7. நம்மை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்?
நாம் செய்கின்ற ஒவ்வொரு செய லும், நம் உடம்பின் ஒவ்வோர் அசைவும், நாம் எண்ணுகின்ற ஒவ்வோர் எண்ணமும் சித்தத்தில் ஒரு பதிவை விட்டுச் செல் கிறது. இந்தப் பதிவுகள் மேற்பரப்பில் தென்படாதிருக்கலாம். ஆனாலும் ஆழ் மனத்தில் நாம் அறியாமலே செயல்புரியும் அளவு வலிமை படைத்தவை அவை. ஒவ்வொரு கணமும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை மனத்திலுள்ள இந்தப் பதிவுகளின் மொத்தமே உருவாக்கு கிறது. இப்போது இந்தக் கணத்தில் நான் என்னவாக இருக்கிறேனோ அது என்னு டைய கடந்தகால சம்ஸ்காரங்களுடைய மொத்தத்தின் விளைவாகும். இதுதான் உண்மையில் குணம் என்று அழைக்கப்படு கிறது. ஒரு மனிதனுடைய குணத்தை இந்த சம்ஸ்காரங்களின் மொத்தமே நிர்ணயிக் கிறது. நல்ல சம்ஸ்காரங்கள் மேலோங்கி யிருந்தால் குணம் நல்லதாக அமைகிறது. தீயவை மேலோங்கியிருந்தால் குணம் தீயதாக அமைகிறது. ஒரு மனிதன் தொடர்ந்து தீய வார்த்தைகளைக் கேட்டு, தீய எண்ணங்களையே எண்ணி, தீய செயல்களையே செய்து கொண்டிருந்தால் அவனது மனம் தீய சம்ஸ்காரங்களால் நிறைகிறது. அவை அவனது சிந்தனை யையும் செயலையும் அவன் அறியாமலே ஆட்டிப்படைக்கின்றன.
உண்மையில் இந்தத் தீய சம்ஸ் காரங்கள் தொடர்ந்து செயல்பட்ட வண்ணமே இருக்கின்றன. அவற்றின் விளைவு தீமையாகத்தான் இருக்கும்; அதன் காரணத்தால் அந்த மனிதன் தீயவ னாக இருக்கிறான். அவனால் இதைத் தவிர்க்க முடியாது. இந்தச் சம்ஸ்காரங்கள் மொத்தமும் தீய செயல்களைச் செய்வதற் கான ஆற்றல் மிக்கதொரு தூண்டுசக்தியை அவனுள் உருவாக்கும். தன் சம்ஸ்காரங் களின் கையில் மனிதன் எந்திரம் போலாகி விடுகிறான். அவை அவனைத் தீமை செய்யும்படிக் கட்டாயப்படுத்துகின்றன.
அது போலவே ஒருவன் நல்ல நினைவுகளையே நினைத்து, நற்செயல் களையே செய்தால் சம்ஸ்காரங்களின் மொத்தமும் நல்லதாக இருக்கும். இவை அவனது நினைப்பும் முயற்சியும் இல்லாம லேயே, அவனை நற்செயல்களில் தூண்டு கின்றன. நல்லது செய்வதிலிருந்து தடுக்க முடியாத மனப்பாங்கு உண்டாகும் அளவிற்கு ஒருவன் மிக அதிகமாக நல்ல வற்றைச் செய்வானானால், மிக அதிகமாக நல்லவற்றையே நினைப்பானானால், தன்னையும் மீறி அவன் தீமை செய்ய முயன்றாலும், அவனது மனப்பாங்கு களின் மொத்தமும் சேர்ந்து அவனைத் தீமை செய்ய விடாமல் தடுத்து விடும். அவன் முழுக்க முழுக்க நல்ல மனப்பாங்கு களின் ஆதிக்கத்தில் இருக்கிறான். அந்த நிலையில் ஒரு மனிதனின் நற்பண்பு நிலை பெற்றுவிட்டது என்று கூறலாம்.
