5. தேசத்தொண்டர்கள்—அவர்களுடைய குறைபாடுகள்

5. தேசத்தொண்டர்கள்—அவர்களுடைய குறைபாடுகள்

இந்தியாவில் இரண்டு சாபக்கேடுகள் உண்டு. அவற்றில் ஒன்று நமது பலவீனம்; இரண்டாவது நமது பகைமை, ஈரமற்ற இதயம்.

உபநிஷதங்களின் மகிமையைப்பற்றிப் பேசுகி றோம், மகரிஷிகளின் சந்ததிகள் நாம் என்று பெரு மை பேசிக்கொள்கிறோம். ஆயினும் மற்றும் பல ஜாதியாருடன் ஒப்பிடும் போது நாம் பெரிதும் பல வீனர்களா யுள்ளோம். உடல் பலவீனமே முதன்மை யானது. குறைந்த பட்சம் நமது துன்பங்களில் மூன் றில் ஒரு பங்குக்கு அதுவே காரணமாகும். நமது இளை ஞர்கள் முதலில் பலம் பெறவேண்டும். சமய வளர்ச்சி பின்னர் தானே ஏற்படும். என் வாலிப நண்பர்களே! நீங்கள் பலசாலிகளாகுங்கள். உங்க ளுக்கு என் புத்திமதி அதுவேயாகும். உங்களுக்கு,

கீதையைவிட, விளையாட்டு சுவர்க்கத்துக்குச் சுருக்க வழியாகும். உங்கள் தசை நார்களும், புஜங்களும் இன்னும் சிறிது வலிவு பெறுங்கால் கீதையை இன் னும் நன்றாய் அறிந்து கொள்வீர்கள். உங்கள் நரம் புக் குழாய்களில் இன்னும் சிறிது வலிவுள்ள இரத்தம் ஓடும்போது கிருஷ்ண பரமாத்மாவின் மகத்தான ஞானத்தையும் மகத்தான பலத்தையும் இன்னும் நன்றாய் அறிந்து கொள்ளக்கூடும். உங்கள் முதுகு வளையாமல் உங்கள் கால்கள் தளர்வுறாமல் நீங்கள் நிமிர்ந்து நிற்கும் போது, ‘நாம் ஆண் மக்கள்’ என்னும் உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும்போது, உ.பநிஷதங்களின் நுட்பத்தையும் ஆன்மாவின் மகி மையையும் நன்குணர்ந்து கொள்வீர்கள்.

நான் வேண்டுவதென்ன? இரத்தத்தில் பலம், நரம்புகளில் வலிவு, இரும்புபோன்ற தசை நார்கள், எஃகையொத்த நரம்புகள்- இவையே நமக்கு வேண்டும். தளர்ச்சி தரும் கசிவுள்ள கொள்கைகள் நமக்குத் தேவையில்லை.

இந்தியாவில் தற்போதுள்ள பெரும்பாவம் நமது அடிமைத்தனமேயாகும். ஒவ்வொருவரும் கட் டளையிடவே விரும்புகிறார்; கீழ்ப்படிவதற்கு எவரும் தயாராயில்லை. பண்டைக் காலத்து அதி ஆச்சரிய மான பிரம்மசரிய முறை மறைந்ததே இந்நிலை மைக்குக் காரணம்.

முதலில் கீழ்ப்படியக் கற்றுக்கொள்; கட்டளை யிடும் பதவி தானே வரும். முதலில் வேலைக்காரனா யிருந்து பழகு; எஜமானனாக நீ தகுதி பெறுவாய்.

உனக்கு மேலுள்ளவன் நதியில் குதித்து முதலை யைப் பிடிக்கும்படி கட்டளையிட்டால் முதலில் அதன்படி செய். பிழைத்து வந்தால் அவனுடன் வாதாடு. உத்தரவு தவறாயிருந்த போதிலும் முதலில் நிறைவேற்றிவிட்டுப் பின்னர் அதை மறுத்துக் கூறு.

பொறாமையை யொழியுங்கள்; இன்னும் செய்ய வேண்டியிருக்கும் பெரிய வேலைகளையெல்லாம் செய்யும் ஆற்றல் பெறுவீர்கள்.

