கல்வியளிக்கப்பட்டு வருகிறது. இம்முறை தொலைய வேண்டும்.

மனிதனுக்குள் ஏற்கெனவே இருக்கும் பூரணத் துவத்தை விகசிக்கச் செய்வதே கல்வியாகும்.

கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணித்து விடுவதன்று. அவ்விதம் திணிக்கப்படும் விஷயங்கள் அங்கே வாணாள் முழு தும் செரியாமல் தொந்தரவளித்துக் கொண்டிருக் கின்றன. அதனால் என்ன பயன்? கற்கும் விஷயங்கள் நன்கு ஜீரணமாகவேண்டும். அவை உயிர் ஊட்டுவன வாய், மனிதத்தன்மை தருவனவாய், ஒழுக்கமமைப் பனவாயிருக்க வேண்டும். நீங்கள் ஐந்தே ஐந்து கருத்துக்களை ஜீரணித்துக் கொண்டு அவற்றை உங் கள் வாழ்க்கையிலும், நடத்தையிலும் ஊடுருவி நிற் கும்படி செய்வீர்களானால், ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விடப் பெரிய கல்விமான்களாவீர்கள்,

உயர்தரக் கல்வியின் உபயோகம் யாது? வாழ்க் கையின் பிரச்னைகளைத் தீர்த்துவைத்தல் எப்படி எனக் கண்டு பிடிப்பதே. நவநாகரிக உலகின் மிக சிறந்த அறிஞர்களின் கவனத்தை யெல்லாம் தற் போது கவர்ந்திருப்பது இவ்விஷயமேயாகும். ஆனால் நம் தேசத்தில் அதற்குரிய வழி ஆயிரம் ஆயிர மாண்டுகளுக்கு முன்னாலேயே கண்டு பிடிக்கப்பட்டு விட்டது.

ஒழுக்கமளிப்பது, மனோவலிமை தருவது, புத் தியை விசாலிக்கச் செய்வது, ஒருவனைத் தன் வலி மைகொண்டு நிற்கச் செய்வது ஆகிய இத்தகைய கல்வி நமக்கு வேண்டும்.

மனிதத் தன்மை அளிப்பதே கல்விப்பயிற்சி யின் இலட்சியமாயிருத்தல் வேண்டும். அதற்குப் பதிலாக நாம் எப்போதும் வெளிப்புறத்துக்கு மெருகு கொடுப்பதிலேயே ஈடுபட்டிருக்கிறோம். உள் ளே ஒன்று மில்லா திருக்கையில் வெளிப்புறத்துக்கு மெருகிட்டுக் கொண்டிருப்பதால் யாது பயன்?

பண்டைக் காலத்துக் குருகுலங்களைப் போன்ற கல்வி ஸ்தாபனங்கள் தேவை. அவற்றில் மேனாட் டுப் பௌதிக சாஸ்திரத்துடன் வேதாந்தமும் கற் பிக்கப்பட வேண்டும். பிரம்மசரியம், சிரத்தை , தன் னம்பிக்கை என்னும் அடிப்படைகளின் மீது கல்வி அளிக்கப்பட வேண்டும்.

ஆசிரியன் தான் கற்பிப்பதாக எண்ணுவதினா லேயே எல்லாவற்றையும் கெடுத்துவிடுகிறான். சகல ஞானமும் மனிதனுக்குள் இருக்கிறதென்று வேதாந் தம் சொல்கிறது. அந்த ஞானம் ஒரு சிறுவனுக் குள்ளும் இருக்கிறது. அதை எழுப்புதலே தேவை. அதுவே ஆசிரியனின் வேலை. சிறுவர்கள் தங்கள் சொந்த அறிவை உபயோகப்படுத்தவும், தங்கள் கால், கை, கண், செவி இவற்றை முறையாகப் பயன் படுத்தவும் தெரிந்துகொள்ளும் அளவில் நாம் அவர்களுக்கு உதவி செய்தால் போதும். மற்ற எல்லாம் தாமே எளிதாகிவிடும்.

உங்களால் ஒரு செடியை வளர்க்க முடியுமா? அது போன்றே ஒரு குழந்தைக்கு நீங்கள் எதுவும் கற்பித்தல் இயலாத காரியம். செடி தானே வளர உதவி மட்டுமே நீங்கள் செய்ய முடியும். கல்வி விஷயமும் இவ்வாறு தான். கல்வி என்பது உள்ளி ருந்து விகசிப்பது. அது தன் இயற்கையினால் வளர்ச் சியுறுகிறது. அதன் வளர்ச்சிக்குத் தடையுள்ளவை களை நீக்குவது மட்டுமே நீங்கள் செய்யக் கூடிய தாகும்.

நமது நாட்டின் கல்வி முழுவதும், பாரமார்த்திகக் கல்வியாயினும் சரி, லௌகிகக் கல்வியா யினும் சரி, நம்கையிலேயே இருத்தல் வேண்டும். கூடியவரையில் தேசீயவழிகளில் தேசீய முறைகளி லேயே கல்வி யளித்தல் வேண்டும்.

நமக்கு வேண்டுவதென்னவென நீங்கள் அறி வீர்கள், அன்னிய நாட்டு ஆதிக்கமின்றி நமது சொந்த ஞானத் துறைகள் எல்லாவற்றையும் நாம் ஆராய்ச்சி செய்தல் வேண்டும். அத்துடன் ஆங்கில பாஷையையும், மேனாட்டு பௌதிக சாஸ்திரத்தை யும் கற்கவேண்டும். இவையல்லாமல், தொழிற் கல் வியும், தொழில் வளர்ச்சிக்குரிய சகல அறிவும் நமக்குத் தேவை. இதன் மூலம், படித்தவர்கள் உத்தியோகம் தேடி அலைவதற்குப் பதிலாக, தங் களுக்கு வேண்டிய அளவு சம்பாதித்துக் கொள்ளவும், கஷ்ட காலத்துக்குச் சிறிது பொருள் சேர்த்து வைக்கவும் சாத்தியமாதல் வேண்டும்.

சுடர் விட்டெரியும் தீயை யொத்த தூய ஒழுக் கமுடைய ஆசிரியனோடு ஒருவன் தன் குழந்தைப் பிராயத்திலிருந்து வசித்தல் வேண்டும். உயரிய கல் விப் பயிற்சிக்கு உயிருள்ள ஓர் உதாரணமாக அவ்வா சிரியன் இருத்தல் வேண்டும்.

பொய் சொல்லுதல் பாவம் என்று படிப்பதால் மட்டும், பயன் என்ன? ஒவ்வொரு சிறுவனும் பூரண பிரம்மசரியத்தை அனுஷ்டிக்கு மாறு பயிற்சி செய் யப்பட வேண்டும். பக்தியும் சிரத்தையும் அப்போது தான் உண்டாகும். பக்தி சிரத்தையில்லாத ஒருவன் பொய் கூறாதிருப்பது எங்ஙனம்?

