3. குடியரசின் பலவீனங்கள் யாவை?
ஐரோப்பாவில் எங்கும் பலசாலிக்கு வெற்றி! பலவீனனுக்குச் சாவு.
ஒருபக்கம் ஜட விஞ்ஞானம், ஏராளமான பணமும் பொருட்களும், அளவற்ற வலிமை, தீவிரமான புலனின்பங்கள் எல்லாம் அன்னிய மொழியின் வாயிலாக பெரிய ஆரவாரத்தை உண்டாக்கியுள்ளன.
விசித்திர பானங்கள், நல்ல உணவு வகைகள், விசித்திர உடைகளில் வெட்கமின்றித் திரிகின்ற நன்கு படித்த மேலை நாட்டுப் பெண்கள், புதிய கருத்துக்கள், புதிய நாகரீகம் எல்லாம் அனாவசியமான ஆசைகளை எழுப்புகின்றன.
மேலைநாட்டின் லட்சியம்- தனிநபரின்சுதந்திரம்; மொழி-பணம் பண்ணும் கல்வி; வழி-அரசியல்.
மேலைநாடுகளைப்போல் அரசியலின் பெயரால் பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சி தங்கள் உடம்பைப் பெருக்கிக்கொள்ளும் கயவர் கூட்டமும் நம் நாட்டில் இல்லை .
உள்ளே புகுந்து பார்த்தால் மனிதனிடம் கொண்டுள்ள நம்பிக்கையே அற்றுப் போகும். ‘பால் குடிப்பதற்கு ஆளில்லை, ஆனால் கள்ளுக்கடைகளில் கூட்டம்; குலமகள் ஆடையின்றி அவதிப்படும் வேளையில் விலைமகள் ஆடை அலங்காரங்களுடன் பொலிகிறாள்.” கையில் பணம் உள்ளவன் ஆட்சியைத் தன் பிடியில் வைத்திருக்கிறான், மக்களைக் கொள்ளையடிக்கிறான், வாட்டியெடுக்கிறான்; பிறகு அவர்களைச் சிப்பாய்களாக்கி போர்க்களங்களுக்கு அனுப்பி மரணத்திற்கு உள்ளாக்குகிறான். வெற்றி கிடைத்தாலோ, போர்க்களத்தில் மக்கள் சொரிந்த ரத்தத்தால் பெற்ற பணத்தால் தன் பணப்பெட்டியை நிரப்பிக் கொள்வான். பொதுமக்களின் நிலைமை? நல்லது. ரத்தத்தைச் சிந்த மட்டுமே அவர்களுக்கு உரிமை. இதுதான் உண்மை . திடுக்கிடாதே, திகைப்பில் மூழ்காதே.
பௌதீக வசதிகள் பலருக்கும் பகிர்ந்தளிக்கப் படுவதுதான் இந்த ஆட்சியின் அனுகூலம். இதில் சாதாரணக் கல்வி பேரளவில் பரவும்.