நீளிரவு கழிந்துவிட்டதாகக் காண்கிறது; நமது கொடிய துன்பத்துக்கும் கடைசியில் முடிவு வந்து விட்டதாகத் தோன்றுகிறது; உயிரற்ற பிணம்போல் காணப்பட்ட உடலும் உயிர் தழைத்தெழுந்திருக் கக் காண்கிறேம். எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு குரல் வருவதைக் கேட்கிறோம்…ஹிமாலயத்தி லிருந்து வரும் இனிய குளிர் பூங்காற்றைப் போல் அக்குரல் குற்றுயிராயிருந்த எலும்புகளுக்கும் தசை களுக்கும் புத்துயிரைக் கொண்டு வருகின்றது. நமது மயக்கமும் அகன்று வருகிறது. பாரதத்தாய் தன் நீண்ட உறக்கத்தினின்றும் விழித்து எழுவதைக் காணாதவர் குருடர்களே யாவர்; அல்லது கண்ணி ருந்தும் காணாதவர்களாவர்.
இனி நமது தாயின் முன்னே எவரும் எதிர்த்து நிற்க இயலாது; இனிமேல் அவள் என்றும் உறங்கப் போவதில்லை. புற உலக சக்திகள் எவையும் அவள் முன்னேற்றத்தை இனித் தடுக்க முடியாது; அளவற்ற வலிவுடைய அத்தேவி விழித்தெழுந்து விட்டாள்.
பெரிய மரமொன்றில் அழகிய பழம் ஒன்று பழுத்துக் கனிகின்றது; அப்பழம் கீழே விழுந்து அழுகுகின்றது. அவ்வழுகிய கனியிலிருந்து தரையில் வேர்பாய்ந்து, அதினின்றும் முன்னதை விடப் பெரிய விருக்ஷ மொன்று தழைத்துக் கிளம்புவதைக் காண்கிறோம். இத்தகைய rண தசையிலிருந்து நாம் தற்போது வெளி வந்திருக்கிறோம், அதுவும் அவசியமான ஒரு நிலையே யாகும். பாரதத்தாயின் வருங்கால உன்னதம் அந்த க்ஷண தசையிலிருந்தே தோன்றப் போகின்றது. இதற்குள்ளாகவே முளை கிளம்பித் தளிர்களும் காணத் தொடங்கிவிட்டன. அம்முளை விரைவிலேயே ஒரு பெரிய மகா விருக்ஷ மாக வளர்ந்து காட்சியளிக்கும்.
வருங்காலத்தில் அதி ஆச்சரியமான, மகிமை வாய்ந்த இந்தியா தோன்றப் போகின்றது. இதற்கு முன் எப்போது மிருந்ததைவிட அது பெருமை பொருந்தி விளங்கும். பண்டைக் கால ரிஷிகளையும் விடப் பெரிய மகான்கள் தோன்றுவார்கள். உங் கள் மூதாதைகள், ஆவி உலகங்களில் தத்தம் இடங் களிலிருந்து, தங்கள் சந்ததிகள் இவ்வளவு மகோன் னதம் பொருந்தி விளங்குவதைக் கண்டு மகிழ்ச்சி யும் பெருமையும் அடைவார்களென்பதில் சந்தேகமில்லை .
கண்விழித் தெழுந்திருங்கள்; நமது பாரதத் தாய் புத்திளமை பெற்று, முன்னெப்போதையும் விட அதிக மகிமையுடன் தன் நித்திய சிம்மாசனத் தில் வீற்றிருப்பதைக் கண்டு மகிழுங்கள்.
நம்புங்கள்; உறுதியாக நம்புங்கள் . இந்தியர் கண் விழித்து எழுந்திருக்க வேண்டுமென்று ஆண்டவன் கட்டளை பிறந்து விட்டது.
எழுங்கள்; எழுங்கள்; நீளிரவு கழிந்தது. பொழுது புலர்ந்தது, கடல் புரண்டு வருகிறது. அதன் உத்வேகத்தைத் தடுக்க எதனாலும் ஆகாது.