சிறுவர்களுக்குத் தகுந்த தான ஒரு புத்தகம்கூட நம் நாட்டில் இல்லை. இராமாயணம், மகாபாரதம், உபநிஷதங்கள் இவற்றிலிருந்து சிறு கதைகளடங்கிய சில புத்தகங்களைத் தாய் மொழியிலும், ஆங்கிலத் திலும் நாம் தயாரிக்க வேண்டும், அவை மிக எளிய நடையில் எழுதப்படவேண்டும்.

9. சமூக சீர்திருத்த முறை

9. சமூக சீர்திருத்த முறை

நீங்கள் உண்மையான சீர்திருத்தக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலா வது உணர்ச்சி, உங்கள் சகோதரர்களுக்காக உண் மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா? இவ்வுலகில் இவ்வளவு துயரமும், அறியாமையும், மூட நம்பிக் கையும் இருந்து வருவது கண்டு உண்மையிலேயே மனம் புண்ணாகிறீர்களா? இந்நாட்டில் வாழும் மனி தர்கள் எல்லாம் உங்கள் சொந்தக் சகோதரர்களே என உணர்கிறீர்களா? இவ்வுணர்ச்சி உங்கள் உடம்பு முழுவதிலும் ஊறிப் போயிருக்கிறதா? அது உங்கள் குருதியில் கலந்து ஓடுகிறதா? உங்கள் நரம்புகளில் அது துடிக்கிறதா? உங்கள் உடம்பின் ஒவ்வொரு தசை நாரிலும் அது ஊடுருவி நிற்கிறதா? அவ்வ நு தாப உணர்ச்சி உங்களுக்குள்ளே பொங்கித் ததும்பு கின்றதா? அங்ஙனமாயின் முதற்படி ஏறிவிட்டீர்கள். அடுத்தாற்போல் பரிகாரம் ஏதேனும் கண்டுபிடித் தீர்களா என்று சிந்திக்கவேண்டும். பழைய கொள் கைகள் மூடக் கொள்கைகளாயிருக்கலாம். ஆனால் அம் மூடக்கொள்கைத்திரளின் உள்ளே சத்தியமென் னும் தங்கக் கட்டிகள் புதைந்து கிடக்கின்றன. குப்பையைப் போக்கி விட்டுத் தங்கத்தை மட்டும் வைத்துக்கொள்ள நீங்கள் உபாயம் கண்டு பிடித்தி ருக்கிறீர்களா? மூன்றாவது இன்னும் ஒன்று அவ சியம். உங்கள் நோக்கம் என்ன? பொன்னாசை, புகழாசை, அதிகார ஆசை என்னும் இவை உங் களிடம் அறவே யில்லை யென்று நிச்சயமாய்ச் சொல்ல முடியுமா?

ஆயிரக்கணக்கான மனிதர்களால் மேடைப் பிரசங்கங்கள் செய்யப்பட்டு விட்டன. ஹிந்து சமூகத் தின் மீதும், ஹிந்து நாகரிகத்தின் மீதும் கணக்கில் லாத கண்டனங்களைச் சொரிந்தாகிவிட்டது. எனி னும் காரியத்தில் நற்பயன் எதுவும் விளையக்காணோம். இதன் காரணமென்ன? காரணங் கண்டு பிடிக்க அதிக சிரமப்படவேண்டியதில்லை. கண்டனத்தில் தான் காரணம் இருக்கிறது. நன்மை புரிவதற்கு வழி கண்டனம் செய்தல் அன்று.

நமது நவீன சீர்திருத்த இயக்கங்கள் எல்லாம் பெரும்பாலும் மேனாட்டு உபாயங்களையும் மேனாட்டு வேலை முறைகளையும் யோசனையின்றிப் பின்பற்று வன வாயிருப்பது குறித்து வருந்துகிறேன். இவை நிச்சயமாய் இந்தியாவுக்குப் பயன் படமாட்டா.

இந்தியாவில் சீர்திருத்தக்காரர்கள் எல்லோரும் ஒரு பெரிய தவறு செய்தார்கள். புரோகிதக் கொடுமை முதலிய பயங்கரங்கள் எல்லாவற்றிற் கும் அவர்கள் மதத்தையே காரணமாகக் கொண்டு அழிக்க முடியாததான சமய மென்னும் கட்டிடத் தை இடிக்க முற்பட்டார்கள். விளைந்த தென்ன? தோல்வியே!

எனக்குச் சீர்திருத்தத்தில் நம்பிக்கையில்லை, வளர்ச்சியிலேயே நம்பிக்கை உண்டு. நானே கட வுள் ஸ்தானத்தில் இருப்பதாய் எண்ணிக்கொண்டு, ”இவ்வழிதான் போக வேண்டும்; அவ்வழி நோக்கக் கூடாது” என்று சமூகத்துக்குக் கட்டளைகள் பிறப் பிக்க எனக்குத் துணிவில்லை.

என்னுடைய இலட்சியம், தேசீய வழிகளில் வளர்ச்சி விஸ்தரிப்பு, அபிவிருத்தி என்னும் இவை யாகும்.

மனிதன் எந்நிலையிலுள்ளானோ அந்நிலையில் அவனை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து மேலே தூக்கி விடுங்கள். நீங்களும் நானும் என்ன செய்ய முடி யும்? ஒரு குழந்தைக்கேனும் அது அறியாத ஒன்றை நீங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமா? ஒரு காலும் முடியாது. குழந்தை தனக்குத்தானே பாடங் கற்றுக் கொள்கிறது. அதற்குச் சந்தர்ப்பங்களை ஏற்படுத் திக் கொடுத்தலும், வழியிலுள்ள தடைகளை நீக்குத லுமே உங்கள் கடமை. செடி வளர்கிறது. அதை வளரச் செய்பவர்கள் நீங்களா? அதைச் சுற்றி வேலி எடுத்து ஆடு மாடு மேயாமல் பார்த்துக் கொள்வதே உங்கள் கடமை. செடி தானே வளர்கிறது.

தேசீய வாழ்வுக்கு உணவு என்ன வேண்டுமோ – அதை அளியுங்கள். ஆனால் வளர்ச்சி அதனுடையதேயாகும். அதன் வளர்ச்சி குறித்து அதற்கு யாரும் கட்டளையிட முடியாது.

முற்றும் மூடநம்பிக்கை கொண்டதும், முழு அறிவீனமுள்ளதுமான ஸ்தாபனங்களைக் கூடக் கடுமொழியால் கண்டிக்க வேண்டாம். ஏனெனில் அவை முற்காலத்தில் ஏதோ ஒரு நன்மையையே செய்திருக்கவேண்டும்.

