கல்வி
- கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா? இல்லை. அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன் தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.
- கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங் ளைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
- எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
- அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. வளர்ச்சியடைவதுதான் வாழ்க்கை , அதாவது விரிவடைதல். அதுதான் அன்பாகும். எனவே அன்புதான் வாழ்க்கை ஆகும். அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் ஒரே நியதியாகும். எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான்.
- குருகுல முறையில் ஆசிரியனோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு பயிற்சி பெறுவதுதான் சிறந்த கல்விமுறை என்பது எனது கருத்து. ஆசிரியரின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக அமையாமல் எந்தவிதக் கல்வியையும் பெற முடியாது.
— சுவாமி விவேகானந்தர்