3. க்ஷத்திரியர்கள் எப்படி சுயநலத்துடன் செயல்புரிந்தார்கள்?
புரோகிதர் எல்லா அறிவுக்கும் மையமாகத் திகழ முயற்சிப்பதுபோல் அரசனும் பௌதீக சக்தி அனைத்தையும்தன்னிடம் குவிப்பதற்கு முயற்சிக்கிறான்.
க்ஷத்திரியன் சொன்னான்: ‘என் ஆயுத பலமில்லா விட்டால் உன் கல்விவலிமையுடன் நீ எங்கிருப் பாய்? நான்தான் எல்லோரிலும் மேலானவன்.’ உறையிலிருந்து பறந்து வந்தது பளிச்சிடும் வாள், சமுதாயம் தலைதாழ்த்தி அதை ஏற்றுக்கொண்டது. அறிவைப் போற்றியவன்தான் அனைவருக்கும் முதலாக அரசனைப் போற்ற ஆரம்பித்தான்.
நாட்டைக் காப்பாற்றுவதற்காகவும், தனது உல்லா சத்திற்காகவும், உறவினர்களின் செலவிற்காகவும், அனைத்திற்கும் மேலாக புரோகிதர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவும், சூரியன் பூமியின் ஈரத்தை உறிஞ்சுவதுபோல் அரசன் குடிமக்களை உறிஞ்சு கிறான். அவனுக்கு இரையாவது வைசியர்கள். அவன் கறப்பதற்காக வைத்திருக்கும் கறவைப் பசுக்கள் வைசியர்களே. க்ஷத்திரிய ஆட்சி கொடுங்கோன்மை யானது; கொடூரமானது.