உலகில் வேறெந்த நாட்டிலுள்ள ஸ்தாபனங் களும், இந்நாட்டு அமைப்புகளை விட உயர்நோக்கங் கள் கொண்டவை அல்ல என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

தற்போது முழுத் தீமைகளாகக் காணப்படும் வழக்கங்கள் கூட முற்காலத்தில் ஜீவ சக்தியளிப் பனவாயிருந்திருக்கின்றன. ஆதலின் அவற்றை நாம் நீக்க வேண்டுமானால் அவ்வழக்கங்களைச் சபித்துக் கொண்டு அம்முயற்சியில் இறங்க வேண்டாம். நமது ஜாதியின் பாதுகாப்புக்காகச் செய்திருக்கும் அரிய வேலைக்கு நன்றியறிதலுடன் அவற்றிற்கு ஆசி கூறிக்கொண்டே விலக்குவோமாக.

என் தேசத்தாரைக் கண்டிப்பதற்கு நான் ஒருப்படேன் அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், ”நீங்கள் செய்திருப்பது நன்று; ஆனால் இன்னும் அதிக நன்றாய்ச் செய்ய முயலுங்கள்” என்பதே.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மோக்ஷத் தைத்தானே தேடிக் கொள்ள வேண்டும். வேறு வழி கிடையாது. தேசங்களும் அப்படியே. தற்போ துள்ளவற்றை விடச் சிறந்த புதிய ஸ் தாபனங்கள் ஏற்படும் வரையில், பழைய ஸ்தாபனங்களைத் தகர்க்க முயலுதல் பெருவிபத்தாக முடியும். வளர்ச்சி எப் போதும் படிப்படியாகவே ஏற்படக்கூடும்.

இந்தியாவில், ஒரு சமூக சீர்திருத்தத்தைப் பர வச் செய்வதற்கு மார்க்கம், அப்புதிய ஏற்பாட் டால் பாரமார்த்திக வாழ்வு எந்த அளவில் மேன் மையுறும் என்று காட்டுவதே யாகும். அரசியலுக் கும் இது பொருந்தும். அதன் மூலம் தேசத்தின் ஆன்மஞானம் எந்த அளவில் வளர்ச்சியுறும் என்று காட்டியே அரசியல் பிரசாரம் செய்ய வேண்டும்.

சமூகச் சீர்திருத்தம் எனும் வீண் முயற்சியில் இறங்க வேண்டாம். பாரமார்த்திகச் சீர்திருத்தம் முதலில் ஏற்படாவிட்டால் வேறெந்தச் சீர்திருத்த மும் ஏற்படமுடியாது.

விஷயத்தின் மூலவேருக்கே நீங்கள் போக வேண்டும். அதுவே அடிப்படையான சீர்திருத்தமா கும். தீயை அடியில் வைத்து விடுங்கள். அது எரிந்து எரிந்து மேலெழும்பி வரட்டும்.

உங்கள் உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இத யத்தைத் திறந்து விடுங்கள். உங்களில் ஒவ்வொரு வரும், சுமை முழுதும் தம் தோள்களிலேயே சுமந் திருப்பதாய் எண்ணிக் கொண்டு உங்கள் நாட்டின் கதிமோக்ஷத்துக்காகவும் உலகத்தின் கதிமோக்ஷத் துக்காகவும் உழையுங்கள்.

நோயின் காரணங்களை வேருடன் களைந்து விட லே என் சிகிச்சை முறையாகும்; அவற்றை மூடி வைப்பதன்று.

நன்மையான சமூக மாறுதல்கள் எல்லாம் உள்ளே வேலை செய்யும் பாரமார்த்திக சக்திகளின் வெளித்தோற்றமே யாகும். இந்த சக்திகள் வலிமை பொருந்தியிருப்பின், சீராக அமையின், சமூகமும் அதற்கிணங்க ஒழுங்காக அமையும்.

8. பாரமார்த்திக அடிப்படை

8. பாரமார்த்திக அடிப்படை

நாம் கவனம் செலுத்தற்குரிய முதலாவது வேலை இதுவாகும்; நமது உபநிஷதங்களிலும் சாஸ் திரங்களிலும் புராணங்களிலும் உள்ள அதி ஆச்சரி யமான உண்மைகளை அந்நூல்களிலிருந்து வெளிக் கொண்டு வந்து நாடெங்கும் விஸ்தாரமாகப் பரப்புதல் வேண்டும்.

இந்தியாவில் அபிவிருத்தி எதுவும் ஏற்பட வேண்டுமானால் முதலில் சமய எழுச்சி உண்டாக வேண்டும். ஆதலின் சமூதாய, அரசியல் கருத்துக் களைப் பரப்புவதற்கு முன்னால் நாட்டைப் பார மார்த்திக வெள்ளத்தில் மூழ்குவியுங்கள்.

தர்மபூமியாம் இந்நாட்டில் ஆத்ம வித்யா தானம் என்னும் முதன்மையான அறத்தை நாம் மேற்கொள்வோமாக. ஆனால் அப்பேரறத்தை இந்தி யாவின் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்திவிடல் கூடாது.

சமூகப் புரட்சிக்காரர்கள் எல்லோரும் (அல்லது அவர்களுடைய தலைவர்களேனும்) தங்களுடைய சமதர்மக் கொள்கைகளுக்கெல்லாம் பாரமார்த்திக அடிப்படை ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய அடிப்படை வேதாந்தமேயாகும்,

பலாத்காரமோ, அரசாங்க அதிகாரமோ, கடுமையான சட்டங்களோ சமூக நிலைமையை மாற்ற முடியாது. சமூகத் தீமைகளை நீக்கக் கூடியது பார மார்த்திகப் பயிற்சி ஒன்றே யாகும்.

எனக்கு அரசியலில் நம்பிக்கை கிடையாது. கடவுளும் சத்தியமுமே இவ்வுலகில் உண்மை அரசி யல் ஆகும். மற்றவையெல்லாம் வெறுங்குப்பை.

இந்தியாவில் நாம் எந்த அரசியல் ஏற்பாடுகள் வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறோமோ அவை ஐரோப்பாவில் எத்தனையோ ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. மேனாட்டார் பல நூற் றாண்டு காலம் சோதனை செய்து அவை பயனற்றவை என்னும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அரசியல் ஆட்சி சம்பந்தமான ஸ்தாபனங்கள், ஏற்பாடுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாய் உபயோகமற்றவை என்று தள்ளப்பட்டிருக்கின்றன. ஐரோப்பா அமைதி இழந்து எப்பக்கம் திரும்புவதென்று தெரியாமல் தவிக்கின்றது…. மனித சமூகத்தை வாள் முனையினால் ஆளுதல் சிறிதும் பயனற்றதாகும். ”பலாத்காரத் தினால் அரசாங்கம்” என்னும் கொள்கை எந்த இடத்திலிருந்து தோன்றிற்றோ அதே இடந்தான் முதலில் இழிவுற்றுத் தாழ்வடைந்து துகள் துக ளாய்ப் போகிறதென்பதை நீங்கள் காணலாம். ஜட சக்திக்குத் தோற்றமளித்த ஐரோப்பாவானது, தனது அடிப்படையை மாற்றிக்கொள்ளாவிடில், தன் வாழ் விற்குப் பாரமார்த்திகத்தை ஆதாரமாகக் கொள் ளாவிடில், ஐம்பது ஆண்டுகளுக்குள் அது மண்ணோடு மண்ணாவது நிச்சயம்.

