1. நமது தாய்நாடு – அதன் மகிமை

இப்பூவுலகிலே எந்தத் தேசமேனும் புண்ணிய பூமி என்னும் பெயருக்கு உரிமையுடைய தானால் அது நமது பாரத நாடேயாகும். ஆன்மாக்கள் எல்லாம் கர்மபலன் துய்ப்பதற்கு வந்து சேர வேண்டிய தேசமும், கடவுள் வழியில் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் கடைசியாக அடைதற்குரிய வீடும் நமது பரதகண்டமே யாகும். மனித சமூகத்தின் பெருந்தன்மை, தயாளம், தூய்மை, சாந்தம் என்னும் குணங்கள் பரிபூரணமடைந்திருப் பதும், அகநோக்கிலும் பாரமார்த்திகத்திலும் தலை சிறந்தது மான நாடு ஒன்று உண்டானால், அது நமது பாரத வர்ஷமே யாகும்.

உலகிலே உள்ள எந்தப் பெரு மலையையும் விட அதிக உறுதியுடன் நிலைத்து நிற்கும் தேசம் அதுவேயாம். அது அழியாத வலிமையுடையது; முடி வில்லாத வாழ்வுடையது. தோற்றம் ஒடுக்கமில்லாத ஆன்மாவைப்போல் அதுவும் அமரத்வம் பொருந் தியது. அத்தகைய தாய் நாட்டின் புதல்வர்கள் நாம்.

இப்புண்ணிய பூமியில் சமயமும் சாஸ்திரமும் தழைத்து வளர்ந்தன. மகாபுருஷர்களுக்குப் பிறப்பளித்த தேசமும், தியாக பூமியும் நமது தாய் நாடேயாகும். பண்டைக்காலத்திலிருந்து இன்று வரை மனித வாழ்க்கையின் மகோன்னதமான இலட் சியம் விளங்கி வந்திருப்பது இந்நாட்டிலே தான்.

சாஸ்திரம், ஆத்ம வித்தை, சன்மார்க்கம், சாந்தம், இனிமை, அன்பு என்னும் இவற்றிற்குத் தாய் நாடு பாரத தேசமாகும். அவை இன்றளவும் இங்கே நிலைபெற்றிருக்கின்றன. இவ்வுலகில் எனக் குள்ள அநுபவத்தை ஆதாரமாகக் கொண்டு மேற் கூறிய துறைகளில் இன்னமும் இந்தியாவே எல்லாத் தேசங்களிலும் முதன்மை பெற்றிருக்கிறதென்று நான் தைரியமாகக் கூறமுடியும்.

மற்ற நாடுகளிலே கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உலகாயதம் என்னும் தீ எரித்து வரு கின்றது. அத்தீயை அணைப்பதற்கான ஜீவ நீர் இந்நாட்டிலே உண்டு.

நமது தாய் நாட்டிற்கு இவ்வுலகம் பட்டிருக்கும் கடன் மகத்தான தாகும். தேசந் தேசமாய் எடுத்துக் கொண்டு பார்த்தால், சாதுக்களான ஹிந்துக்களுக்கு இவ்வுலகம் கடமைப்பட்டிருப்பதுபோல் வேறெந்த ஜாதிக்கும் கடமைப்பட்டிருக்கவில்லையென்று சொல்லலாம்.

கண்ணுக்குப் புலனாகாமலும், சத்தம் செய்யா மலும் வானின்றிறங்கும் இன்பப் பனித் துளியானது அழகிற் சிறந்த ரோஜா மொட்டுக்களை மலரச்செய் கின்றது. உலகின் அறிவு வளர்ச்சிக்கு இந்தியா செய் திருக்கும் உதவியும் இத்தகையதேயாகும்.

பல்வேறு சமயங்களின் ஆராய்ச்சியினால் நாம் தெரிந்து கொள்வதென்ன? உலகிலே நல்ல தர்ம சாஸ்திரமுடைய தேசமெதுவும் நம்மிடமிருந்து சிறிதேனும் கடன் வாங்காமலில்லையென்பதே. ஆன்மா அழிவற்றது என்னும் கொள்கையுடைய சமயங்கள் எல்லாம், அக்கொள்கையை நேர்முக மாகவோ, மறைமுகமாகவோ நம்மிடமிருந்தே பெற்றிருக்கின்றன.

