மதமாற்றம் பற்றி சுவாமி விவேகானந்தர்


இந்தியா: மத சகிப்புத்தன்மையின் உறைவிடம்

1. பிற மதக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்பு களை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று நாங்கள் ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம்

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டைவிட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புக லிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன்.

ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

பெருமைமிக்க ஜொராஸ்டிரிய மதத் தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக் கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். (ஞான தீபம், 1.29-31.)

2. இந்தியாவில் இந்துக்களிடம் மத வெறுப்போ அதனால் வரும் துன்புறுத்தல்களோ ஒருபோதும் இருந்த தில்லை ; உலக மதங்கள் எல்லாவற்றிட மும் அவர்கள் வியக்கத்தக்க மரியாதை காட்டிவந்தார்கள்.

சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்ட ஹீப்ருக்களுக்கு இந்துக்கள் புகலிடம் தந் தார்கள்; இதன் பலனாக இன்று மலையாள யூதர்கள் பலர் இருக்கின்றனர். ஏறக்குறைய அழிக்கப்பட்ட பாரசீகத்தினரில் எஞ்சிய வர்களையும் வரவேற்றுப் புகலிடம் தந் தார்கள் இந்துக்கள்; அவர்கள் இன்றும் எங்களிடையே, எங்களுள் ஒரு பகுதியாக, எங்கள் அன்புக்கு இலக்காகி, பம்பாய்ப் பார்சிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஏசுநாதரின் சீடரான புனிதர் தாமஸ் என்பவருடன் இந்தியாவிற்கு வந்ததாகக் கூறிக்கொள்கின்ற கிறிஸ்தவர்கள் இந்தியா வில் வாழ அனுமதிக்கப்பட்டார்கள்; அவர்களும் சொந்த மதத்தைப் பின்பற்று வதற்குத் தடை செய்யப்படவில்லை ;….. அந்தச் சகிப்புத்தன்மை இன்றும் அழி யாமல் இருக்கிறது, இந்த நாட்டில் அது அழியாது, அழிய முடியாது. (ஞான தீபம், 4.32-33.)

3. மதங்களிடையே ஏதோ சிறிதளவு சகிப்புத்தன்மையும் ஏதோ சிறிது அனுதாப முமாவது உலகில் காணப்படுகிறது என் றால், அது ஆரியர்களின் பூமியான இந்த இந்தியாவில்தான்; வேறு எங்கும் இல்லை. இங்கேதான் இந்தியர்கள் முகமதியர் களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கோயில் களைக் கட்டித் தந்திருக்கிறார்கள்; வேறெங் கும் இல்லை . நீங்கள் வெளி நாடுகளுக்குச் சென்று அங்கு முகமதியர்களிடமோ, மற்ற மதத்தினரிடமோ உங்களுக்காக ஒரு கோயிலைக் கட்டித் தரும்படி கேளுங்கள்;

அவர்கள் எப்படி உதவி செய்கிறார்கள் என்பதை அப்போது காண்பீர்கள். உங்களுக் காகக் கோயில் கட்டித் தருவதைவிட உங்கள் கோயில்களை இடிப்பதிலும், முடிந்தால் உங்களையே தீர்த்துக் கட்டவும் தான் அவர்கள் முயல்வார்கள். (ஞான தீபம், 5.16-17.)


மதவெறி வேண்டாம்

1. ஒவ்வொரு மதத்திலும் உடன்பாடு, எதிர்மறை என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் உள்ள அவதாரம், மூவர், ஏசுவின்மூலம் மோட்சம் அடைதல் ஆகியவற்றைப்பற்றி நீங்கள் சொல்லும்போது, நான் அவற்றை ஆமோதிக்கிறேன்; ‘நல்லது, இவைகளெல் லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறேன்’ என்கிறேன். ஆனால் (கிறிஸ்தவ மதத்தைத் தவிர) உண்மையான மதம் வேறு இல்லை; (பைபிளைத் தவிர) தெய்வீக நூல்கள் வேறு இல்லை’ என்று சொல்ல வரும் போதுதான், ‘நிறுத்துங்கள், உங்கள் கதவை அடைக்கும் போது, பிற மதங்களின் உண்மையை நீங்கள் மறுக்கும் போது, என்னால் ஒப்புக்கொள்ள முடியாது’ என்று சொல்வேன். ஒவ்வொரு மதமும் தெரிவிக்க வேண்டிய செய்தி இருக்கிறது; கற்பிக்க வேண்டிய பாடம் இருக்கிறது. ஆனால் ஒரு மதம் மற்ற மதங்களை மறுக்கும்போது, மற்ற மதங்களுக்குத் தொந்தரவு கொடுக் கும்போது, அது எதிர்மறையான, ஆதலால் ஆபத்தான ஒரு போக்கைப் பின்பற்றுகிறது. எங்கே தொடங்குவது, எங்கே முடிப்பது என்று அதற்குத் தெரியவில்லை. (ஞான தீபம், 1.455 456.)

2. கொள்கைவெறியாலும் குருட்டுப் பிடிவாதத்தாலும் ஒரு மதத்தை மிக விரை வில் பரப்பிவிடலாம். அதில் சந்தேகம் இல்லை . ஆனால் எந்த மதம் ஒருவனது கருத்துக்களுக்குச் சுதந்திரம் கொடுத்து, அவனை உயர்ந்த நெறிக்குச் செலுத்து கிறதோ, அந்த மதம்தான் உறுதியான அடிப்படையில் நிலைபெற்றதாகும். இந்தப் பாதை மெதுவானதாக இருந்தாலும் தவறில்லை . (ஞான தீபம், 1.469.)

3. பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப் பற்று, இவற்றால் உண்டான மத வெறி, இவை இந்த அழகிய உலகை நெடு நாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்தப் பூமியை நிரப்பியுள்ளன; உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத் தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்து விட்டன. அந்தக் கொடிய அரக்கத் தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிடப் பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்! (ஞான தீபம், 1.30-31.)

4. தன் மதம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப்படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், ‘உதவி செய், சண்டை போடாதே.’ ‘ஒன்று படுத்து, அழிக்காதே.’ ‘சமரசமும் சாந்த மும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்று எழுதப்படும் என்று அவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். (ஞான தீபம், 1.58.)