ஜனங்களால் நடத்தப்படும் புதிய ஆட்சிமுறை ஒன்று தோன்றி வருகிறதென்பதற்கு அறிகுறிகள் ஏராளமாய்க் காணக் கிடக்கின்றன. அவ்வாட்சி முறையைச் சமுதாய ஆட்சி என்றாலும், வேறு எப் பெயரிட்டழைத்தாலும் கவலையில்லை. தங்கள் வாழ்க் கைத் தேவைகள் பூர்த்தி செய்யப் படவேண்டு மென்று ஜனங்கள் கேட்கப்போவது நிச்சயம். வேலை குறைய வேண்டுமென்றும், கொடுமையும் யுத்தமும் ஒழிய வேண்டுமென்றும், வயிறு நிறைய உணவு வேண்டுமென்றும் ஜனங்கள் வலியுறுத்துவார்கள். ஆகவே, தற்கால நாகரிகமோ, வேறெந்த நாகரிக மோ சமயத்தையும் மக்களின் நற்குணத்தையும் அடிப்படையாகக் கொண்டாலன்றி நிலைத்து நிற்குமென்பது என்ன நிச்சயம்? சமயமே வாழ்வின் மூல வேர் என்பதை நம்புங்கள். அது சரியாயிருந் தால் எல்லாம் சரியாயிருக்கும்.

மனிதர்களை சட்ட மன்றத்தின் சட்டத்தினால் தர்மாத்மாக்களாகச் செய்ய முடியாதென்பது உங்களுக்குத் தெரியும்…. ஆகையினால் தான் அரசியலைவிட மதம் முக்கியமானதென்று சொல்லு கிறேன். மதம் வாழ்க்கையின் வேர்; சன்மார்க்கத் தத்துவங்களுடன் அடிப்படையான சம்பந்தமுடையது.

சட்டம், அரசாங்கம், அரசியல் ஆகியவை முடி வான நிலைகளல்ல என்பதை அனை வரும் ஒப்புக் கொண்டே யாக வேண்டும். மக்களின் உண்மை நலம் அவைகளுக்கப்பால் இருக்கிறது. அங்கே சட் டம் தேவையே யில்லை.

வாழ்வின் அடிப்படை, சட்டம் அன்று எனக் கிறிஸ்து நாதர் கண்டிருந்தார். சன்மார்க்கமும் தூய்மையுமே வாழ்விற்குப் பலமளிப்பவையென்று அவர் உணர்ந்திருந்தார்.

இங்கிலாந்து செய்யக் கூடியதெல்லாம் என்ன? இந்தியா தன் கதி மோட்சத்தைத் தானே தேடிக் கொள்வதற்கு உதவி செய்யக்கூடும். அவ்வளவு தான். இந்தியாவின் குரல்வளையில் கைவைத்துக் கொண் டி.ருக்கும் அன்னியர் வார்த்தையைக் கேட்டு நடப் பதனால் ஏற்படும் அபிவிருத்தி எதுவும் பயனளியா தென்பது என் கருத்து மிக உயரிய வேலையாயி னும், அடிமைத் தொழிலாளியினால் செய்யப்படுங் காலத்து அது இழிவுறுகிறது.

தேவைகள் உங்களுக்கா , அல்லது உங்களை ஆள்வோருக்கா என்று சொல்லுங்கள். உங்களுக்கானால், அவைகளை யார் பூர்த்தி செய்ய வேண்டும்? அவர் களா? நீங்களே யா? பிச்சைக்காரனின் தேவைகள் எப்போதும் பூர்த்தி செய்யப்படுவதில்லை. உங் களுக்கு வேண்டுவனவெல்லாம் அரசாங்கம் கொடுத்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அவற்றைவைத்து நிர்வகிக்க மனிதர்கள் எங்கே? எனவே முதலில் மனிதர்களைத் தயார் செய்யுங்கள். மனிதர்கள் நமக்கு வேண்டும். சிரத்தையில்லாவிட்டால் மனிதர்கள் எங்கிருந்து வாருவார்கள்?

முதலில் பாரமார்த்திக அறிவைப் பரப்புங்கள். அதனுடன் லௌகிக அறிவும், மற்ற எல்லா அறிவும் தாமே வரும். ஆனால் சமய சம்பந்தமில்லாத லௌகிக அறிவைப் பெற முயன் றீர்களாயின், இந்தி யாவைப் பொறுத்தவரை, உங்கள் முயற்சி வீணே யாகும். ஜனங்களிடம் அதற்குச் செல்வாக்கு எப் போதும் உண்டாகாது. இதைத் தெளிவாய் உண ருங்கள்.

வருங்கால இந்தியாவை நிர்மாணிப்பதில் முதல் காரியம் சமய ஒற்றுமையேயாகும். யுக யுகாந்தர மாக நின்று நிலவி வரும் பாரத தேசம் என்னும் பாறையில் செதுக்கி அமைக்க வேண்டிய முதற்படி இதுவேயாம். ‘ஹிந்துக்களாகிய நமக்குச் சில பொது இலட்சியங்கள் உண்டு. நமது நன்மையையும் நமது ஜாதியின் நன்மையையும் முன்னிட்டு அற்பச் சண்டைகளையும் சிறு வித்தியாசங்களையும் விட்டு விடவேண்டும்” என்னும் இப்பாடம் நம்மெல்லோ ருக்குமே கற்பிக்கப்படல் அவசியம்.

சிதறிக் கிடக்கும் பாரமார்த்திக சக்திகளை ஒன்று திரட்டுதலே இந்நாட்டில் தேசீய ஒற்றுமை முயற்சியாம். பாரமார்த்திகம் என்னும் கீதத்திற்கு எவரெவருடைய இதயங்கள் ஒத்துத் தாளம் போடு கின்றனவோ அத்தகையவர்கள் சேர்ந்த சமூகமே இந்திய சமூகமாகும்.

உலகமனைத்தும் உண்மையில் ஒன்றே என்னும் உயர் இலட்சியத்தை அனுஷ்டானத்தில் கொண்டு வராமல் இந்தப் பாரத நாட்டை எவரும் புனருத் தாரணம் செய்ய முடியாது.

இரும்பு போன்ற தசை நார்கள், எஃகினை யொத்த நரம்புகள், எதனாலும் தடுக்க முடியாத மனோ வலிமை ஆகிய இவையே நமது தேசத்திற் குத் தற்போது வேண்டியவை. இந்த புவனத்தில் இரகசியங்களை யெல்லாம் ஆழ்ந்து அறியக் கூடிய மனோ வலிமை; ஆழாழியின் அடித்தலத்துக்குப் போக வேண்டியிருந்தாலும், காலனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வந்தாலும் எடுத்த காரியத்தை எவ்வாறேனும் முடிக்கும் அஞ்சா நெஞ்சம்; இவை நமக்கு வேண்டும். எல்லாம் ஒன்றே என்னும் அத் வைத இலட்சியத்தை அறிந்து சாதனத்தில் கொண ரும்போது தான் அத்தகைய மனோவலிமையை நாம் உண்டுபண்ணவும், நிலை பெறச் செய்யவும் இயலும்.