இந்த தேசத்தில் முடிதாங்கிய பெருமன்னர் கள் தங்கள் மூதாதைகள் வனங்களில் அரை நிர் வாணமாய் வாசம் செய்த ரிஷிகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை யடைந்தார்கள். வேறெந்த நாட்டிலேனும் அத்தகைய அரசர்கள் இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஏழை வழிப்போக் கர்களைக் கொள்ளையடித்துக்கொண்டு பெரிய கோட் டைகளில் வசித்த கொள்ளைக்கார ஜமீன் தார்களின் வழித்தோன்றியவர்கள் தாங்களென்று (மேனாட்டார் போல) இந்நாட்டில் அரசர்கள் சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை.

” வாழ்க்கைப் போராட்டத்தில் பலசாலிகளே மிஞ்சுவார்கள்” என்னும் புதிய கொள்கையைப் பற்றி மேனாட்டார் அதிகம் பேசுகிறார்கள். உடல் பலமுடையவர்களே பிழைத்திருப்பதற்குரியவர்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள். இது உண்மையா னால், பண்டைக் காலத்தில் மிக பலசாலிகளாய் வெற்றிக் கொடி நாட்டி வாழ்ந்திருந்த தேசத்தார் எல்லாம் இன்று புகழுடன் நிலைத்திருக்க வேண்டும்; உடல் வலிவற்றவர்களும், வேறு ஒரு சாதியையோ, தேசத்தையோ என்றும் ஜெயித்தறியாதவர்களு மான ஹிந்துக்கள் முன்னமே மாண்டு மறைந்து போயிருக்க வேண்டும். ஆனால் நாம் முப்பது கோடி மக்கள் இன்று வாழ்ந்து கொண்டுதானிருக்கிறோம்!

இவ்வுலகிலுள்ள பற்பல ஜாதியார்களுக்குள்ளே பிற நாட்டின் மீது எப்போதும் படையெடுத்துச் செல்லாதவர்கள் நாம் தான். அக்காரணத்தினால் ஆண்டவன் ஆசீர்வாதம் நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. அவனுடைய அருள் வலிமையினாலேயே நாம் உயிர் வாழ்ந்து வருகிறோம்.

இவ்வுலகில் மிகப் பெருமை கொண்ட மனிதர் களுக்குள்ளே நானும் ஒருவன். ஆனால் உங்களுக்கு உண்மையைச் சொல்லி விடுகிறேன்;-அந்த பெரு மை என் பொருட்டன்று; என் மூதாதைகளின் பொ ருட்டேயாம். பண்டை ஆரியர்களின் சந்ததிகளே! இறைவன் அருளால் நீங்களும் அத்தகைய பெருமை கொள்வீர்களாக. உங்கள் இரத்தத்திலும் உங்கள் மூதாதை மீதுள்ள நம்பிக்கை ஊறிப்போகுமாக. அது உங்கள் வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து விடுவ தாக. அதன் மூலமாய் உலகிற்கும் கதிமோக்ஷம் கிட்டுமாக.

ஆயிரம் ஆயிரம் வருஷங்களாய் இந்தியா அமைதியுடன் வாழ்ந்து வருகிறது . . . . இங்கிருந்து உயர்ந்த கருத்துக்கள் அலைமேல் அலையாகக் கிளம்பிப் பரவி வந்திருக்கின்றன. இங்கே பேசப் பட்ட. ஒவ்வொரு வார்த்தையும் உலகிற்கு அருளையும் சாந்தத்தையும் நல்கியிருக்கின்றன.

விஸ்தாரமான இவ்வுலகத்தின் சரித்திரம் முழு வதையும் ஆராய்ச்சி செய்து பாருங்கள், உன்னத மான இலட்சியம் ஒன்றை நீங்கள் எங்கே கண்டா லும் அதற்குப் பிறப்பிடம் இந்தியா வாயிருப்பதைக் காண்பீர்கள். மிகப் புராதன காலந்தொட்டு பாரத நாடு மக்கட் குலத்துக்கு உயர்ந்த கருத்துக்களளிக் கும் ஓர் அருஞ்சுரங்கமாயிருந்து வந்திருக்கிறது. உன்னதமான இலட்சியங்களுக்குப் பிறப்பளித்து அவற்றை உலக முழுவதும் விஸ்தாரமாகப் பரப்பி யும் வந்திருக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s