ஹிந்து சமூகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந் தையும் எக்கருமத்தைத் தன் வாழ்வின் பெரு நோக்க மாக கொண்டு பிறக்கின்றது தெரியுமா? பிராம்மண னுடைய பிறவி நோக்கம் ‘சமயச் செல்வத்தைப் பாதுகாத்தலே’ என்று மனு பெருமையுடன் புகன் றிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அது பிராம்மணனுடைய பிறவி நோக்கம் மட்டுமன்று என நான் சொல்வேன். இப்புண்ணிய பூமியில் ஜனிக்கும் ஆண், பெண் குழந்தை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள பிறவிப் பெரு நோக்கம் ‘ சமயச் செல் வத்தைப் பாதுகாத்தலே’ யாகும்.
பரிபூரண உயர் நாகரிகத்துக்காக உலகம் காத் துக் கொண்டிருக்கிறது. பாரத நாட்டின் நாகரிக பொக்கிஷத்தை, ஹிந்து ஜாதியின் அதி ஆச்சரிய மான பரம்பரை ஞானச் செல்வத்தை உலகம் எதிர் நோக்கி நிற்கிறது.
இந்தப் பாரத நாட்டில் நமது மூதாதைகள் சேகரித்து வைத்திருக்கும் அமிர்தத்தில் ஒரு துளிக் காக ஏந்திய கைகளுடன் வெளியே கோடிக்கணக் கான மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர் களுடைய இதய வேதனையை நமது நாட்டின் சுவர் களுக்குள் அடைந்து கிடக்கும் நாம் சிறிதும் அறிந்து கொண்டோமில்லை.
மேனாடு முழுவதும் ஓர் எரிமலையின் உச்சியின் மீது நின்று வருகின்றது. அவ்வெரிமலை எந்த நிமிஷ மும் தீயைக்கக்க ஆரம்பித்து அந்நாட்டைப் பாழாக் குதல் கூடும், மேனாட்டார் மனச் சாந்தி வேண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் தேடிவிட்டார்கள்; ஆனால் அதை எங்கும் அவர்கள் காணவில்லை. இவ்வுலக இன்பத்தைப் பரிபூரணமாய் அவர்கள் அநுபவித்தார்கள்; ஆனால் அது வெறும் பிரமையே எனக்கண்டார்கள். பாரத நாட்டின் ஞான அருவி மேனாட்டில் வேகமாகப் பாயுமாறு வேலை செய்வ தற்கு இதுவே தக்க தருணமாகும்.
பாரதத் தாயின் புதல்வர்களுக்கு தர்ம மார்க் கத்தில் ஒரு மகத்தான கடமை ஏற்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கையின் இலட்சியங்களைப் பற்றி உல கிற்கு அறிவு புகட்டும் ஊழியம் புரிய அவர்கள் தங்களைத் தகுதி யாக்கிக் கொள்ளவேண்டும்.
இந்நாட்டில் சமயமும், பாரமார்த்திகமுமே இன்னமும் ஜீவ நீர் சுரக்கும் ஊற்றுக்களாயிருந்து வருகின்றன. இவ்வூற்றுக்களிலிருந்து சுரக்கும் நீர் பொங்கிப் பெருகி எங்கெங்கும் பாய்ந்தோடி உலகை மூழ்கடிக்க வேண்டும். அவ்வமுத வெள்ளம், அரசி யல் ஆசைகளாலும், சமூதாய சூழ்ச்சிகளாலும் நசுக்கப்பட்டுத் தற்போது அரைப் பிராணனுடன் இருக்கும் மேனாடுகளுக்கும் பிறதேசங்களுக்கும் புத் துயிரையும் நவசக்தியையும் அளிக்க வல்லதாகும்.
மக்கட் குலத்தின் முன்னேற்றத்திற்கு ஹிந்து வின் சாந்தமுள்ள மூளையும் தன் பங்கு வேலையைச் செய்தே யாக வேண்டும். உலகிற்கு இந்தியா அளிக்கக்கூடிய நன்கொடை பாரமார்த்திக ஞான ஒளியேயாகும்.