உபநிஷதங்களின் மகத்தான உண்மைகள் உங் கள் முன்னால் இருக்கின்றன. அவற்றை உணருங்கள். அவற்றிற்கிணங்க வாழ்வு நடத்துங்கள். அப்போது இந்தியாவின் கதி மோட்சம் தானே கிட்டுவிடும்.

நமக்கு வேண்டுவது வலிமை, வலிமையே என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வலிமையின் பெருஞ் சுரங்கம் உபநிஷதங்களாகும். உலக முழு வதிற்கும் நவசக்தி ஊட்டுவதற்குப் போதிய வலி மை 2.பநிஷதங்களில் இருக்கிறது. அவற்றின் மூல மாய் உலகத்துக்கே புத்துயுரும், புதிய ஊக்கமும் தரலாம். எல்லாத் தேசங்களையும், சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்களுக்குள்ளே பலவீனர்கள், துன்புற்றவர்கள், கொடுமைக்காளானவர்கள் ஆகிய அனைவரையும் தத்தம் பலங்கொண்டு நின்று விடுதலைபெறும்படி உபநிஷதங்கள் சங்க நாதம் செய்து அழைக்கின்றன. சரீர விடுதலை, மனோ விடுதலை, ஆன்ம விடுதலை எனும் இவையே உபநிஷதங்கள் உ.பதேசிக்கும் மூல மந்திரங்களாகும்.

உபநிஷதங்களிலிருந்து வெடி குண்டைப் போல் கிளம்பி அஞ்ஞான இருட்பாறைகளைத் தகர்க்கும் மந்திரம் ஒன்று உண்டு. அது நிர்ப்பயம். -அஞ்சாமை என்பதே. அஞ்சாமை மதம் ஒன்றே தற்போது கற்பிக்கப் படவேண்டிய மதம்.

எழுங்கள்! கண் விழியுங்கள்; பலவீனம் என்னும் இந்த மாயவசியத்தினின்றும் விடுபடுங்கள். உண் மையில் எவனும் பலவீனனல்லன். ஆன்மா எல்லை யற்றது; சர்வ சக்தி வாய்ந்தது; சர்வமும் அறிந் தது. எழுந்து நில்லுங்கள். ‘ ‘ என்னுளே ஆண்ட வன் உளன்” என்று அறைகூவுங்கள். தமோகுண மும், பலவீனமும், மனோபிரமையும் மிகுந்து நமது ஜாதியை அழுத்தி வருகின்றன. ஓ, ஹிந்துக்களே! அந்த பிரமையினின்று விடுதலை பெறுங்கள் .

உங்களுடைய உண்மை இயற்கையை உணருங்கள். மற்றவர்களுக்கும் அவரவருடைய உண்மை இயற்கையை உணர்த்துங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். ஆன் மா விழித்தெழுந்து வினை செய் யத் தொடங்குங்கால் சக்தி, மகிமை, தூய்மை ஆகிய உயர் நலங்களெல்லாம் தாமே வரும்.

‘அகம் (நான்) பிரம்மம்” என்று ஓயாது சொல்லிக் கொள்ளுங்கள். இந்த மந்திரம், மன தில் படர்ந்திருக்கும் மாசைப் போக்கி, உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் அளவற்ற சக்தியை வெளிக்கொண்டு வரும்.

திரும்பிச் செல்மின், வலிமையும், ஜீவசக்தி யும் நிறைந்திருந்த பண்டைக் காலத்துக்குத் திரும்பிச் செல்மின். பண்டை வாழ்வெனும் அமுத ஊற்றிலிருந்து ஜீவ நீரை நிரம்பப் பருகி முன் போல் மீண்டும் பலசாலிகளாகுமின், இந்தியாவில் வாழ்வுக்கு நிபந்தனை இது ஒன்றேயாம்.

ஹிந்து சமூக முன்னேற்றத்துக்கு மதத்தை அழித்தல் அவசியமில்லையென்று நான் கூறுகிறேன். தற்போது நமது சமூகம் தாழ்ந்த நிலையிலிருப் பதற்கு மதம் காரணமென்றும் மதத்தை முறை படி கைக்கொள்ளாததே காரணமென்றும் சொல் கிறேன். இதில் ஒவ்வொரு வார்த்தையையும் நமது பழைய நூல்களிலிருந்து நிரூபிக்கச் சித்தமா யிருக்கிறேன். என்னுடைய போதனை இதுவேயா கும். இதை நிறைவேற்றி வைப்பதற்கே நமது வாழ் நாள் முழுதும் நாம் போராடவேண்டும்.

7. தாயகத்தில் தொண்டு – உண்மைத் தொண்டர்களின் பயிற்சி

7. தாயகத்தில் தொண்டு – உண்மைத் தொண்டர்களின் பயிற்சி

ஆன்மத் தூய்மையினின்றெழும் தீவிர உற்சா கங் கொண்டவர்கள்; இறைவனிடம் அழியா நம் பிக்கையை அரணாகப் பெற்றவர்கள்; ஏழைகளிட மும், தாழ்ந்தவர்களிடமும், ஒடுக்கப்பட்டவர்களிட மும் கொண்ட அநுதாபத்தினால் சிங்கத்தையொத்த தைரிய மடைந்தவர்கள்! இப்படிப் பட்ட ஸ்திரீ புரு ஷர்கள் நூறாயிரம் பேர் வேண்டும். இவர்கள் மோட்சம், பரோபகாரம் தாழ்ந்தோரின் முன்னேற் றம், சமூக சமத்வம் என்னும் கொள்கைகளைப் பிரசாரம் செய்து கொண்டு இந்நாட்டின் ஒரு மூலை யிலிருந்து மற்றொரு மூலைவரை ஆட்சி செலுத்து வார்கள்.

தங்களுடையதெனக் கூடிய எல்லாவற்றையும் தேசத்திற்காகத் தியாகம் செய்யச் சித்தமாயிருப் பவர்கள்; உள்ளும் புறமும் உண்மை வடிவானவர் கள், —இத்தகைய மனிதர்கள் தோன்றும் போது இந்தியா ஒவ்வொரு துறையிலும் பெருமை பெறும்.

சமூக, அரசியல் ஏற்பாடுகள் எல்லாவற்றிற்கும் அடிப்படை மனிதனுடைய குணாதிசயமேயாகும். ஒரு சமுதாயம் குணத்திற் சிறந்து பெருமை பெறு வது அத்தேசத்தின் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களைப் பொறுத்ததன்று; அச்சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நல்லவர்களாய், பெருமை வாய்ந்தவர்களா யிருப்பதையே பொறுத்ததாகும்.