அடிமைகள் எல்லாருக்கும் பெரிய சனியனாயி ருப்பது பொறாமையேயாகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அது தான். எப்போதும் பொறா மையை விலக்குங்கள்.

நமது நாட்டாரில் ஒருவர் முன்னேறிப் பெருமையடைய முயன்றால் நாம் எல்லாரும் அவரைக் கீழே இருத்தவே முயல்கிறோம். ஆனால் வெளி நாட் டான் ஒருவன் வந்து நம்மை உதைக்கும் போது பேசாமலிருக்கிறோம்.

நாம் முதலில் ஆராதிக்க வேண்டிய தெய்வங் கள் தமது தேசமக்களே யாவர். ஒருவரிடம் ஒருவர் பொறாமை கொண்டு, ஒருவரோடொருவர் சண்டை யிடுவதற்குப் பதிலாக ஒருவரையொருவர் நாம் பூசிப்போமாக.

நாம் நம்பிக்கை யிழந்துவிட்டோம். நான் சொன்னால் நம்புவீர்களா? இங்கிலீஷ்காரனை விட.. நமக்கு நம்பிக்கை குறைவு. ஆயிரம் மடங்கு குறைவு.

முப்பத்து மூன்று கோடி ஜனங்களாகிய நாம் சென்ற ஆயிரம் ஆண்டுகளாக, நம்மை மிதித்துக் கொண்டுவரும் எந்த அன்னியக் கூட்டத்தாராலும், அவர்கள் எவ்வளவு சிறு தொகையினரா யிருப்பினும், ஆளப்பட்டு வருவதேன்? ஏனெனில், அவர் களுக்குத் தங்களிடம் நம்பிக்கை இருந்தது; நமக்கு அது இல்லை. உங்களிடம் நீங்கள் நம்பிக்கை கொள் ளுங்கள். அந்த நம்பிக்கையின்மேல் வலிமையுடன் நில்லுங்கள். அதுவே நாம் வேண்டுவதாகும்.

நமக்கு சிரத்தை வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும். பலமே உயிர்; பலவீனமே மரணம். நாம் மரண மற்ற சுதந்திரமுள்ள, தூய்மையே இயல்பாகக்கொண்ட ஆத்மா அல்லோமா? நாம் பாவம் எவ்வாறு செய்ய முடியும்? முடியவே முடி யாது. இத்தகைய நம்பிக்கை நம்மை மனிதர்க ளாக்கும்; தேவர்களாக்கும். நாம் சிரத்தையை இழந்து விட்டபடியால் தான் இந்நாடு நாசமடைந் திருக்கிறது.

நாம் பல விஷயங்களைப்பற்றி எண்ணுகிறோம். ஆனால் அவற்றைச் செய்வதில்லை, நாம் கிளிப்பிள்ளை கள் ஆய்விட்டோம். பேசுதலே நமது வழக்கமாய்ப் போய்விட்டது. செயலில் ஒன்றும் நடத்துவதில்லை. இத்தகைய வலிமையற்ற மூலையினால் எதுவும் செய்ய முடியாது. அதற்கு வலிவு கொடுக்க வேண்டும்.

நீங்கள் அறிந்தது அதிகம்; ஆனால் செய்வது குறைவு. உங்கள் அறிவு அளவு கடந்து போய்விட் டது. அது தான் உங்களுடைய தொல்லை. உங்கள் இரத்தம் வெறும் தண்ணீர் போன்றது. ஆகையி னால் தான் உங்கள் மூளை தோல் உரிந்து வருகிறது; உங்கள் உடம்பு சோர்ந்து கிடக்கிறது. உங்கள் உடம்பை மாற்றிப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பேச்சு! பேச்சு! பேச்சு! பேச்சு அளவு கடந்து விட்டது. நாம் பெரிய சாதியாராம்! உளறல்! நாம் மனோபலமும் உடல் வலிவும் அற்ற சோகைகள்! உண்மை இது தான்.

நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அது தான் எதை யும் பரிகசிக்கும் தன்மை , சிரத்தை யில்லாமை. இந்நோயைத் தொலைத்துவிடுங்கள் சிரத்தையுடைய பலசாலிகளா யிருங்கள். மற்றவையெல்லாம் தாமே வரும்.