5. இந்தியா ஒன்றுதான் வெளிநாடுகளை ஆக்கிரமிக்கவில்லை என்பது உங் களுக்குத் தெரியாதா? தமது சந்ததிகள் யாரும் எந்த நாட்டின்மீதும் படை பெடுக்கக் கூடாதென அசோகச் சக்கர வர்த்தி நிபந்தனை விதித்தார். எங்கள் நாட் டிற்குப் போதகர்களை அனுப்புபவர்கள் எங்களுக்கு உதவி செய்யட்டும், எங்களைக் கெடுக்க வேண்டாம்.

இவர்களெல்லாம் ஏன் இந்துக்களை ஆக்கிரமிக்க நினைக்க வேண்டும்? இந்துக்கள் எந்த நாட்டிற்காவது தீங்கு செய்ததுண்டா ? தங்களால் முடிந்த சிறிய அளவில் உலகிற்கு நன்மையே செய் திருக்கின்றனர். விஞ்ஞானம், தத்துவம், மதம் இவற்றையெல்லாம் உலகிற்குக் கற்பித்திருக்கின்றனர்; காட்டுமிராண்டிக் கூட்டங்களை நாகரீகம் பெறச் செய்திருக் கின்றனர். அதற்குப் பிரதியாக அவர் களுக்குக் கிடைத்ததெல்லாம் கொலையும் கொடுங்கோன்மையும் அஞ்ஞானிகள், பாவிகள் என்ற அவச் சொற்களும்தான்.

இந்தியாவைப்பற்றி மேலை நாட்டினர் எழுதியுள்ள நூல்களையும் யாத்திரீகர்கள் புனைந்துள்ள கதைகளையும் பாருங்கள்! எந்தக் கேடுகளைச் செய்ததற்காக அவர்கள் மீது இவை அள்ளி வீசப்படுகின்றன? (ஞான தீபம், 4.24-25)

மதமாற்றம் தேவையில்லை

1. மதங்களிடையே ஒருமைப்பாடு ஏதாவது ஒரு மதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிடைக்கும் என்று இங்குள்ள யாராவது நம்பினால், அவரிடம் நான், ‘சகோதரா! உனது நம்பிக்கை வீண்’ என்று சொல்லிக் கொள்கிறேன்.

கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண் டும் என்பது என் எண்ணமா? கடவுள் தடுப்பாராக! அல்லது இந்து வோ, பௌத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா? கடவுள் தடுப்பாராக!

விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண் ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிறதா? இல்லை . அது செடியாகிறது. தனது வளர்ச்சி நியதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒரு செடியாக வளர்கிறது.

மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ, பௌத்த ராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பௌத்தராகவோ கிறிஸ்தவ ராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு, தன் வளர்ச்சி நியதியின்படி வளர வேண்டும். (ஞான தீபம், 1.57-58.)

2. உலகத்தில் உள்ள எந்த மதத் துடனும் நமக்கு விரோதம் இல்லை . நம் ஒவ்வொருவருக்கும் இஷ்டம், அதாவது தனி வழி உள்ளது. ஆனால் வெளி நாட்டிலிருந்து சிலர் வந்து, ‘இது ஒன்று தான் எல்லோருக்கும் வழி’ என்று சொல்லி, அதையே பின்பற்றுமாறு நம்மை வற்புறுத்தும் போது நாம் அவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்: ‘உங்களைப் பார்த்துச் சிரிப்புத்தான் வருகிறது’.

கடவுளைக் காண்பதற்கு, மாறுபட்ட ஒரு பாதையைப் பின்பற்றுவது போல் தோன்றுவதால் தங்கள் சகோதரர்களை அழிக்க விரும்புகின்ற இவர்களிடம் அன்பைப் பற்றிப் பேசுவது வீண். இவர்கள் காட்டும் அன்பையும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தங்கள் வழி யிலிருந்து மாறுபட்ட பாதையைப் பின் பற்றுபவர்களைக் கண்டால் பொறுக்க முடியாத இவர்களால் எப்படி அன்பைப் போதிக்க முடியும்? அது அன்பென்றால், பிறகு வெறுப்பு என்பதுதான் என்ன?

உலகத்தில் உள்ள எந்த மதத்துடனும், அது ஏசுவையோ, புத்தரையோ, முகமது வையோ அல்லது வேறு எந்த மகானையோ வழிபடச் சொன்னாலும் அவற்றுடன் தமக்குச் சண்டை கிடையாது. இந்து அவர் களைப் பார்த்து, ‘வாருங்கள் சகோதரர்களே! நான் உங்களுக்கு உதவுகிறேன். ஆனால் என் வழியில் நான் செல்ல நீங்களும் அனுமதிக்க வேண்டும். அது என் இஷ்டம். உங்கள் வழி மிகவும் நல்லதுதான். அதில் சந்தேகமில்லை . ஆனால் எனக்கு அது அபாயமானதாக இருக்கலாம். எனக்கு எந்த உணவு நல்லது என்பதை என் அனுபவம் தான் எனக்குச் சொல்ல முடியும். ஒரு பெரிய டாக்டர் பட்டாளமும் அதைக் கூற முடியாது. எனவே எனக்கு எது மிக நல்ல பாதை என்பதை நான் என் அனுபவத்தி லிருந்தே அறிந்து கொள்கிறேன்’ என்கிறான். (ஞான தீபம், 5.36-37.)

3. கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர் ஒருவர் ஒருநாள் என்னிடம் வந்து, ‘நீ ஒரு மகா பாவி’ என்று கூறினார். ‘ஆம், உண்மைதான். அதனால் என்ன?’ என்றேன் நான். அவர் ஒரு மதப் பிரச்சாரகர், என்னை விடவில்லை. அவரைக் கண்டாலே நான் ஓடிவிடுவேன். அவர் என்னிடம், ‘உன்னைக் காப்பாற்ற நான் சிலவற்றை வைத்திருக்கிறேன். நீ பாவி. நீ நரகத்திற்குப் போகப் போகிறாய்’ என்றார். ‘மிக நல்லது, வேறு ஏதாவது உண்டா ?’ என்று கேட் டேன். பிறகு அவரிடம், ‘ஆமாம், நான் நரகத்திற்குப் போவது சரி, நீங்கள் எங்கே போவீர்கள்?’ என்று கேட்டேன். ‘நான் சொர்க்கத்திற்குப் போவேன்’ என்றார் அவர். ‘நான் நரகத்திற்கே போகத் தீர்மானித்து விட்டேன்’ என்றேன் நான். அன்றுமுதல் அவர் என்னைத் தொல்லைப் படுத்துவது நின்றது. (ஞான தீபம், 4.86.)