நீங்கள் ஒருவரது உண்மையான குணத்தை அறிய விரும்பினால், அவரது மகத்தான காரியங்களைப் பார்த்து முடிவுக்கு வராதீர்கள். முட்டாள்கூட எப்போதாவது சிலநேரங்களில் மகத்தான மனிதனாக முடியும். ஒருவன் மிகமிகச் சாதாரணச் செயல்களைச் செய்யும்போது கவனியுங்கள். அவையே அவனது உண்மையான குணத்தைத் தெரிவிப் பவை. சில குறிப்பிட்ட நேரங்கள் மிகச் சாதாரண மனிதர்களைக்கூட ஒருவகை யான மகத்தான நிலைக்கு உயர்த்தி விடும். எந்தச் சூழ்நிலையிலும் யாருடைய குணம் எப்போதும் உயர்ந்ததாகவே இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.
உலகில் நாம் காண்கின்ற எல்லா செயல்களும், சமுதாயத்தின் எல்லா இயக்கங்களும், நம்மைச் சுற்றி நடக்கும் வேலைகள் அத்தனையும் வெறும் எண்ணங்களின் வெளித்தோற்றமே; மனித சங்கல்பத்தின் (Will) வெளிப்பாடுகளே. எந்திரங்கள், கருவிகள், நகரங்கள், கப்பல்கள், போர்க் கப்பல்கள் இவை யெல்லாமே மனிதனது சங்கல்பத்தின் வெளிப்பாடுகளே. இந்தச் சங்கல்பம் குணத்தால் அமைகிறது; குணமோ செயல் களால் உருவாக்கப்படுகிறது. செயல் எத்தகைய தோ அத்தகையதே சங்கல்பத் தின் வெளிப்பாடும். உலகம் இதுவரை தோற்றுவித்துள்ள உன் உறுதி வாய்ந்த சங்கல்பம் கொண்டவர்கள் எல்லோரும் மாபெரும் செயல்வீரர்களாகவே இருந் திருக்கிறார்கள். காலங்காலமாகத் தொடர்ந்து செய்து வந்த செயல்களின் மூலம் பெற்ற ஆற்றல் வாய்ந்த தங்கள் சங்கல்பத்தால் உலகையே மாற்றி அமைக்க வல்ல மாபெரும் மனிதர்களாக இருந் தார்கள் அவர்கள்.
எண்ணங்களுக்கு ஏற்ப நாம் உருவா கிறோம். ஆகவே என்ன நினைக்கிறாய் என்பதில் எச்சரிக்கையாக இரு. சொற்கள் இரண்டாம் பட்சமானவை. எண்ணங்கள் வாழ்கின்றன, நீண்ட தூரம் செல்கின்றன. நமது ஒவ்வோர் எண்ணத்திலும் நமது குணம் படிந்திருக்கிறது. மகான் ஒருவரின் வேடிக்கைப் பேச்சும் ஏச்சுகளும்கூடத் தூய அன்பில் தோய்ந்தவையாக இருக்கும், அவை நன்மையே பயக்கும்.
பெரிய விஷயங்களைச் சாதிக்க மிக உயர்ந்த, இடையறாத முயற்சி தேவை. ஒருசிலர் தோற்றாலும் நாம் அதை எண்ணிக் குழம்ப வேண்டியதில்லை. பலர் வீழ்வதும், தடைகள் வருவதும், பெருந்துன்பங்கள் எழுவதும், மனித இதயத்திலுள்ள சுயநலம் போன்ற எல்லா பேய்களும் ஆன்மீகம் என்னும் பெரும் நெருப்பால் விரட்டியோட்டப்பட இருக் கின்ற வேளையில் கடும் போராட்டம் செய்வதும் இயல்பாக ஏற்படக்கூடியவை தான். நன்மைக்கான பாதைதான் பிரபஞ் சத்திலேயே மிகவும் கரடு முரடானது, மிகவும் செங்குத்தானது. அந்தப் பாதை யில் இத்தனைபேர் வெற்றி பெறுவதுதான் ஆச்சரியத்திற்குரிய விஷயம்; இத்தனை பேர் தோற்றுப் போவது வியப்பிற்கு உரியதல்ல. ஆயிரம் முறை இடறி விழுவ தன்மூலமே நற்பண்பை நிலை நிறுத்த வேண்டும்.