நமது சமயம் சமையலறைக்குள் புகுந்துவிடக் கூடிய அபாயம் நேர்ந்திருக்கிறது. நாம் வேதாந்தி களுமல்லோம்; பௌராணிகர்களுமல்லோம். தாந்தி ரிகர்களுமல்லோம். நாம் ‘தொடாதே’ சமயிகள், சமையலறையே நமது சமயம். சோற்றுப் பானையே நமது கடவுள். ”என்னைத் தொடாதே, நான் பரிசுத் தன்” என்பதே நமது சமயக் கொள்கை. இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் இவ்வழியே சென்றோமானால் நம்மில் ஒவ்வொருவரும் பைத்தியக்காரர் விடுதி யையே அடைவோம்.

என் மகனே! எந்த மனிதனாலும், தேசமானா லும் பிறரைப் பகைத்து உயிர் வாழ முடியாது. என்றைய தினம் இந்நாட்டில் ‘மிலேச்சன்’ என் னும் வார்த்தையைச் சிருஷ்டித்தார்களோ, என் றைய தினம் பிறரு!-ன் கலந்து பழகுவதை நிறுத் தினார்களோ, அன்றே இந்தியாவுக்குச் சனியன் பிடிக்கலாயிற்று.

மற்றொரு படிப்பினையை நாம் நினைவு கூர வேண்டும். பிறர் செய்வது போல் செய்தல் நாகரிகம் ஆகாது. நான் இராஜாவின் உடைதரித்துக் கொள்ளலாம். அதனால் நான் இராஜாவாகி விடுவேனோ? சிங்கத்தோல் போர்த்துக் கொண்ட கழுதை சிங்கமாகி விடுமா? பிறரைப்போல் வேஷந் தரித்தல் பெரிய கோழைத்தனம். அதனால் அபி விருத்தி எதுவும் ஏற்படாது. உண்மையில் அது மனிதனுடைய பயங்கரமான இழி நிலைக்கு அறி குறியாகும். ஒருவன் தன்னைத் தானே இழிவாக நினைக்க ஆரம்பித்து விட்டால், தன் முன்னோர்களைப் பற்றி வெட்கப்பட ஆரம்பித்து விட்டால் அவனு டைய அழிவு காலம் நெருங்கி விட்டதென்பது உறுதியாகும். இந்திய வாழ்வு முறையிலிருந்து அகன்று விடாதீர்கள் இந்தியர் அனை வரும் வேறோர் அன்னிய ஜாதியாரைப் போல் உண்டு, உடுத்து, நடக்கத் தொடங்கினால் இந்தியா நன்மையடையும் என்று ஒரு கணமும் நினைக்க வேண்டாம்.

நாம் சோம்பேறிகள்; நம்மால் வேலை செய்ய முடியாது; நம்மால் ஒன்றுசேர முடியாது; நாம் ஒருவரை யொருவர் நேசிப்பதில்லை; ஆழ்ந்த சுய நல உணர்ச்சி உள்ளவர்கள் நாம்; நம்மில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை யொருவர் துவேஷியாமல் எதுவும் செய்ய முடியாது.

நமது இயற்கையில் நிர்மாணத்திறன் என்பது பூஜ்யமாயிருக்கிறது. இந்தத் திறன் பெறவேண்டும். அது பெறும் இரகசியம், பொறாமையைத் தொலைத் தலேயாகும், உங்கள் சகோதரர்களின் அபிப்பிரா யத்திற் கிணங்க எப்போதும் சித்தமாயிருங்கள். எப்போதும் சமரசப்படுத்தவே முயலுங்கள்.

நமது நிலைமை என்ன? கட்டுப்பாடு சிறிது மில்லாத ஜனத்திரள்; சுய நலம் மிகக் கொண்டவர்கள்; நெற்றியில் குறியை இந்தப் புறமாகப் போடுவதா, அந்தப் புறமாய்ப் போடுவதா என்பது குறித்து நூற்றுக்கணக்கான வருஷங்களாய்ச் சண்டை போடுகிறவர்கள்; சாப்பிடும்போது பிறர் பார்த்தால் உணவு தீட்டாய்ப் போய்விடுகிறதா இல்லையா என்பது போன்ற விஷயங்களைப்பற்றிப் புத்தகம் புத்தகமாய் எழுதுகிறவர்கள்—இத்தகைய மக்கள் நாம்.