மதமாற்றத்தால் கொடுமையும் பாவமும் விலகாது.

1. ‘நீங்கள் தொலைந்தீர்கள். எங்கள் மதத்தை நம்புங்கள், ஏசு உங்களைக் கரையேற்றுவார்’ என்கிறார் கிறிஸ்தவர். இது வெறும் மூட நம்பிக்கை அல்லாமல் வேறல்ல என்பது ஒருபுறமிருக்க, இதை உண்மை என்றே வைத்துக்கொண்டால், கிறிஸ்தவ நாடுகளில் கொடுமையும் பாவமும் இருக்கவே கூடாதே! இதனை நாம் நம்பித்தான் பார்ப்போம் – நம்புவ தால் நமக்கு இழப்பு ஒன்றும் இல்லை . ஆனால் இந்த நம்பிக்கையால் எந்தப் பலனும் இல்லையே! ‘ஏன் இவ்வளவு தீயவர்கள் இருக்கிறார்கள்?’ என்று அவர் களைக் கேட்டால், ‘நாங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டும்’ என்கிறார்கள். (ஞான தீபம், 4.87.)

இந்தியாவை மதம் மாற்ற முடியாது

1. அன்பு சகோதரரே,

உங்கள் கடிதம் இப்போதுதான் கிடைத்தது. நான் மிகவும் அவசரமாக உள்ளேன். சற்று உரிமை எடுத்துக் கொண்டு, ஒருசில விஷயங்களில் உங்களைத் திருத்த எண்ணுகிறேன், மன்னியுங்கள்.

முதன்முதலாக, நீங்கள் எங்கள் மதத்தைப்பற்றி என்ன நினைத்தாலும் சரி, எந்த மதத்தையோ, அதைத் தோற்று வித்தவரையோ குறை கூறுபவன் அல்ல நான். எல்லா மதங்களும் எனக்குப் புனிதமானவை.

இரண்டாவதாக, பாதிரிகள் எங்கள் சுதேச மொழிகளைக் கற்றுக் கொள்வ தில்லை என்று நான் சொன்னதாகக் கூறுவது தவறு. அவர்கள் சம்ஸ்கிருத மொழியில் கவனம் செலுத்துவதில்லை என்று சொன்னேன், அதை இன்னும் சொல்கிறேன்.

ஏதாவது மத அமைப்பிற்கு எதிராக நான் பேசினேன் என்பதும் உண்மையல்ல. இந்தியாவை ஒருநாளும் கிறிஸ்தவ மதத் திற்கு மாற்றி விட முடியாது என்று நான் கூறியதுண்டு; அதை இப்போதும் வற் புறுத்திக் கூறுகிறேன்.

கீழ்வகுப்பு மக்களின் நிலைமையைக் கிறிஸ்தவ மதம் சீர்படுத்துகிறது என்பதை யும் நான் மறுக்கிறேன். தென்னிந்தியக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் கத்தோலிக்கர்களாக மட்டும் இல்லை; அவர்கள் தங்களை ஜாதிக் கிறிஸ்தவர்கள் என்றே கூறிக் கொள்கின்றனர். அதாவது அவர்கள் தத்தம் ஜாதிகளில் ஒட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்து சமுதாயம் தனது ஒதுக்கி வைத்தல் கொள்கையைத் தவிர்த்து விடு மானால், இந்து மதத்தின் குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்தக் கிறிஸ்தவர்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் திரும்பவும் இந்து மதத்திற்கு ஓடோடி வந்துவிடுவார்கள் என்பதை நான் பூரணமாக நம்புகிறேன்.

இறுதியாக, சுதேச சகோதரன் என்று என்னை நீங்கள் குறிப்பிட்டதற்காக இதயபூர்வமாக நன்றி கூறுகிறேன். ஐரோப்பிய நாட்டிலானாலும், இந்தியா வில் பிறந்த ஐரோப்பியனாக இருந் தாலும் வெறுக்கப்பட்டவனான ஒரு சுதேசி யைப் பாதிரிகளோ, பாதிரி அல்லாதவர் களோ தைரியமாக சகோதரன் என்று அழைத்தது இதுவே முதல் தடவை. இந்தியாவிலும் இவ்வாறு என்னை அழைக்க உங்களுக்குத் தைரியம் இருக் கிறதா? இந்தியாவில் பிறந்த உங்கள் பாதிரிக் கூட்டத்தினரையும் அவ்வாறே செய்யுமாறு சொல்லுங்கள்; இந்திய சுதேசி களை மனித சகோதரர்கள் என்ற முறையில் நடத்துமாறு இந்தியாவில் பிறக்காத பாதிரிகளுக்குச் சொல்லுங்கள்.

மற்ற விஷயங்களைப்பற்றி நான் கூறுவது இதுதான்: அலைந்து திரியும் யாத்திரிகர்களும், கட்டுக்கதைகளும் சொல் வதை எனது மதமோ, சமுதாயமோ ஏற்றுக் கொள்கிறது என்று நான் ஒத்துக்கொண் டால், என்னை ஒரு முட்டாள் என்றல்லவா நீங்களே கூறுவீர்கள்?

என் சகோதரரே, என்னை மன்னி யுங்கள்; இந்தியாவிலேயே நீங்கள் பிறந்திருந்தாலும் எங்கள் சமுதாயத்தைப் பற்றியோ மதத்தைப்பற்றியோ உங்களுக்கு என்ன தெரியும்? தெரியவே முடியாது; அந்தச் சமுதாயம் அவ்வளவு இறுக்கி மூடப்பட்டுள்ளது. மேலும், தான் ஏற் கனவே கொண்டுள்ள ஒரு கருத்தின்படியே ஒவ்வொருவனும் இனம், மதம் இவற்றை மதிப்பிடுகிறான், இல்லையா?