பற்றின்மை வேண்டுமானால் மனம் – தெளிவாக, நன்மை நிறைந்ததாக, விவேகம் உடையதாக இருக்க வேண்டும். பயிற்சி ஏன் வேண்டும்? ஒவ்வொரு செயலும் நீர்ப்பரப்பில் எழுகின்ற அலை களைப் போன்றவை. அலைகள் ஓய்ந்த பின் என்ன எஞ்சியிருக்கிறது? சம்ஸ் காரங்கள், பதிவுகள். இத்தகைய பல பதிவுகள் மனத்தில் ஏற்படும்போது அவை ஒருங்கிணைந்து பழக்கம் ஆகிறது. ‘பழக்கம் என்பது இரண்டாம் இயல்பு’ என்பர், முதல் இயல்பும் அதுதான், மனிதனின் முழு இயல்பும் அதுதான். நாம் இப்போது எதுவெல்லாமாக இருக் கிறோமோ அது பழக்கத்தின் விளைவு தான். இது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. ஏனெனில் அது வெறும் பழக்கம் மட்டுமே என்றால், எந்த நேரத்தில் வேண்டு மானாலும் அதை உருவாக்கலாம், இல்லாமலும் செய்யலாம்.
மனத்தைக் கடந்து செல்கின்ற ஒவ்வொரு விருத்தியும் அதில் விட்டுச் செல்கின்ற விளைவே சம்ஸ்காரம். இந்தப் பதிவுகளின் ஒட்டு மொத்தமே நமது குணம். இதில் ஏதாவது ஒரு விருத்தி மேலோங்கும் போது அதற்கேற்ப ஒருவனது குணம் அமைகிறது. நல்லவை மேலோங்கினால் நல்லவன் ஆகிறான்; தீயவை மேலோங்கினால் தீயவன் ஆகிறான். மகிழ்ச்சியானவை மேலோங்கி னால் மகிழ்ச்சி அடைகிறான். தீய பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்வது தான். தீய சம்ஸ்காரங்கள் விட்டுச் சென்றுள்ள தீயபழக்கங்களை நல்ல பழக்கங்களால்தான் கட்டுப்படுத்த வேண் டும். தொடர்ந்து நற்செயல்களைச் செய் யுங்கள். புனித எண்ணங்களை எப்போதும் எண்ணுங்கள். தீய சம்ஸ்காரங்களை அடக்க இது ஒன்றுதான் வழி. திருந்தவே முடியாதவன் என்று ஒருவனை ஒரு போதும் கூறாதீர்கள். ஏனெனில் பல பழக்கங்களின் மொத்தமான ஒரு குணத்தையே அவன் வெளிப்படுத்து கிறான். இதனைப் புதிய நல்ல பழக்கங் களால் மாற்றிவிட முடியும். தொடர்ந்த பழக்கம் குணத்தை உருவாக்குகிறது. தொடர்ந்த பழக்கங்கள் மட்டுமே குணத்தை மாற்றியமைக்க முடியும்.
விட்டுவிடு, உலகத்தைத் துறந்துவிடு. சமையல் அறைக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து இறைச்சித் துண்டைத் தின்னும் நாயைப் போன்ற நிலையில் நாம் இருக் கிறோம். யார் எப்போது வந்து விரட்டுவார்களோ என்ற பயத்தில் சுற்று முற்றும் பார்த்தபடித் தின்னும் நாயைப் போலிருக்கிறது நமது நிலைமை. நீ அரசன் என்பதையும் இந்த உலகம் உனக்குச் சொந்தமானது என்பதையும் தெரிந்து கொள். உலகத்தைத் துறக்காதவரை, தளை அறுபடாதவரை இந்த நிலை உனக்கு ஏற்படாது. புற அளவில் உன்னால் உலகைத் துறக்க முடியாவிட்டால் மனத் தாலாவது துறக்கப் பழகிக்கொள், உள்ளத்துள் அனைத்தையும் துறந்து விடு, வைராக்கியத்தைக்கடைப்பிடி. இதுவே உண்மைத் தியாகம். இது இல்லாமல் உனக்கு ஆன்மீகம் கிடையாது. ஆசைப் படாதே. ஏனெனில் ஆசைப்படுவது உனக்குக் கிடைக்கும், அதைத் தொடர்ந்து பயங்கரமான தளையும் வரும்.