விவேகானந்தரிடம்கேளுங்கள்…
நமதுகேள்விகளுக்கு; சுவாமிஜியின்பதில்கள்.
கேள்வி: இந்து மதத்திலிருந்து விலகியவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாமா?
சுவாமிஜி: நிச்சயமாகச் சேர்த்துக் கொள்ளலாம், சேர்த்தேயாக வேண்டும். (ஒரு கணம் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு) இல்லாவிட்டால் நாம் எண்ணிக்கையில் குறைந்து விடுவோம். முகமதியர்கள் நம் நாட்டிற்கு வந்தபோது நாம் அறுபது கோடி பேர் இருந்ததாக முகமதிய வரலாற்று ஆசிரியர்களுள் காலத்தால் முந்தியவரான ஃபெரிஷ்டா (Ferishta) கூறுகிறார். இப் போது அது இருபது கோடியாகி விட்டது. ஒருவன் இந்து மதத்தை விட்டு விலகு வானானால் நமது எண்ணிக்கையில் ஒன்று குறைவதுடன் நமது எதிரிகளில் ஒருவன் அதிகமாகிவிடுகிறான் அல்லவா?
முகமதிய, கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பெரும்பாலான இந்தியர்கள் வாளுக்கு அஞ்சியே சேர்ந்திருக்க வேண்டும், அல்லது அப்படிச் சேர்ந்தவர் களின் மரபில் தோன்றியவர்களாக இருக்க வேண்டும். இவர்களை எந்தவிதமான துன்பத்திற்கும் ஆளாக்குவது சரியல்ல என்பது தெளிவு. பிறவியிலேயே பிற மதத்தவராக இருப்பவர்களைப்பற்றி நீங்கள் கேட்கலாம். ஆனால் அவர்களும் கூட்டம்கூட்டமாக பண்டைக் காலத்தில் மதமாற்றம் செய்யப்பட்டவர்களே. அது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இசைந்த மனத்துடன் தாய் மதம் திரும்புபவர்களுக்குப் பரிகாரச் சடங்குகள் வேண்டும். ஆனால் காஷ்மீர், நேபாளம் போன்ற பகுதிகளில் படையெடுப்பின் காரணமாகப் பிற மதங்களைத் தழுவியவர் களுக்கும், புதிதாக நமது மதத்தில் சேர விரும்புபவர்களுக்கும் எந்தப் பரிகாரச் சடங்கும் கூடாது. (எழுந்திரு! விழித்திரு! , 8.84-85.)