சுதேச சகோதரன் என்று என்னை அழைத்ததற்காக இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கீழை, மேலை நாடு களுக்கு இடையே சகோதர மனப்பான்மை யும் நட்பும் ஏற்படுவதற்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. (ஞான தீபம், 9.259-260.)

சகோதர உணர்வுடன்

விவேகானந்த

2. ஏசு இந்திய நாட்டிற்கு வந்து விட்டார் என்று சிலர் டமாரமடித்து வருகிறார்கள். அவர்களுக்காகவும் சொல் கிறேன். ஐயோ, என் நண்பர்களோ நீங்கள் நினைப்பது போல் ஏசுவும் வரவில்லை, யஹோவாவும் வரவில்லை, அவர்கள் வரப் போவதுமில்லை . இப் போது அவர்கள் தங்கள் வீட்டைக் காப்பாற்றுவதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டிற்கு வர அவர்களுக்கு நேரமே இல்லை .

நம் நாட்டில் அதே சிவபெருமான் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறார், அதே அன்னை காளி ஆட்டுப்பலியை ஏற்றுவரு கிறாள், வேணுகானக் கண்ணன் புல்லாங் குழலை இசைக்கவே செய்கிறான். அதே சிவபெருமான் ஒருகாலத்தில் காளை வாகனத்தில் அமர்ந்து உடுக்கையை ஒலித்தபடி ஒருபக்கம் சுமத்ரா , போர்னியோ, செலிப்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா இங்கெல்லாம் சென்றார்; இன்னொரு பக்கம் திபெத், சீனா, ஜப்பான், சைபீரியா முதலிய நாடுகளுக்குச் சென்றார்; இன்றும் பல நாடுகளுக்குப் பயணம் செய்தபடி உள்ளார். அதே காளிதேவி சீனாவிலும் ஜப்பானிலும் வழிபடப்பட்டு வருகிறாள். அவளையே ஏசுவின் தாய் மேரி என்று கிறிஸ்தவர்கள் வழிபடு கின்றனர்.

அதோ அந்த இமயத்தைப் பார்க்கிறீர் களே, அதன் வட பகுதியில்தான் கயிலாய மலை அமைந்துள்ளது. சிவபெருமானின் முக்கிய உறைவிடம் அது. பத்துத் தலை களும் இருபது கைகளும் கொண்ட ராவண னால்கூட அதை அசைக்க முடியவில்லை, இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகள் அசைக்கப் போகிறார்களா என்ன?

இந்திய மண்ணில் அதே பழம் பெரும் சிவபெருமான் உடுக்கையை ஒலித்தபடி என்றென்றும் இருப்பார், அன்னை காளி மிருகபலியை என் றென்றும் பெற்றுவருவாள், ஆசைக் கண்ணன் எப்போதும் குழலூதிக் கொண் டிருப்பான்.

உங்களுக்குப் பிடிக்கவில்லை என் றால் போய்த் தொலையுங்களேன். கை யளவு மக்களாகிய உங்களுக்காக நாடே பொறுத்துப் பொறுத்து, நலிவுற்று நாச மாக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மனம்போனபடி வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடிப் பார்த்து நீங்கள் ஏன் போகக் கூடாது? உலகம்தான் பரந்து விரிந்து கிடக்கிறதே! போவதற்கென்ன?

ஆனால் போக மாட்டார்கள். அதற் குரிய வலிமை அவர்களிடம் எங்கே? சிவபெருமானின் உப்பைத் தின்றுவிட்டு, அவருக்கே துரோகம் செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள். கேவலம்! இத்தகைய அன்னியர்களிடம் சென்று, ‘அந்தோ! நாங்கள் தாழ்ந்தவர்கள், அற்பர்கள், அதலபாதாளத்தில் கிடக் கிறோம். எங்கள் அனைத்தும் தாழ்ந்தவை’ என்று புலம்புகிறீர்கள். நீங்கள் சொல்வது சரிதான், நீங்கள் சத்திய சந்தர்கள்தான். நீங்கள் எக்கேடு கெட்டும் போங்கள். ஆனால் ‘நாங்கள்’ அற்பர்கள் என்று நாட்டு மக்கள் அனைவரையும் ஏன் உங்களுடன் சேர்த்துக் கொள்கிறீர்கள்? இது என்ன நியாயம் நண்பர்களே? (ஞான தீபம், 8.207-208.)

கிறிஸ்தவ மதம் என்ன செய்தது?

1. தத்துவங்களைப் பொறுத்தவரை யில் உலகிலுள்ள எந்த நாட்டினரும் இந்துக்களுக்கு ஒளி காட்ட முடியாது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் கிறிஸ்தவ நாட்டிலிருந்து இங்கு வந்து சேர்கின்ற எல்லா ஆசாமிகளும் பழைய முட்டாள்தனமான ஒரு வாதத்தையே கையாள்கின்றனர்- கிறிஸ்தவர்கள் வலிமையாக, செல்வம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர், இந்துக்கள் அவ்வாறு இல்லை; எனவே இந்து மதத்தைவிட கிறிஸ்தவ மதமே சிறந்தது. இந்துக்கள் மிகப் பொருத்தமாக இதற்குப் பதில் கூறுகின்றனர்– இந்தக் காரணத்தால்தான் இந்து மதம் ஒரு மதம் ஆகிறது, கிறிஸ்தவம் ஒரு மதம் ஆகாது. (ஞான தீபம், 11.28.)

2. கீழை நாடுகளிலுள்ள எங்களிடம் அழுத்தம் திருத்தமாக நாங்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் மதம் மாற வேண்டும் என்று கேட்டால் கிறிஸ்தவ நாடுகள்தான் மிகவும் செல்வச் செழிப்புடன் இருக் கின்றன என்கிறார்கள். நாங்கள் எங் களை ஒருமுறை பார்த்துக்கொள்கிறோம், இங்கிலாந்தையும் பார்க்கிறோம். உண்மை தான், உலகக் கிறிஸ்தவ நாடுகளில் இங்கி லாந்து மிகவும் செல்வம் நிறைந்த நாடாகத் திகழ்கிறது; ஆனால் அதன் கால்களில் 250 கோடி ஆசியர்களின் கழுத்துக்கள் நெரி பட்டுக் கிடக்கின்றனவே!

