5. சூத்திரர்கள் எப்படி ஆதாயத்துடன் செயல்புரிந்தார்கள்?
எத்தனையோ காலமாக அனுபவித்த கொடுமை காரணமாக சூத்திரர்கள் நாயைப்போல் பாதங்களை நக்குவார்கள்; அல்லது கொடிய மிருகங்களைப்போல் இரக்கமின்றி நடந்துகொள்வார்கள்.
(அறிவு, ராணுவம், செல்வம், உடல் உழைப்பு என்ற நான்கு அடிப்படைச் சமுதாய சக்திகளை சுவாமி விவேகானந்தர் வலியுறுத்திக் கூறினார். இந்த நான்கு சக்திகளையும் அவர் நான்கு வகுப்புகளுக்கு இணையாகக் கூறினார். ஒரு வகுப்பு மக்கள் தங்களது சக்தியை ஒன்றிணைக்க முயலும்போது அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பிராமண ஆட்சி இதனை அறிவைக் கொண்டும், க்ஷத்திரிய ஆட்சி ராணுவ சக்தியைக் கொண்டும், வைசிய ஆட்சி பணத்தைக் கொண்டும், சூத்திரர்கள் ஆட்சி உடல் உழைப்பைக் கொண்டும் செய்தனர். தற்போது மத்திய கிழக்குப் பகுதிகளில் பிராம்மண ஆட்சியும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் க்ஷத்திரிய ஆட்சியும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் வைசிய ஆட்சியும் சீன மற்றும் ரஷ்யா நாடுகளில் சூத்திரர்கள் ஆட்சியும் உள்ளன.
சூத்திரர்கள் எப்படி ஆதாயத்தைத் தேடுகின்றனர். முன்பு கூறியதுபோல் அவர்கள் உடல் உழைப்பு சக்தியை ஒருங்கிணைக்கின்றனர். புரட்சிக்குப் பின்னர் ரஷ்யாவை எடுத்துக்கொள்வோம். அக்டோபர் புரட்சிக்கு முன்னால் லெனின் ‘எல்லா சக்தியும் விவசாயிகளுக்கு’ என்று முழங்கினாலும் ஆகஸ்ட் 28, 1918 அன்று அவர் அளித்த ஆணையில் எல்லா விவசாய அமைப்புகளும் அரசாங்க மாநிலத்தின் கீழ் வர வேண்டும் என்று எழுதினார். கட்சித் தலைவர்கள் இத்தகைய விவசாய அமைப்புகளை வழிநடத்தும்படி ‘புரட்சி அமைப்புகள்’ ஏற்படுத்தப்பட்டன. அவ்வாறே உழைப்பாளிகள் யூனியனும் மாநில அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு அதனை வழிநடத்த கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டார்கள். இப்படியாக விவசாயிகளும் கூலி களும் அரசாங்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு உழைப் பாளிகள் சக்தியானது ஆட்சியாளர்களின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன.)