குடியரசும் சமுதாயப் பொதுவுடமைக் கோட்பாடும் 11

11. புதிய சமுதாய அமைப்பில் மதத்தின் பங்கு என்ன?

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளுமன்றம் இதை வகுத்தது, அதை வகுத்தது என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ, பெருமைமிக்கது என்றோகூற முடியாது. எல்லா வற்றிற்கும் அடிப்படை சட்டம் அல்ல; ஒழுக்கமும் தூய்மையும்தான் ஒரே பலம் என்பதை ஏசு கண்டார்.

புதிய சமூக அமைப்பிற்கு உங்கள் ஆன்மீகம் ஒரு குறிப்பிட்ட வகையில் அடிப்படையாக அமைய வேண்டும்.

ஆனால் ஆன்மீகச் சிந்தனைகளால் உலகை வெல்ல வேண்டும் என்று நான் கூறியதன் உண்மையான பொருளை மறந்துவிடக் கூடாது. உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே நான் ஆன்மீகச் சிந்தனைகள் என்று குறிப்பிட்டேன். அவற்றை வெளியுலகில் பரப்ப வேண்டுமே தவிர, நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற மூட நம்பிக்கைகளை அல்ல.

இங்கே இந்தியாவில் பல்வேறு அபாயங்கள் நம் கண்முன் உள்ளன. அவற்றுள் ஒன்று வடிகட்டின உலகாயதம்; மற்றொன்று அதற்கு நேர் எதிரான வடிகட்டின மூட நம்பிக்கை. இரண்டையும் நாம் தவிர்த் தாக வேண்டும்.

உலகத்திற்கு எது தேவையோ அதைத்தான் நாம் கற்பிக்க முடியும். ஆன்மீக அடிப்படை மட்டும் இல்லாமல் போனால், மேலை நாகரீகம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் தூள்தூளாகச் சிதறிவிடும். மனித குலத்தை வாளால் ஆள நினைப்பது முழுக்கமுழுக்கப் பயனற்ற வீண் முயற்சி.

பல்வேறு மதப் பிரிவுகளும் தத்துவங்களும் சாஸ் திரங்களும் இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடிப் படையாக ஒரு கருத்து, ஒரு கொள்கை உள்ளது. அது, மனிதனின் ஆன்மாவில் நம்பிக்கை. இந்தக் கருத்தினால் உலகின் போக்கையே மாற்ற முடியும்.

சமுதாயப் புரட்சிவாதிகள் எல்லோரும், அவர் களுடைய தலைவர்களெனும், தங்கள் பொதுவுடமைக் கோட்பாடு கம்யூனிஸம் போன்ற கொள்கைகளுக்கு அடைப்படையாக ஆன்மீகமே இருக்க முடியமென்றும் வேதாந்தமே அத்தகைய ஆன்மீக அடைப்படையாக இருக்க முடியும் என்று கருதுகின்றனர். எனது சொற் பொழிவுகளை கேட்க வந்த பல தலைவர்களும் புதிய சமுதாய நோக்கிற்கு அடைப்படையாக வேதாந்தமே சரியானது என்று என்னிடம் கூறினர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s