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறோம். கிறிஸ்தவ ஐரோப்பாவின் செல்வம் எங்கிருந்து வந்தது? ஸ்பெயினிலிருந்து. ஸ்பெயின் எப்படிச் செல்வ வளம் பெற்றது? மெக்ஸிகோவின்மீது படை யெடுத்து அடிமை கொண்டதிலிருந்து. சக மனிதர்களின் கழுத்தை வெட்டிதான் கிறிஸ்தவ நாடுகள் செல்வவளம் மிக்கவை ஆயின. இத்தகைய விலைகொடுத்து இந்து ஒருநாளும் பணக்காரன் ஆக மாட்டான்.

(சிகாகோ சொற்பொழிவுகள் பற்றிய செய்தித் தாள் குறிப்பிலிருந்து; A Comprehensive Biography of Swami Vivekananda, Vol.1, pp.460, Pub: Vivekananda Kendra.)

3. கிறிஸ்தவ மதம் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தன்னை உலகத் திற்குத் தெரிவித்துக் கொள்வதில்கூட வெற்றிபெற முடியவில்லை. வாள்மூலம் கான்ஸ்டன்டைன் அதற்குத் தனது நாட்டில் ஓர் இடம் கொடுத்த நாள் முதல் ஆன்மீக அல்லது லௌகீக நாகரீக முன் னேற்றத்திற்குக் கிறிஸ்தவ மதம் ஏதாவது உதவி செய்திருக்கிறதா? பூமி ஒரு சுற்றி வரும் கிரகம் என்று முதன்முதலாக நிரூபித்த ஐரோப்பிய அறிஞனுக்குக் கிறிஸ்தவ மதம் என்ன பரிசு அளித்தது?

எந்த விஞ்ஞானியையாவது எப்போ தாவது கிறிஸ்தவ மதம் அங்கீகரித் திருக்கிறதா? குற்றவியல் மற்றும் சமூகவியல் சட்டங்கள், கலை, வியாபாரம் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கிறிஸ்தவ இலக்கியத்தால் முடியுமா? இப்போதும் சர்ச், மதம் அல்லாத இலக்கியத்தைப் பரவ விடுவதில்லை .

தற்காலக் கல்வியையும் விஞ் ஞானத்தையும் அறிந்த ஒருவன் இன்று உண்மைக் கிறிஸ்தவனாக இருக்க முடியுமா? புதிய ஏற்பாட்டில் வெளிப் படையாகவோ, மறைமுகமாகவோ எந்தக் கலையையோ விஞ்ஞானத்தையோ புகழ்ந்து ஒரு வார்த்தைகூடக் கிடையாது….

ஐரோப்பாவின் உன்னதச் சிந்தனை யாளர்களான வால்டேர், டார்வின், புக்னர், ஃப்லமேரியன், விக்டர் ஹ்யூகோ போன்ற பலரையும் இன்றைய கிறிஸ்தவர்கள் கண்டனம் செய்யவும் நிந்திக்கவுமே செய்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் ஐரோப்பிய யூதர்களை எப்படி நடத்துகிறார்கள்? மத ஸ்தாபனங் கள் நீங்கலாக ஐரோப்பாவின் வேறெந்தத் துறையும் பைபிளுக்குச் சம்மதமானவை இல்லை . கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவும் பைபிளுக்கு மாறாகவுமே ஐரோப்பா ஒவ் வோர் உயர்வையும் அடைந்தது. கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவில் இன்றும் முன் போலவே வலிமை பெற்றதாக இருக்கு மானால் பாஸ்டர், கோக் போன்ற விஞ் ஞானிகளையெல்லாம் உயிருடன் கொளுத் தியிருப்பார்கள்; டார்வின் போன்றோரைக் கழுவேற்றியிருப்பார்கள்.

நவீன ஐரோப்பாவில் கிறிஸ்தவம், நாகரீகம் இரண்டும் வெவ்வேறானவை. நாகரீகம் தன் நிரந்தர எதிரியான மதத்தை அழிக்கவும், பாதிரி வர்க்கத்தையே வெறுக்கவும், அவர்களின் கைவசமிருக் கின்ற கல்வி நிறுவனங்களையும் தர்ம ஸ்தாபனங்களையும் பிடுங்கிக் கொள்ள வும் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.

அறிவிலிகளான விவசாயிகளின் கூட்டம் இல்லையென்றால், கிறிஸ்தவ மதம் தன் இப்போதைய பரிதாபகரமான நிலையிலும்கூட ஒரு வினாடி இருக்க முடி யாது; வேரோடு பிடுங்கப்பட்டிருக்கும். ஏனெனில் நகரவாசிகளான ஏழைகள் இப்போது சர்ச்சின் பரம விரோதிகள். (ஞான தீபம், 8.293-295.)

4. துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருக் கும் மக்களைப் பற்றியும், அவல நிலை யில் வாழும் பெண்களைப் பற்றியும் வாய் கிழியப் பேசுகிறார்களே தவிர, அவர் களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை .

அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘உங்களை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்வதில்தான் உங்கள் நன்மை உள்ளது. அதற்குத்தான் நாங்கள் உதவ முடியும். நீங்கள் இந்துக்களாக இருக்கும்வரை உங்களுக்கு உதவுவதில் எந்தப் பயனுமில்லை ‘ என்பதுதான்.

இவர்களுக்கு இனங்களின் வரலாறு தெரியாது. இந்தியர்கள் தங்கள் மதத்தை யும் சமுதாய அமைப்புகளையும் மாற் றுவார்களானால் இந்திய நாடே இருக் காது…. அந்த நாடு மறைவது நிச்சயம். அந்த இனத்தின் உயிர்நாடியே மதம்தான். (ஞான தீபம், 1.19.)

5. ஒவ்வொரு கிறிஸ்தவக் குழந்தை யும் இந்துக்களை ‘இழிந்தவர்கள்’ ‘வெறுக்கத்தக்கவர்கள்’ என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும்படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?

கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை வெறுக்க வேண்டும், அதிலும் முக்கியமாக இந்துக்களை வெறுக்க வேண்டும் என்பதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிச் சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படும் பாடங் களுள் ஒரு பகுதியாக இடம் பெறுகிறது. ஏனெனில் அந்தக் குழந்தைப் பருவம் முதல் அவர்கள் ஒவ்வொரு காசையும் கிறிஸ்தவ மதப் பிரச்சார அமைப்புக் களுக்குக் கொடுக்க வேண்டுமே!

