உன் வாழ்க்கை உன் கையில்!-3

3. நாம் உயர சில விதிமுறைகள்

இந்த ஆளுமையை வளர்க்க உதவுகின்ற நியதிகளைக் கண்டுபிடித்திருப்பதாக யோக சாஸ்திரம் கூறுகிறது. அந்த நியதிகளையும் முறைகளையும் ஒழுங்காகக் கவனத்துடன் பின் பற்றுவதால் ஒவ்வொருவரும் தன் ஆளுமையை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது அது. செயல்முறை வாழ்க்கைக் குரிய முக்கிய விஷயங்களுள் இது ஒன்று. கல்வி என்பதன் ரகசியம் இதுவே. இதனை அனைவரும் செயல்முறைப்படுத்திக் காண முடியும். இல்லறத்தார், ஏழை, செல்வந்தர், தொழிலாளி, ஆன்மீகவாதி என்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆளுமையை வலுப்படுத்துவது என்பது முக்கியமான ஒன்று.

தூல நியதிகளுக்குப் பின்னால், மிக நுண்ணிய நியதிகள் இருப்பது நமக்குத் தெரியும். அதாவது, பௌதீக உலகம், மன உலகம், ஆன்மீக உலகம் என்று தனித்தனியாக அந்த உண்மை கள் இல்லை. இருப்பதெல்லாம் ஒன்றே. அது நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கின்ற கூம்பு வடிவம் போன்றது என்று ஒருவகை யில் கூறலாம். அனைத்திலும் கனத்த பகுதி இங்குள்ளது. அது குவிந்து மென்மேலும் நுண்ணியதாகிச்செல்கிறது. மிகவும் நுண்ணியதை நாம் உயிர் என்கிறோம். ‘அனைத்திலும் தூல மானது உடல். சரியாக இங்கு பிண்டத்தில் (Microcosm) உள்ளது போன்றே அண்டத்திலும் (Macrocosm) உள்ளது. நம் பிரபஞ்ச மும் இதைப்போன்றே உள்ளது-பிரபஞ்சம் புறத்தேயுள்ள மிகவும் தூலமான பகுதி; இது ஒடுங்கி மேன்மேலும் நுண்ணிய தாகி மிக நுண்ணியதாகி, இறுதியில் இறைவனாகிறது.

மிகப் பேராற்றல் இருப்பது நுண்மையில்தானே தவிர, தூலத்தில் அல்ல என்பதையும் நாம் அறிவோம். ஒருவன் பெரிய சுமையைத் தூக்குகிறான். அவனுடைய தசைகள் பருக் கின்றன, உடல் முழுவதும் கடும் முயற்சிக்குரிய அடையாளங் கள் காணப்படுகின்றன. அவனது தசைகள் வலுவானவை என்று நாம் கருதுகிறோம். ஆனால் மெல்லிய நூலிழை போன்ற நரம்புகளே தசைகளுக்குச் சக்தியை ஊட்டுகின்றன. இந்த நூலிழைகளில் ஒன்று, அந்தத் தசைகளைச் சேராதவாறு அறு பட்டால் போதும், வேலை செய்யும் திறனைத் தசைகள் முற்றி லும் இழந்துவிடும். இந்த மெல்லிய நரம்புகள் தம்மைவிட நுண்ணிய ஒன்றிலிருந்து ஆற்றலைக் கொண்டுவருகின்றன. அது தன்னைவிட மிக நுண்ணிய ஒன்றாகிய எண்ணத்திலிருந்து அந்த ஆற்றலைப் பெறுகின்றது. ஆக, உண்மையில் ஆற் றலுக்கு உறைவிடம் நுண்பொருளே. ஆனால் தூல இயக்கங் களில் அதனைக் காண்கிறோம், நுண் இயக்கங்களில் காண முடிவதில்லை. ஒரு தூலப் பொருள் அசையும்போது அதனைக் காண்கிறோம். எனவே இயக்கத்தையும் தூலப் பொருட்களை யுமே பொதுவாக நாம் ஒன்றுபடுத்திப் பார்க்கிறோம். உண்மை யில் எல்லா ஆற்றலும் இருப்பது நுண்மையில்தான்.

நுண்பொருளில் இயக்கம் எதையும் நாம் காண்பதில்லை. ஒருவேளை இயக்கம் அவ்வளவு தீவிரமாக இருப்பதால் நாம் அதைக் காண முடியாமல் இருக்கலாம். ஆனால் ஏதேனும் விஞ்ஞானத்தாலோ, ஆராய்ச்சியாலோ, வெளியே தெரிகின்ற இந்த இயக்கத்திற்குக் காரணமான நுண்ணிய சக்திகளைக் கைப்பற்ற ஒரு துணை கிடைக்குமானால், புற இயக்கத்தையே கட்டுப்படுத்த முடியும். குளத்தின் அடியிலிருந்து நீர்க்குமிழி கிளம்புகிறது. அது வந்துகொண்டிருக்கும் போதெல்லாம் அதை நாம் காண்பதில்லை; நீர்மட்டத்திற்கு வந்து வெடிக்கும் போது மட்டுமே பார்க்கிறோம். அதுபோலவே, எண்ணங்கள் பேரளவிற்கு முதிர்ந்த பிறகே, அதாவது அவை செயல்களான பின்பு மட்டுமே அவற்றை நாம் உணர முடியும்.
நமது செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை , எண் ணங்களை அடக்க முடியவில்லை என்று அடிக்கடி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும்? நுண் இயக்கங் களை நாம் அடக்க முடிந்தால், அது எண்ணமாகும் முன்பே, செயலாகும் முன்பே, அதன் மூலத்தை நாம் பற்ற முடியுமானால் மட்டுமே அதனை முழுமையாக நாம் அடக்க முடியும். இந்த நுண்ணிய சக்திகளை, நுண்ணிய காரணங்களைப் பகுக்கவும், ஆராயவும், அறியவும், இறுதியாக, அடக்கியாளவும் முறை ஒன்று இருக்குமானால் அப்போதுதான் நம்மை நாம் அடக்க முடியும்.
தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங் களையும் கட்டாயமாக அடக்க முடியும். இதனாலேயே தூய்மை யும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப் பட்டுள்ளன. தூய்மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னை அடக்கி ஆள்கிறான். எல்லா மனங்களும் ஒரே தன்மையுடை யவை; ஒரே பெரிய மனத்தின் பகுதிகள். களிமண்கட்டி ஒன்றை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந் தவன் ஆகிறான். தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ் வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிகிறான்; ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான்.

நுண்ணிய பகுதிகளை அடக்கிவிட்டோமானால் பௌதீக உலகின் தீமையின் பெரும் பகுதியை நாம் ஒழித்துவிட முடியும். நுண்ணிய இயக்கங்களை நாம் அடக்குவோமானால் பல கவலை களை நீக்கிவிட நம்மால் முடியும். இந்த நுண்ணிய ஆற்றல்களை அடக்க முடிந்தால் பல தோல்விகளைத் தவிர்த்துவிடலாம்.

மேற்கோள்கள்:- எழுந்திரு! விழித்திரு! பகுதி 2 | ராஜயோகம் | ஆ. பதஞ்ஜலி யோக சூத்திரங்கள் (உயர்நிலைப் பாடங்கள்) | II. சொற்பொழிவுக் குறிப்புகள் | 5. மனத்தின் ஆற்றல்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s