என்னைத் தொடர்ந்து வருவோர் மரணம் நேரி னும் உண்மை பிறழாதவர்களா யிருக்க வேண்டும். அத்தகையவர்களே எனக்குத் தேவை. ஜயாபஜயங் களைப் பற்றி எனக்குக் கவலையில்லை… இயக்கம் தூய் மையா யிருக்க வேண்டும். இன்றேல் இயக்கமே வேண்டாம்.

இவ்வுலகிலுள்ள செல்வ மனைத்தையும்விட மனிதர்களே அரிய செல்வமாவார்கள்.

ஓ பாக்கியசாலியே! இத்தேசத்தின் மக்களை எவனாவது ஒருவன் தன் இதய பூர்வமாக நேசிப் பானாயின் பாரத நாடு மீண்டும் விழித்தெழுமென்று நான் நம்புகிறேன். அம்மக்கள் எத்தகையவர்கள்? லக்ஷ்மி கடாட்சம் அற்றவர்கள்; அதிர்ஷ்டவீனர்கள்; விவேகம் அறவே இழந்தவர்கள்! மிதித்து ஒடுக்கப் பட்டவர்கள்; நித்தியபட்டினிக்காரர்கள்; சண்டை யிடுபவர்கள், அசூயையுடையவர்கள்; வறுமை அறியாமை என்னும் படு சுழலில் அகப்பட்டு நாளுக்கு நாள் அமிழ்ந்து வருபவர்கள்; கோடிக்கணக் கான இத்தகைய தேச மக்களுக்காக, இந்நாட்டிலே பிறந்த விசால இதயம் படைத்த ஸ்திரீ புருஷர்கள் நூற்றுக்கணக்கானவர் தங்கள் சுகபோக ஆசைகளை யெல்லாம் மறந்து பாடுபடுவதற்கு எப்போது முன் வருகிறார்களோ அப்போது தான் பாரதத்தாய் கண் விழிப்பாள்.

இந்தியப் பாமர ஜனங்களைக் கைதூக்கி விடுதல் என்னும் இந்த ஒரே இலட்சியத்திற்காக இதயத்தையும், ஆன்மாவையும் ஈடுபடுத்தி உழைக்கக்கூடிய இளைஞர்களிடையே வேலை செய்யுங்கள். அவர்களைத் தட்டி எழுப்புங்கள். அவர்களுக்குத் துறவு நெறியில் பற்று உண்டாக்குங்கள். அவ்வேலை இந்தியர்களையே முழுதும் பொறுத்திருக்கிறது.

என்னுடைய வேலைத்திட்டம் இதுவாகும். இளைஞர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஸ்தாபனங்களை இந்தியாவில் ஏற்படுத்தல்; அவர்களைக் கொண்டு உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நமது சமய நூல்களிலுள்ள உண்மைப் பொருள்களை எடுத்துரைக்கச் செய்தல்.

மத்திய கலாசாலையொன்று ஏற்படுத்தி அதில் இளைஞர்களைப் பயில்விக்க வேண்டும். இப்படிப் பயிற்சி பெற்ற பிரசாரகர்களின் மூலமாய் ஏழை களின் வீட்டு வாயிலுக்குக் கல்வியையும், சம யத்தையும் கொண்டு போக வேண்டும். பாமரர் களைக் கைதூக்கி விடுவதற்கான இந்த யோசனையை எங்கும் பரப்புங்கள்.

6. தேசத்தொண்டர்கள்—அவர்களுக்கு வேண்டுவதென்ன?

6. தேசத்தொண்டர்கள்—அவர்களுக்கு வேண்டுவதென்ன?

இதயத்தினின்று எழும் உணர்ச்சி வேண்டும், வெறும் அறிவினால் என்ன பயன் விளையும்? அறிவு சில அடி தூரம் சென்று நின்று விடும். இதயத்தின் மூலமாகவே இறைவன் அருள் சுரக்கின்றான் ஆதலின், சீர்திருத்தக்காரர்களே! தேசபக்தர்களே! உங்கள் இதயத்தில் உணர்ச்சி கொள்ளுங்கள்.

நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா? தேவர்கள், முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடான கோடி மக்கள் இன்று மிரு கங்களினின்றும் அதிக வேற்றுமை யில்லாமல் வாழ் கிறார்களென்பதை உணர்கிறீர்களா? கோடிக்கணக் கான மக்கள் இன்றைய தினம் பட்டினி கிடக் கிறார்களென்பதையும், லட்சக்கணக்கானவர்கள் பல் லாண்டுகளாகப் பட்டினி கிடந்து வருகிறார்களென் பதையும் உணர்கிறீர்களா? அறியாமை என்னும் கருமேகம் இந் நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமை தியைக் குலைத்து உங்களுக்குத் தூக்கமில்லாமல், செய்து விடுகிறதா? அது உங்கள் குருதியில் கலந்து நரம்புக் குழாய்களில் ஓடி இதய அடிப்புகளுடன் சோர்ந்து அடிக்கின்றதா? ஏறக்குறைய அவ்வுணர்ச்சி உங்களைப் பைத்தியமே யாக்கிவிட்டதா? இந்தப் பெரிய துன்பம் ஒன்றே உங்கள் மனதை முற்றும் கவர்ந்து விட்டதா? இதனால் உங்கள் பெயர், புகழ், மனைவி, மக்கள், உடைமை இவை அனைத்தையும், உங்கள் உடலையுங் கூட மறந்து விட்டீர்களா? தேச பக்தனாவதற்கு முதற்படி இதுவேயாகும்.

அன்பு, வெற்றியளித்தல் நிச்சயம், உங்கள் சகோதரரிடத்து உங்களுக்கு அன்பு உண்டா? கடவுளைத்தேட நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? ஏழை கள், துன்பப்படுபவர்கள், பலவீனர்களெல்லோரும் கடவுளர் அல்லரா? அவர்களை ஏன் நீங்கள் முதலில் ஆராதிக்கக் கூடாது? கங்கைக் கரையில் கிணறு தோண்டுவதேன்? அன்பின் அளவற்ற சக்தியில் நம் பிக்கைவையுங்கள், பெயர், புகழ் முதலியவை இங்கு யாருக்கு வேண்டும்? பத்திரிகைகள் என்ன சொல்கின் றன வென்று நான் கவனிப்பதேயில்லை. உங்களிடம் அன்பு இருக்கிறதா? இருந்தால் உங்களால் ஆகா தது ஒன்றுமில்லை. நீங்கள் சுயநலம் அறவே துறந் தவர்களா? அங்ஙனமாயின் உங்களை எதிர்த்து நிற் கக் கூடிய சக்தியாதொன்றுமில்லை. எங்கும் ஒழுக் கமே பிரதானமானது. எத்தகைய பெரும் அபாயத் திலும் இறைவன் உங்களைக் காத்தருள் புரிவா னென்று நம்புங்கள். உங்கள் தாய் நாட்டுக்கு வீரர்கள் தேவை; வீரர்களாயிருங்கள்.