உண்மைக்காக வேண்டாம், தங்கள் சொந்தக் குழந்தைகளின் நல்லொழுக்கத் திற்காகவாவது கிறிஸ்தவப் பாதிரிகள் இதைத் தடுக்கக் கூடாதா? இப்படிப்பட்ட குழந்தைகள் இரக்கமற்ற கொடியவர்களாக வளர்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

மீளா நரகத்தின் சித்திரவதைகளை யும், அங்குக் கொழுந்து விட்டெரியும் நெருப்பையும், கந்தகக் கற்களையும் பற்றி எவ்வளவு அதிகமாக ஒருவர் சித்தரிக் கிறாரோ, அந்த அளவுக்கு அவர் கிறிஸ் தவப் பழமைவாதிகளிடையே உயர்ந்த இடம் பெறுகிறார். அவர்களின் மத மறு மலர்ச்சிப் பிரச்சாரத்தைக் கேட்டு விட்டு எனது நண்பரின் பணிப்பெண் ஒருத்தியைப் பைத்தியக்கார விடுதிக்கு அனுப்ப நேரிட்டது. நரகத்தின் நெருப்பும் அங்குள்ள கந்தகத்தின் சூடும் அவ ளுக்குப் பொறுக்க முடியாமல் போய் விட்டது!

இந்து மதத்திற்கு எதிராகச் சென்னை யில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களைப் பாருங்கள். கிறிஸ்தவ மதத்தை எதிர்த்து ஓர் இந்து அது போல் ஒரு வரி எழுதட்டும், பாதிரிகள் பழிக்குப்பழியாக நெருப்பைக் கக்கிவிடுவார்கள். (ஞான தீபம், 1.76-77.)

ஏசு என்ற ஒருவர் இருந்தாரா?

1. ஏசு என்ற ஒருவர் எப்போதாவது இருந்தாரா, இல்லையா என்பதில் பலத்த கருத்து வேறுபாடு நிலவுகிறது. புதிய ஏற்பாட்டின் நான்கு நூல்களுள், புனித ஜான் எழுதிய நூல் உண்மைக்கு மாறானது என்று கருதி புறக்கணிக்கப்பட்டுவிட்டது. மற்ற மூன்று நூல்களும்கூட சில புராதன நூல்களைப் பிரதி செய்து எழுதப் பட்டவை என்பது ஒரு கருத்து. அவையும் ஏசுநாதரின் காலமாகக் கருதப்படுவதன் வெகுகாலத்திற்குப் பின்னர் பிரதி செய்யப் பட்டவையாம்!

மேலும், ஏசுநாதர் பிறந்ததாகக் கூறப் படும் காலத்தில் ஜொஸீஃபஸ், ஃபிலோ என்ற இரு வரலாற்று ஆசிரியர்கள் யூதர் களிடையே வாழ்ந்தனர். யூதர்களிடையில் தோன்றிய சிறுசிறு பிரிவினரைப்பற்றிக் கூடக் குறிப்பிட்டுள்ள இவர்கள், ஏசுவைப் பற்றியோ, கிறிஸ்தவ மதத்தைப் பற்றியோ, ரோமானிய நீதிபதி ஏசுவைச் சிலுவை யில் அறையும்படித் தீர்ப்பு அளித்தது பற்றியோ ஒரு குறிப்புகூட எழுத வில்லை. ஜொஸீஃபஸின் நூலில் ஏதோ ஒரு வரி உள்ளது. அதுவும் இடைச் செருகல் என்று இப்போது நிரூபிக்கப்பட் டிருக்கிறது.

அந்தக் காலத்தில் யூதர்களை ரோமானியர் ஆண்டனர்; கிரேக்கர்கள் கல்வி கற்றுத் தந்தனர். அவர்களும் யூதர் களைப்பற்றி நிறைய எழுதியிருக் கிறார்கள். ஆனால் ஏசுவைப் பற்றியோ கிறிஸ்தவ மதத்தைப் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை .)

இன்னொரு பிரச்சினை என்னவென் றால் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற கருத்துக்களும் உபதேசங்களும் கொள்கை களும் ஏசு பிறப்பதற்கு முன்பிருந்தே பல் வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்டு யூதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந் திருக்கின்றன; ஹிலேல் போன்ற ராபிகள் பிரச்சாரம் செய்திருந்தனர்.

இதையெல்லாம் சொல்வது அறிஞர்கள். அதை ஞாபகம் வைத்துக் கொள். சிறிதும் யோசிக்காமல் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு பிற மதங் களைப்பற்றி இவ்வாறெல்லாம் சொல்லி விடலாம். ஆனால் சொந்த மதத்தைப்பற்றி இப்படிச் சொன்னால் அவர்களது பெயர் நிலைக்குமா? எனவே அந்த விஷயத்தில் சற்று அடக்கித்தான் வாசிப்பார்கள். இப்படிச் செய்வதுதான் ‘ஹையர் க்ரிட்டிசிசமாம்! (Higher Criticism, உயர்தர விமர்சனம்). (ஞான தீபம், 8.385-386.)

2. இங்கிலாந்திலிருந்து திரும்பி வரும் போது ஒரு வினோதமான கனவு கண் டேன். மத்தியதரைக் கடல் வழியாக எங்கள் கப்பல் வந்தபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது வயதான ரிஷி போன்ற ஒருவர் என் கனவில் தோன்றினார். அவர் என்னிடம், “எங்கள் பழைய நிலையை நீ எங்களுக்கு மீட்டுத் தர வேண்டும். நாங்கள் இந்தியாவின் புராதன Kஷிகளாகிய தேரா புத்தர்களின் வழிவந்த வர்கள். நாங்கள் போதித்த உண்மைகளை யும் கருத்துக்களையும் கிறிஸ்தவர்கள், ஏசு என்பவரால் போதிக்கப்பட்டதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் ஏசு என்று ஒருவர் பிறக்கவேயில்லை . இந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தால் அதற் கான ஆதார உண்மைகள் கிடைக்கும்” என்றார். உடனே நான், “எந்த இடத்தைத் தோண்ட வேண்டும்?” என்று கேட்டேன். உடனே அவர் துருக்கியைச் சேர்ந்த ஒரு பகுதியைக் காட்டி, “இதோ, இங்கேதான்” என்றார். நான் விழித்தெழுந்த உடனே கப்பலின் மேல்தளத்திற்குச் சென்று கப்பல் கேப்டனிடம், ”நாம் இப்போது எந்த இடத்தில் இருக்கிறோம்?” என்று கேட் டேன். அதற்கு அவர், ‘அதோ பாருங்கள், அங்கேதான் துருக்கியும் கிரீட் தீவும் (Crete) உள்ளன” என்றார். இது வெறும் கனவு தானா! அல்லது இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? யாருக்குத் தெரியும்?’ (ஞான தீபம், 6.332.)