ஆதலின் வருங்காலத்தில் பாரத நாடு பெருமை பெற்று விளங்க வேண்டுமானால் நிர்மாணத் திறன், சக்தி சேகரம் மன ஒற்றுமை இவை வேண்டும். சமூக வாழ்வின் இரகசியம் ஒரு மனப் படுதலே யாகும். சிதறிக் கிடக்கும் மனோ சக்திகளை ஓரிடத்தில் சேர்த்து ஒருமுகப்படுத்திப் பிரயோகித் தலே வெற்றியின் இரகசியம். சீனன் ஒவ்வொரு வனும் தன் தன் வழியே சிந்திக்கிறான். ஆனால் மிகச் சிறு தொகையினரான ஜப்பானியர் எல்லோரும் ஒரு வழியாய் எண்ணுகிறார்கள். இவ்விரண்டின் பயன்களும் நீங்கள் அறிந்தவையே யாகும்.

குழந்தையைப்போல் எதற்கும் பிறரை நம்பியிருப்பது நமது தேசீய இயற்கையாய்ப் போய்விட் டது. உணவு வாயில் கொண்டுவந்து போடப்பட் டால் விழுங்க எல்லோரும் தயாராயிருக்கிறார்கள். சிலர் அதையும் தொண்டைக்குள் தள்ள வேண்டு மென்கிறார்கள். உங்கள் காரியத்தை நீங்களே செய்து கொள்ள முடியாவிடின் நீங்கள் உயிர் வாழத் தகுதி யற்றவர்களாவீர்கள்.

ஒவ்வொரு தேசமும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன் னைத்தானே ரட்சித்துக் கொள்ளவேண்டும். பிறர் உதவியை எதிர் பார்த்தல் ஆகாது. இதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

அயல் நாட்டு உதவியை நீங்கள் நம்பியிருக்கக் கூடாது. தனி மனிதர்களைப் போலவே தேசங்களும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள வேண்டும். இதுவே உண்மையான தேசபக்தி. ஒரு தேசம் இது செய்யக்கூட வில்லையானால், அதன் முன்னேற்றத்திற்கு இன்னும் காலம் வரவில்லை யென்று அறிந்து கொள்ளுங்கள், அது காத்திருக்கவே வேண்டும்.

தொழிலில் ஒழுங்கு முறையைப் பொறுத்த வரை ஹிந்துக்கள் அசட்டை அதிகம் உடையவர் களாயிருக்கிறார்கள். கணக்கு வைத்தல் முதலியவை களில் அவர்கள் திட்டமாயும், கண்டிப்பாயும் இருப் பதில்லை. இந்தியாவில் ஒற்றுமைப்பட்ட முயற்சிகள் எல்லாம் இந்த ஒரு பெருங் குற்றத்தின் காரண மாகவே அழிந்து விடுகின்றன. தொழிலில் ஒழுங்கு முறை அனுசரிப்பது குறித்து நாம் இது காறும் கவனம் செலுத்தியதே யில்லை.

தொழில் முறைமையில் கண்டிப்புவேண்டும். அதில் சிநேகத்துக்கும் சங்கோசத்துக்கும் இடமிருத் தல் கூடாது. ஒருவன் தன் வசமுள்ள ஒவ்வொரு நிதிக்கும் மிகத் தெளிவாகக் கணக்கு வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு உத்தேசிக்கப்பட்ட பணத்தைஒருவன் பட்டினி கிடக்கவே நேர்ந்தாலும் வேறொன் றுக்கு உபயோகிக்கக்கூடாது. இது தான் தொழில் நேர்மை. அடுத்தாற்போல் தளராத ஊக்கம் தேவை. நீங்கள் எக்காரியம் செய்தாலும், அந்த நேரத்திற்கு அதுவே இறைவன் பணி ஆகிவிட வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s