குறுகலான பொந்துகளிலிருந்து வெளிவாருங் கள். உங்களைச் சுற்றிலும் நன்கு நோக்குங்கள். தேசங் கள் எப்படி முன்னேறுகின்றனவென்று பாருங்கள். உங்களுக்கு மனிதர்களிடம் அன்புண்டா? உங்கள் நாட்டினிடம் அன்புண்டா ? அப்படியானால் வருக; இன்னும் பெரிய, சிறந்த இலட்சியங்களுக்காகப் போராடுவோம். பின்னால் திரும்பிப் பார்க்க வேண் டாம்; உங்களுக்கு உயிரினும் அருமையானவர்கள் புலம்பி அழும் சத்தம் கேட்கினும் திரும்பிப் பார்க்க வேண்டாம். முன்னோக்கிச் செல்லுங்கள்.

என் மகனே! அன்புக்கு எப்போதும் தோல்வி கிடையாது. இன்றோ, நாளையோ பல யுகங்களுக்குப் பிறகோ சத்தியம் ஜயமடைதல் நிச்சயம். அன்பே வெற்றி கொள்ளும். உங்கள் சகோதரர்களிடம் உங்களுக்கு அன்புண்டா?

நம்பிக்கை, அனுதாபம்! தீவிர நம்பிக்கை, அதி தீவிர அனுதாபம்! இவை இருப்பின் உயிரும், மரண மும், பசியும், குளிரும் ஒன்றுமில்லையாகும்.

எப்போதும் தன்னம்பிக்கையை வளருங்கள். தீரச் சிறுவர்களே! நீங்களனை வரும் அரும்பெருங் காரியங்களைச் செய்யப் பிறந்தவர்களென்று நம்புங்கள்.

” உலகில் மற்ற எல்லோரும் தத்தமக்குரிய வேலையைச் செய்துவிட்டனர். உலகைப் பரிபூரண மாக்கப் பாக்கியிருக்கும் வேலை நான் செய்ய வேண் டியதே” என்று நம்மில் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். அத்தகைய பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

என் மகனே! உறுதியாக நில். பிறர் உதவியை எதிர்பாராதே. வேறு மனிதர்களின் உதவியைக் காட்டிலும் ஆண்டவனுடைய உதவி எவ்வளவோ பெரிய தல்லவா? பரிசுத்தனாயிரு. பகவானை நம்பு. அவரை நம்பியுள்ள வரை நீ நேர்வழியில் செல்கிறாய். உன்னை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது.

பரஞ்சோதியின் ஒளியை வேண்டிப் பிரார்த்திப்போமாக. காரிருளிலே ஓர் ஒளிக்கிரஹம் தோன் றும். பகவான் நமது கையைப் பிடித்து வழிகாட்டி அழைத்துச் செல்வார்.

ஆண்டவன் மகிமையே மகிமை. அவரே நமது படைத் தலைவர். எனவே, முன்னேறுங்கள், யார் விழுகிறார்கள் என்று திரும்பிப் பார்க்க வேண்டாம். மேலே நடந்து செல்லுங்கள். இவ்வாறே நாம் சென்று கொண்டிருப்போம். ஒருவன் விழுந்தால் மற்றொருவன் அவ்வேலையை ஏற்றுக்கொள்வான்.

சகோதரர்களே! நாம் ஏழைகள்; திக்கற்ற வர்கள். ஆனால் இவ்வுலகில் பரமாத்மாவின் கருவி களாக அமைந்தவர்கள் எல்லோரும் நம்போன்ற ஏழைகளாகவே யிருந்துள்ளார்கள்.

தீரர்களே! வேலை செய்து கொண்டே போங் கள்; விட்டு விடாதீர்கள். ‘முடியாது’ என்ற பேச்சு வேண்டாம். வேலை செய்யுங்கள்; இறைவன் அவ் வேலைக்குத் துணையாயிருப்பான். உங்களிடம் மகா சக்தி கோயில் கொண்டிருப்பதை உணருங்கள்.

குழந்தாய்! நான் வேண்டுவதென்ன தெரியுமா? இரும்பினை யொத்த தசை நார்கள்; எஃகினை யொத்த நரம்புங்கள்; இவற்றினுள்ளே இடியேறு போன்ற வலிவுள்ள மனம்-இவையே எனக்கு வேண்டும். பலம், ஆண்மை , க்ஷத்திரிய வீரியத்துடன் கூடிய பிரம்ம தேஜஸ்-இவை வேண்டும்.

பயம் என்பதையே யறியாத இரும்பினாலான உள்ளமும் இதயமும் தேவை.

உண்மையில் நீங்கள் என் குழந்தைகளானால் யாதொன்றுக்கும் அஞ்சமாட்டீர்கள்; எதைக் கண் டும் தயங்கி நிற்க மாட்டீர்கள். சிங்க ஏறுகளை யொத்திருப்பீர்கள். இந்தியாவை மட்டுமன்று, உலக முழுவதையும் நாம் எழுப்பியாக வேண்டும்.

துறவே முக்கியம். துறவு இன்றி எவனும் பிற ருடைய தொண்டில் தன் இதய முழுவதையும் ஈடு படுத்த முடியாது. சந்நியாசி எல்லோரையும் சமநோக்குடன் பார்க்கிறான். அனை வருக்கும் தொண்டு செய்வதற்கே தன்னைச் சமர்ப்பிக்கிறான்.

சத்தியம், அன்பு, உண்மை உள்ளம் இவற்றை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது. நீங்கள் உண்மை யாளர்களா? உயிரே போகுங் காலத்திலும் சுய நலத்தை மறந்தவர்களா? உங்களிடம் அன்பு உண்டா? அங்ஙனமெனில் அஞ்ச வேண்டாம். யமனுக்கும் பயப்பட வேண்டாம்.

மனிதர்கள், மனிதர்களே வேண்டும். மற்ற எல்லாம் தாமே வந்து சேரும். பலம், வீரியம், நம் பிக்கை, மாசற்ற உண்மை -இவையுடைய இளைஞர் கள் தேவை. இத்தகையர் நூறு பேர் இருந்தால் உலகத்தில் ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணி விடலாம்.

வேஷதாரியாகாமல், கோழையாயிராமல் ஒவ் வொருவரையும் மகிழ்விக்க முயல்க. தூய்மையுட னும் உறுதியுடனும் உன் கொள்கைகளைக் கடைப் பிடித்து ந… தற்போது உன் வழியில் எவ்வளவு தடைகள் இருப்பினும், நாளடைவில் உலகம் உனக்குச் செவி கொடுத்தே தீரவேண்டும்.

