சங்கீதத்தில் ஒவ்வொரு கீர்த்தனத்துக்கும் முக்கியமான மத்திம சுரம் ஒன்றிருப்பது போல் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரதான வாழ்வு நோக்கம் ஒன்று உண்டு. மற்றவையெல்லாம் அதற்கிரண்டா வது ஸ்தானத்தையே அடையும். இந்தியாவிற்கு அத்தகைய பிரதான வாழ்க்கை இலட்சியம் சமய மாகும். சமூக சீர்திருத்தம் முதலிய மற்றவையெல் லாம் இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டாந்தர விஷயங்களேயாம்.
சங்கீதத்தில், மத்திம சுர மாயுள்ள சுருதியை யொட்டி மற்ற சுர வரிசைகளெல்லாம் மேலும் கீழும் தவழ்ந்து இன்னிசை எழுப்புகின்றன. இவ் வாறே ஒவ்வொரு தனி மனிதனுக்கும், ஒவ்வொரு தேசத்துக்கும் வாழ்க்கையின் தனிப்பெரும் நோக் கம் ஒன்றுண்டு. மற்ற நோக்கங்களெல்லாம் இதைச் சுற்றி நின்று வாழ்க்கையை இனிமை பயக்கச் செய் கின்றன.
ருஒ நாட்டிற்கு அரசியல் வலிமையே ஜீவதா துவாயிருக்கலாம். இங்கிலாந்து இத்தகைய நாடாகும் மற்றொரு நாட்டுக்குக் கலை உணர்ச்சியே உயிர் நாடியா யிருக்கலாம். இவ்வாறு பற்பல நாடுகளுக் கும் பற்பல துறைகள் முதன்மையான வாழ்வு நோக்கங்களா யிருக்கின்றன. இந்தியாவிலோ சம யத் துறையே வாழ்வின் பற்பல துறைகளுள்ளும் மகோன்னதம் பெற்று விளங்குகிறது. தேசீய வாழ்க்கை யென்னும் சங்கீதத்துக்குச் சமயமே இங்கு சுருதியாக இயங்குகிறது. நூற்றுக்கணக்கான வருஷங்களாகத் தன் வாழ்க்கையின் முக்கியமான துறையாய் இருந்து வரும் தேசீய ஜீவ தாதுவை எந்த நாடேனும் புறக்கணிக்க முற்பட்டு அதில் வெற்றி யும் பெற்றால் அத்தேசம் அழிந்தே போகின்றது. ஆதலின் நீங்கள் சமயத்தை மட்டும் புறக்கணித்து விட்டு, அரசியல், சமூக இயல் முதலியவற்றுள் எதனை உங்கள் நடுநோக்கமாய், தேசீய வாழ்க்கை யின் உயிர் நாடியாய் வைத்துக் கொண்டாலும், அதன் முடிவு நீங்கள் அடியோடு அழிந்து விடுதலேயாம்.
துறவும், தொண்டுமே இந்தியாவின் தேசீய இலட்சியங்களாகும். இந்த இலட்சியங்களை நீங்கள் பேணி வளர்த்தால் மற்றவை தமக்குத் தாமே வள ரும். இந்நாட்டில் பாரமார்த்திகக் கொடியை எவ் வளவு தான் உயர்த்தினாலும் அதிகம் என்று சொல் வதற்கில்லை. பார மார்த்திகமே இந்தியாவின் கதி மோட்சமாகும்.
தேகத்தில் ஜீவரத்தம் தூய தாயும், வன்மை பெற்றும் இருந்தால் நோய்க்கிருமி எதுவும் உயிர் வாழ முடியாது. நமது சமூகத்தின் ஜீவரத்தம் பார மார்த்திக வாழ்வேயாகும். அது தெளிந்து, பலத் துடன் ஓடினால் மற்ற எல்லாம் சரியாயிருக்கும். அந்த இரத்தம் மட்டும் சுத்தமாயிருந்தால், அரசி யல், சமூக இயல், பொருள் இயல் முதலியவற்றி லுள்ள குறைபாடுகள் எல்லாம்–நாட்டின் வறுமை கூட- நீங்கிவிடும்.