இந்துக்களின் தவறு

1. இப்பொழுது நான் சில கடினமான வார்த்தைகளைச் சொல்லியாக வேண்டி யிருக்கிறது. நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஐரோப்பியர்களின் உலகியல் நம்மை ஏறக் குறைய மூழ்கடித்துவிட்டது என்று குற்றம் சாட்டினார்கள். தவறு ஐரோப்பியர் களுடையது மட்டுமல்ல, பெரும் பங்கு நம்முடையதே.

வேதாந்திகள் என்ற நிலையில் நாம் எந்தப் பொருளை எடுத்துக் கொண் டாலும், அதன் உள்நோக்கத்தை, அடிப் படைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். வேதாந்திகள் என்ற நிலையில், நம்மை நாமே காயப்படுத்திக் கொண் டாலன்றி, பிரபஞ்சத்தில் உள்ள எந்தச் சக்தியும் நம்மைக் காயப்படுத்த முடியாது என்பது உறுதியாக நமக்குத் தெரியும். இந்திய மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களாகி விட்டனர். அதுபோலவே அதற்கு முன்னால் மூன்றில் இரண்டு பங்கினர் பௌத்தர்களாகி யுள்ளனர். இப்பொழுது ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர்கள், ஒரு லட்சத்திற்கு மேல் ஏற்கனவே கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

இது யாருடைய தவறால் விளைந்தது? நம்முடைய வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர் மறக்க முடியாத மொழியில் கேட் கிறார்: நிரந்தர வாழ்க்கையாகிய நீரூற்று, அருகிலேயே பொங்கிப் பெருகிச் செல்லும்போது, இந்த ஏழை அப்பாவி பசியாலும் தாகத்தாலும் ஏன் செத்து மடிய வேண்டும்? சொந்த மதத்தையே உதறிச் செல்பவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என்பதுதான் கேள்வி. அவர்கள் ஏன் முகமதியர்கள் ஆனார்கள்?. … பிற மதங்களுக்குப் போய்விட்ட நம் மக்களைக் குறித்து நாம் இப்போது அழுகிறோம். ஆனால் அவர்கள் மதம் மாறுவதற்கு முன் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்?


நாம் ஒவ்வொருவரும் நம்மையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள் வோம். நாம் என்ன கற்றுக் கொண்டோம்? சத்திய ஜோதியை நாம் ஏந்தியுள்ளோமா? ஏந்தியுள்ளோம் என்றால், எவ்வளவு தொலைவு அதை எடுத்துச் சென்றோம்? இந்தக் கேள்வியை நாம் நம்மிடம் கேட்டே தீர வேண்டும்.

நாம் அப்போது அவர்களுக்கு உதவ வில்லை . இது நாம் செய்த தவறு, நாம் செய்த வினை. எனவே இதற்காக யார் மீதும் பழிபோட வேண்டாம், நம் சொந்த வினையையே குறைகூறிக் கொள்வோம்.

நீங்கள் அனுமதிக்காமல், உலகாய தமோ, முகமதியமோ, கிறிஸ்தவமோ அல்லது வேறு எதுவுமோ உங்களை வெல்ல முடியாது. மோசமான உண வாலும் பட்டினியாலும் வெயிலாலும் மழையாலும் உடம்பு சிதைந்தும் சீர்குலைந்தும் போகாதவரை எந்தக் கிருமியும் அதனைத் தாக்க முடியாது. ஆரோக்கியமானவன் விஷக்கிருமிக் கூட்டத்தின் நடுவேகூட ஆபத்தின்றிச் சென்று வர முடியும்.

நமது வழிமுறைகளை மாற்றிக் கொள் வதற்கு இன்னும் அவகாசம் உள்ளது. (ஞான தீபம், 5.36-37.)

இந்துக்கள் என்ன செய்ய வேண்டும்?

1. எனது நாட்டின் அருமை மக்களே! நான் இங்கு (அமெரிக்காவில்) ஒரு வருடத் திற்கு மேலாக இருக்கிறேன். ஏறக்குறைய இங்குள்ள சமூகத்தின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இது தான்: பாதிரிகள் கூறுவதுபோல் நாம் பேய் களும் அல்ல, தங்களைப்பற்றி பெருமை யடித்துக் கொள்வது போல் அவர்கள் தேவர் களும் அல்ல. இந்துக்களின் ஒழுக்க மின்மை, குழந்தைகளைக் கொல்வது, திருமண முறையின் தீமைகள் இவற்றைப் பற்றி பாதிரிகள் எவ்வளவு குறைவாகப் பேசுகிறார்களோ, அவ்வளவு அவர்களுக்கு நல்லது.

சில நாடுகளின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டினால், பாதிரிகள் இந்து சமூகத்தைக் கற்பனையாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பது அவற்றின் முன் மங்கி மறைந்து விடும். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு நிந்திப்பது என் குறிக் கோள் அல்ல.

இந்து சமூகம் பூரணமானது என்று நான் ஒருபோதும் உரிமை கொண்டாட வில்லை. அதில் உள்ள குறைகளைப் பற்றியும், பல நூற்றாண்டு துரதிருஷ்டங் களின் காரணமாக அதில் வளர்ந்துள்ள தீமைகளைப் பற்றியும் என்னைவிட உணர்ந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

1. சிகாகோ சர்வமத மகாசபை வெற்றிக்கு சென்னை இந்துக்கள் அளித்த பாராட்டுதலுக்கு எழுதிய பதிலிலிருந்து ; ஞான தீபம், 1.76-77.