கீழ்ப்படியும் நற்குணத்தைப் பயிலு. ஆனால் உன்னுடைய சொந்த நம்பிக்கையை மட்டும் கை விடாதே. தலைவர்களுக்குக் கீழ்ப்படிதல் இல்லாத வரையில் சக்திகளை ஒன்று திரட்டுதல் சாத்தியமில்லை. தனி மனிதர்களின் சக்திகளை ஒன்று சேர்க்காத வரையில் எந்தப் பெரிய காரியமும் செய்ய இயலாது.

நம்பிக்கையுடனும் பலத்துடனும் உறுதியாக நில். உண்மை , கண்யம், தூய்மை இவற்றைக் கைக் கொள்.

மக்களுக்குத் தொண்டு செய்யும் பாதையில் நீ முன்னேறி வருங்கால் அதனுடன் சமமாக ஆத்ம சாதன மார்க்கத்திலும் முன்னேறி வருவாய்.

வேலை செய்யத் தொடங்கு; மகத்தான சக்தி தானே வருவதைக் காண்பாய். ‘ என்னால் வகிக்க இயலாது’ என்று நீ நினைக்குமளவுக்கு ஏராளமான சக்தி உன்னை வந்தடையும். பிறருக்காகச் செய்யும் அற்பமான ஊழியமும் உள்ளிருக்கும் சக்தியை எழுப்ப வல்லது. பர நலத்தைப் பற்றிச் சிறிதளவு நினைத்து வருதலும் இதயத்துக்கு நாளடைவில் பெரு வலிமை தருகின்றது. உங்கள் எல்லோரையும் நான் உயிருக்குயிராக நேசிக்கிறேன். ஆயினும் நீங்களனை வரும் பிறருடைய தொண்டில் உயிர்விட வேண்டு மென்பதே என் மனோர தமாகும். அவ்வாறு நீங்கள் உயிர் நீத்தால் அதைக் கண்டு நான் மகிழ்ச்சியே யடைவேன்.

ஒவ்வொருவரிடத்தும் பொறுமையைக் கைக் கொள்…. ஆட்சி செலுத்த விரும்பாதே. எவன் சிறந்த ஊழியம் செய்ய வல்லவனோ அவனே அரசரில் சிறந்தவனாவான்.

விவாதங்களில் நீ ஏன் தலையிட்டுக் கொள்ள வேண்டும்? பலர் பல அபிப்பிராயங்கள் கூறலாம். அவற்றைப் பொறுமையுடன் கேட்டுக் கொள். பொறுமை, தூய்மை, விடாமுயற்சி இவையே கடைசியில் வெற்றி பெறும்.

மரணம் வரையில் நான் இடைவிடாது வேலை செய்வேன். மரணத்திற்குப் பின்னரும் உலக நன்மைக்காக உழைப்பேன். சத்தியமும் நன்மையும் அசத்தியத்தையும் தீமையையும் விட எவ்வளவோ மடங்கு சக்தி வாய்ந்தவை. அவை உன்னிடம் இருந் தால், முன்னேற்றம் நிச்சயம்.

உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள், ஆனால் அதற்கு அத்யந்த உண்மை உள்ளமும் பரிபூரண சுய நலத் தியாகமும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தூய்மையும் வேண்டும்.

மகனே! பொறுமை கொள். நீ என்றும் எதிர் பார்த்ததை விட அதிகமாய் உன் முயற்சி செழித் தோங்கும். ஒவ்வொரு காரியமும் ஜெயம் பெறு வதற்கு முன் நூற்றுக் கணக்கான கஷ்டங்களைக் கடந்தே ஆகவேண்டும். முயற்சியுடையவர்கள் இன் றில்லா விட்டால் நாளை நிச்சயமாக ஒளி காண் பார்கள்.

அளவற்ற பொறுடை, அளவில்லாத தூய்மை, முடிவில்லா முயற்சி இவையே நல்ல காரியங்களில் வெற்றிபெறும் இரகசியங்களாம்.

சோம்பல் ஒழியுங்கள்; இகபர சுகா நுபவங்க வைத் தள்ளுங்கள். ஜனங்களை இறைவன் பாதத்தில் கொண்டு சேர்ப்பதற்காகத் தீயினில் குதியுங்கள்.

உங்கள் சகோதரர்களுக்குத் தலைமை வகிக்க முயலற்க! அவர்களுக்கு ஊழியமே செய்க. தலைமை வகிக்கும் பைத்தியமானது வாழ்க்கையென்னும் கட லில் எத்தனையோ பெரிய கப்பல்களை யெல்லாம் மூழ்கடித்து விட்டது. மரணம் நேரினும் சுயநலம் கருதவேண்டாம். தொண்டினை மறக்க வேண்டாம்.

பிறருக்கு வழிகாட்டவாவது, பிறரை அடக்கி யாளவாவது எப்போதும் முயல வேண்டாம். அனை வருக்கும் ஊழியராயிருங்கள். எல்லாவற்றினும் முக்கியமானது இதுவாகும்.

அதிகார ஆசை, பொறாமை…இவ்விரண்டினி டமும் மிக ஜாக்கிரதையாயிருத்தல் வேண்டும். ‘‘தலைவன் நான்” என்று சொல்லிக் கொண்டு முன் வந்தால் யாரும் உங்களுக்கு உதவி செய்யமாட் டார்கள். வெற்றிபெற விரும்பினால் முதலில் “நான்” என்னும் உணர்ச்சியைக் கொன்றுவிடுங்கள்.

முதலிலேயே பெரிய திட்டங்களைப் போட்டுக் கொண்டு கிளம்ப வேண்டாம். நிதானமாக ஆரம்பி யுங்கள்; மேன் மேலும் நிதானமாக முன்னேறுங் கள்.

எனது தீரச் சிறுவர்களே! உத்தமப் புதல்வர்களே! செயல், செயல் புரியத் தொடங்குங்கள். உங் கள் தோள்களைக் கொடுத்து (தேச முன்னேற்ற மென்னும்) தேரின் சக்கரத்தைக் கிளப்புங்கள், பெயர், புகழ் முதலிய மடமைகளுக்காக நின்று திரும்பிப் பார்க்கவேண்டாம்.

உங்கள் இதயங்களையும், மனோர தங்களையும், இவ்வுலகினைப் போல் விசாலமாக்கிக் கொள்ளுங் கள். . மத வெறியனின் உறுதி, உலகாயதனின் விசா லப்பார்வை- இவை இரண்டும் நமக்கு வேண்டும். நீராழியின் ஆழமும் எல்லையற்ற ஆகாயத்தின் விஸ் தாரமும் உடைய இதயம் வேண்டும்.

எப்போதும் ஆக்க முறையையே கடைப்பிடி. பிறரைக் குறைகூற வேண்டாம். நீ சொல்ல வேண்டியதைச் சொல். நீ போதிக்க வேண்டியதைப் போதி அவ்வளவுடன் நின்றுவிடு. பிற எல்லாம் ஆண்டவன் திருவுளம்.