இந்தியாவின் உயிர் நாடி சமயம்! சமய மொன்றேயாகும். சமயமென்னும் உயிர் நாடி அற்றுப் போகும் போது பாரத நாடு நிச்சயம் இறந்து விடும். அரசியல் திருத்தங்களும் சமூக சீர்திருத்தங் களும் அப்போது அதைக் காப்பாற்ற மாட்டா. இந்தியாவின் புதல்வர் ஒவ்வொருவருடைய தலை யிலும் குபேரனுடைய செல்வ மெல்லாம் பொழிந்த போதிலும், அதன் உயிரைக் காக்க முடியாது.
அரசியல், வியாபாரப் பெருக்கினால் வரும் பெருமிதச் செல்வம், அதிகாரம், சரீர விடுதலை முதலியவைகளைப் பற்றி மற்றவர்கள் பேசட்டும். ஹிந்துக்களின் மனம் இவற்றை அறிந்து கொள்ளாது; அறிந்து கொள்ள விரும்பவும் விரும்பாது.
பாரமார்த்திகம், சமயம், ஆண்டவன், ஆன்மா, ஆன்ம விடுதலை என்னும் இவைகளைப் பற்றிப் பேசுங்கள். மற்ற நாடுகளில் தத்துவ சாஸ்திரிகள் என்று சொல்லப்படுவோரைவிட, இந்தியாவிலுள்ள மிகத் தாழ்ந்த குடியானவன் இவ்விஷயங்களைப் பற்றி அதிகம் தெரிந்தவனா யிருப்பதைக் காண் பீர்க ள். |
இந்தியர்களிடம் அரசியலைப் பற்றியும், சமூக புனருத்தாரணத்தைப் பற்றியும், பணஞ் சேர்த்தலைப் பற்றியும், வியாபார வளர்ச்சியைப் பற்றியும் நீங்கள் பேசுவனவெல்லாம் குள்ளவாத்தின் முதுகில் விழுந்த நீர்த்துளிபோல் தெறித்தோடிப்போகும்.
அரசியல், சமூக முன்னேற்றங்கள் எல்லாம் அவசியமல்லவென்று நான் சொல்லவில்லை. ஆனால் அவையெல்லாம் இந்நாட்டிற்கு இரண்டாந்தரமான முக்கியமே யுடையன வென்றும், சமயமே இங்குத் தலை சிறந்ததாகும் என்றும் நான் கூறுகிறேன். இதை நீங்கள் சிந்தையில் பதித்து வைக்க வேண்டும்.
கங்கை நதியானது உறைந்த பனிக்கட்டிகள் நிறைந்த தன் மூலஸ்தானத்திற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து வேறொரு புதிய திக்கில் ஓட வேண்டு மென்று நீங்கள் விரும்புகிறீர்களா? அது ஒரு கால் சாத்தியமானாலும், இத்தேசம் தன் சிறப்பியலான சமய வாழ்க்கையைத் துறந்து, புதிய அரசியல் வாழ்க்கையையோ வேறொன்றையோ ஏற்றுக்கொள் ளுதல் இயலாத காரியம்.
எதிர்ப்பின் வலிமை எங்கே குறைவாயிருக் கிறதோ அவ்வழியின் மூலமாகவே உங்களால் வேலை செய்ய முடியும். இந்தியாவில் அவ்வாறு எதிர்ப்பு மிகக் குறைவா யிருக்கும் வழி சமய வழியேயாகும்.
இப்புராதன நாடு இன்னமும் உயிர் வாழ்கிற தென்றால், அதற்குக் காரணம், இன்னமும் அது ஆண்டவனையும், சமயம், பாரமார்த்திகம் என்னும் நிதிக்களஞ்சியங்களையும் விடாமற் பற்றிக்கொண்டி ருப்பதேயாம்.
இந்தியாவை எவராலும் அழிக்க முடியாது; அது மரணபயமின்றி நிமிர்ந்து நிற்கின்றது. ஆன் மாவே அதன் பின் பல மாயிருக்கும் வரை, அதன் மக்கள் பாரமார்த்திக வாழ்வைக் கைவிடாதிருக்கும் வரை நமது தேசம் இங்ஙனமே நின்றொளிரா நிற்கும். இந்தியர்கள் பிச்சைக்காரர்களாகவே யிருக்க லாம். என்றென்றைக்கும் வறுமையும், பட்டினியும் ஆபாசமும், அழுக்கும் சூழ்ந்தவர்களாய் வாழலாம். ஆனால் அவர்கள் தங்கள் இறைவனைக் கைவிட வேண்டாம். தாங்கள் முனிபுங்கவர்களின் வழித் தோன்றிய மக்கள் என்பதை மறக்க வேண்டாம்.