5. சூத்திரர்களுடைய நிர்வாகத்தின் வரவைப் பற்றி சுவாமிஜியின் தொலைநோக்குப் பார்வை?
ஆனால் ஒரு காலம் வரும். அப்பொழுது சூத்திரர்கள் தங்கள் சூத்திரத் தன்மையுடனேயே முக்கி யத்துவம் பெறுவார்கள். அதாவது அவர்கள் வைசிய, க்ஷத்திரிய இயல்புகளைப் பெற்று வலிமையை வெளிப்படுத்துகிறார்களே, அதுபோல் அல்ல; சூத்திர இயல்பு மற்றும் வழக்கங்களுடனேயே எல்லா நாடுகளிலும் சமுதாயத்தில் ஆதிக்கத்தை அடை வார்கள். அந்த உதயத்தின் முதல்கிரணம் மேற்கு உலகில் இப்பொழுதே மெல்லமெல்லத் தோன்ற ஆரம்பித்துவிட்டது, அதன் விளைவு என்னவாகுமோ என்று எல்லோரும் திகைத்து நிற்கிறார்கள். சோஷலிசம் (Socialism), அனார்கிசம், (Anarcism) நிஹிலிசம் (Nihilism) போன்ற கொள்கைகள் எல்லாம் இந்தப் புரட்சிக்கான முன்னோடிகள்.
இறுதியாக சூத்திரர்கள் அதாவது உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சி. பெளதீக வசதிகள் பலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதுதான் இந்த ஆட்சியின் அனுகூலம். அதன் பிரதிகூலங்கள் பண்பாடு தாழ்வுறுவதாக (ஒருவேளை) இருக்கலாம். இதில் சாதாரணக் கல்வி பேரளவில் பரவும். ஆனால் அசாதாரணமான மேதைகள் குறைந்துகொண்டே போவார்கள்.