6. புலனின்பங்கள் வாழ்க்கையின்
குறிக்கோள் அல்ல
மனிதனின் லட்சியம் இன்பம் அல்ல, அறிவே. இன்பமும் போகமும் ஒரு முடிவுக்கு வந்தே தீரும். இந்த இன்பத்தை லட்சியமாக எண்ணுவது தவறு. தான் அடைய வேண்டிய லட்சியம் இன்பமே என்று மனிதன் முட்டாள்தனமாக நினைப் பதுதான் இன்று உலகில் காணப்படும் எல்லாவிதமான துன்பங்களுக்கும் காரணம். ஆனால் அவன் சென்று கொண் டிருப்பது இன்பத்தை நாடி அல்ல, அறிவைத் தேடியே. இன்பமும், அது போல் துன்பமும் பெரிய ஆசிரியர்கள், நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் அவன் படிப்பினை பெறுகிறான்…. குணத்தை உருவாக்குவதில் துன்பமும் இன்பமும் சரிசமமான பங்கு வகிக் கின்றன. குணத்தைச் செப்பனிடுவதிலும் நன்மை, தீமை இரண்டிற்கும் சம இடம் உண்டு. சிலவேளைகளில் இன்பத்தை விடத் துன்பமே சிறந்த ஆசிரியராக அமைகிறது. உலகம் தந்துள்ள உயர்ந்த மனிதர்களின் வாழ்வை ஆராய்ந்தோமா னால், பெரும்பாலோரது வாழ்க்கையில் இன்பங்களைவிடத் துன்பங்களே, செல் வத்தைவிட வறுமையே அவர்களுக்குப் பாடமாக அமைந்துள்ளன; புகழ்மொழி களைவிட ஏமாற்றங்களே, அடிகளே அவர்களது அக ஆற்றல்களை வெளியே கொண்டு வந்துள்ளன என்று நான் துணிந்து கூறுவேன்.
புலனின்பம் மனித குலத்தின் குறிக் கோள் அல்ல, அறிவுதான் (ஞானம்) வாழ்க்கையின் இலட்சியம். மிருகம் புலன்களின்மூலம் இன்புறுவதைவிட மனிதன் அறிவின்மூலம் அதிகம் இன்புறு வதை நாம் காண்கிறோம். மனிதன் தன் அறிவு இயல்பில் இன்புறுவதைவிட ஆன்மீக இயல்பில் அதிகம் இன்புறுகிறான். ஆகவே மிகவுயர்ந்த அறிவு ஆன்மீக அறிவாகத்தான் இருக்க வேண்டும். இந்த
அறிவின் காரணமாகப் பேரின்பம் விளை கிறது. இந்த உலகின் பொருட்கள் எல்லாம் அந்த உண்மையறிவு மற்றும் பேரின்பத் தின் நிழல்கள், அவற்றின் மூன்றாந்தர மான அல்லது நாலாந்தரமான வெளிப் பாடுகள் மட்டுமே.
முட்டாள்கள்தான் புலனின்பங்களை நாடி ஓடுகிறார்கள். புலனின்பங்களில் உழல்வது எளிது. உண்பது, உறங்குவது என்ற பழைய பாதையிலேயே செல்வது எளிது. நவீனத் தத்துவவாதிகளின் கருத்து என்ன? புலன்களின் திருப்திக்குக் காரண மான கருத்துக்களைக் கூறி அதற்கு மதம் என்ற முத்திரை குத்துவதுதான். இது ஆபத் தானது. புலன்வழிச் செல்லும் வாழ்வில் மரணம்தான் இருக்கிறது. ஆன்ம நிலை யில் நிலைபெற்று வாழ்வதே வாழ்க்கை. வேறு எந்தவிதமான வாழ்க்கையும் மரணமே. வாழ்க்கை முழுவதுமே ஓர் உடற்பயிற்சிக்கூடம் எனலாம். உண்மை யான வாழ்வை அனுபவிக்க வேண்டு மானால் இதைக் கடந்து அப்பால் செல்ல வேண்டும்.
நம்மை ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்?