உங்களில் ஒவ்வொருவரும் அரியதொரு பரம் பரைச் செல்வத்துடன் பிறந்திருக்கிறீர்கள். மகிமை வாய்ந்த இத்தேசத்தின் மகத்தான பண்டை வாழ்வு அனைத்துமே அச் செல்வமாகும். உங்களுடைய மூதா தைகள் கோடிக்கணக்கானவர்கள் உங்களுடைய செயல் ஒவ்வொன்றையும் கவனித்து வருகிறார்கள். எனவே, எச்சரிக்கையுடன் ஒவ்வொன்றையும் எண்ணித் துணியுங்கள்.
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு சிறப்பியல்பு உண்டு. ஒவ்வொரு ஜாதிக்கும் தனிப்பட்ட வாழ்வு நோக் கம் ஒன்று உண்டு. அவ்வாறே ஒவ்வொரு ஜாதியும் இவ்வுலகில் செய்து முடித்தற்குரிய தனிப் பெருங் காரியம் ஒன்று உண்டு. ஒவ்வொரு ஜாதியும் தத் தமக்குரிய காரியத்தைச் செய்து அதன் பயனைக் காட்டவேண்டும். அரசியல் பெருமையோ, இரா ணுவ வலிமையோ நமது ஜாதியின் வாழ்வு நோக்க மன்று. அவ்வாறு எப்போதுமிருந்ததில்லை; இனி யும் இராது. நமது வாழ்க்கை இலட்சியம் முற்றும் வேறான தாகும். அது, நமது ஜாதியின் பாரமார்த் திக சக்தியை யெல்லாம் திரட்டிச் சேர்த்துப் பாது காத்தலேயாம். அவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்ட சக்தியானது, தக்க சமயம் நேரும்போது, பெரு வெள்ளம்போல் பாய்ந்து உலக முழுவதையும் மூழ்கடிக்கும்.
இந்தியர்களாகிய நாம் எத்தனையோ துன்பங் களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகியும், வறுமைக் குழியில் வீழ்ந்து கிடந்தும், உள் நாட்டுக் கொடு மைகளுக்கும், வெளி நாட்டாரின் கொடுமைகளுக் கும் உள்ளாகியும், இன்னமும் உயிர் வாழ்ந்திருப் பதின் காரணம் யாது? நம்மிடம் தனிப்பட்ட தேசீய இலட்சியம் ஒன்று இருப்பது தான். இந்த இலட்சியம் உலகப் பாதுகாப்பிற்கு இன்னும் அவசி யமாயிருக்கிறது.)
ஓராயிரம் ஆண்டுகளாக எத்தனையோ கஷ்டங் களுக்கும், குழப்பங்களுக்கும் உள்ளாகியும் ஹிந்து ஜாதி அழிந்து படாமலிருப்பதேன்? நமது பழக்க வழக்கங்கள் அவ்வளவு பொல்லாதவையாயிருப்பின், இதற்குள்ளாக நாம் இருந்த விடந் தெரியாமல் மாண்டு மறைந்து போகாததேன்? நம்மீது படை யெடுத்து வந்த அன்னியர்கள் பற்பலரும் நம்மை நசுக்கிப் போடுவதற்கு எல்லா வித முயற்சிகளும் செய்து பார்க்க வில்லையா? அவ்வாறாக, மற்றும் பல அநாகரிக ஜாதிகளுக்கு நேர்ந்த கதி இந்துக் களுக்கு நேராத காரணம் என்ன?
உலக நாகரிக மென்னும் பொதுக் களஞ்சியத் திற்கு இந்தியா தன்னுடைய பகுதியை இனியும் தரவேண்டியிருக்கிறபடியாலே அது இன்னமும் உயிர் வாழ்ந்து வருகிறதென்று அறிந்து கொள்ளுங்கள்.