வெளிநாட்டு நண்பர்களாகிய நீங்கள் அழிக்கும் நோக்கமில்லாமல் உண்மை யான அனுதாபத்துடன், உதவிபுரிகின்ற எண்ணத்துடன் வருவீர்களானால், நீங்கள் வெற்றியடைய இறைவன் உதவட்டும். ஆனால் வீழ்த்தப்பட்டிருக்கும் ஓர் இனத்தினரின் தலையில் வசைமொழி களை அள்ளிவீசி, உங்கள் நாட்டு மக்களின் ஒழுக்க நிலையின் உயர்வை ஆணித்தர மாக உறுதிப்படுத்துவது ஒன்றுதான் உங்கள் நோக்கமானால், நான் வெளிப் படையாகச் சொல்கிறேன்- கொஞ்ச மாவது நியாய மனப்பான்மையுடன் ஒப் பிட்டுப் பார்த்தால் – ஒழுக்கம் நிறைந்த இனம் என்ற முறையில் பிறநாட்டு மக்கள் எல்லோரையும் விட இந்து மிகமிக உயர்ந்தவன் என்பது புலனாகும். (ஞான தீபம், 1.76-77.)

2. இந்துக்களின் அனுதாபம் இல்லாத தால், சென்னையிலுள்ள ஆயிரக்கணக் கான தாழ்ந்த ஜாதியினர் கிறிஸ்தவர் களாகி விட்டார்கள். இதற்குக் காரணம் பசிக்கொடுமை மட்டுமல்ல, நமது இரக்க மின்மையும் ஒரு காரணம்தான். நாம் இரவு பகலாக அவர்களிடம், ”எங்களைத் தொடாதீர்கள்! தொடாதீர்கள்!” என்று கூவிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நாட்டில் இரக்கம் எங்கே உள்ளது? அன்பு எங்கே உள்ளது? வெறும் தீண்டாமைக் கும்பல்கள்! இந்த வழக்கங் களை உதைத்துத் தள்ளுங்கள். இந்தக் கட்டுக்களை உடைத்தெறிந்து வெளியேறி, “ஏழைகளே, துன்புறுபவர்களே, கவலை யால் நைந்தவர்களே, தாழ்த்தப்பட்ட வர்களே, எல்லோரும் வாருங்கள்!” என்று கூறி, ஸ்ரீராமகிருஷ்ணரின் திருப்பெயரால் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்னும் எண்ணம் இடையிடையே என் உள்ளத்தில் எழுகிறது.

இவர்கள் விழித்தெழாமல் பாரத மாதா தூக்கத்திலிருந்து எழ மாட்டாள். இவர்களின் உணவுக்கும் உடைக்கும் ஏற்பாடு செய்யாமல் இருக்கிறோம். நாம் இவர்களுக்கு என்னதான் செய்துள்ளோம்? ஐயோ! உலக விவகாரம்பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியவில்லை . எனவே இரவு பகலாக வேலை செய்தும், உணவிற்கும் உடைக்கும் வழியில்லாமல் துன்புறு கிறார்கள். எல்லோரும் சேர்ந்து இவர் களின் கண்களைத் திறப்போம்!

என்னிடமும் இவர்களிடமும் ஒரே பிரம்மமே, ஒரே மகாசக்தியே உள்ளது; தோற்ற அளவில்தான் வேறுபாடு என் பதை நான் என் ஞானக்கண்களால் தெளி வாகக் காண்கிறேன். ஒவ்வோர் அங்கத் திலும் ரத்தம் நிறைந்து ஓடாமல் எந்த நாடாவது எப்போதாவது உயர்வடைந்த துண்டா ? ஓர் உறுப்பு செயலற்றுப் போனால், பிற உறுப்புகள் நன்றாக இருந் தாலும், அந்த உடலால் அதிகம் வேலை நடக்காது. இதை நிச்சயமாக உணர்ந்து கொள்.’ (ஞான தீபம், 6.257-258.)

3. கேள்வி: இந்து மதத்திலிருந்து விலகியவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாமா?

சுவாமிஜி: நிச்சயமாகச் சேர்த்துக் கொள்ளலாம், சேர்த்தேயாக வேண்டும். (ஒரு கணம் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு) இல்லாவிட்டால் நாம் எண்ணிக்கையில் குறைந்து விடுவோம். முகமதியர்கள் நம் நாட்டிற்கு வந்தபோது நாம் அறுபது கோடி பேர் இருந்ததாக முகமதிய வரலாற்று ஆசிரியர்களுள் காலத்தால் முந்தியவரான ஃபெரிஷ்டா (Ferishta) கூறுகிறார். இப் போது அது இருபது கோடியாகி விட்டது. ஒருவன் இந்து மதத்தை விட்டு விலகு வானானால் நமது எண்ணிக்கையில் ஒன்று குறைவதுடன் நமது எதிரிகளில் ஒருவன் அதிகமாகிவிடுகிறான் அல்லவா?

முகமதிய, கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பெரும்பாலான இந்தியர்கள் வாளுக்கு அஞ்சியே சேர்ந்திருக்க வேண்டும், அல்லது அப்படிச் சேர்ந்தவர் களின் மரபில் தோன்றியவர்களாக இருக்க வேண்டும். இவர்களை எந்தவிதமான துன்பத்திற்கும் ஆளாக்குவது சரியல்ல என்பது தெளிவு. பிறவியிலேயே பிற மதத்தவராக இருப்பவர்களைப்பற்றி நீங்கள் கேட்கலாம். ஆனால் அவர்களும் கூட்டம்கூட்டமாக பண்டைக் காலத்தில் மதமாற்றம் செய்யப்பட்டவர்களே. அது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இசைந்த மனத்துடன் தாய் மதம் திரும்புபவர்களுக்குப் பரிகாரச் சடங்குகள் வேண்டும். ஆனால் காஷ்மீர், நேபாளம் போன்ற பகுதிகளில் படையெடுப்பின் காரணமாகப் பிற மதங்களைத் தழுவியவர் களுக்கும், புதிதாக நமது மதத்தில் சேர விரும்புபவர்களுக்கும் எந்தப் பரிகாரச் சடங்கும் கூடாது. (ஞான தீபம், 8.84-85.)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s