விவேகானந்தரிடம் கேளுங்கள்…
நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள்.
கேள்வி:
கே: ‘உருவ வழிபாட்டின்மூலம் ஒருவன் முக்திபெற முடியுமா?’
சுவாமிஜியின்பதில்:
ப: ‘உருவ வழிபாடு நேரடியாக முக்தி தராது. அது ஒரு மறைமுகக் காரணம், முக்திப் பாதையில் உதவக்கூடிய ஒன்று. உருவ வழிபாட்டைக் கண்டிக்கக் கூடாது. பலருடைய விஷயத் தில், அத்வைத நிலையை அடைய இது அவர்களுடைய உள்ளத்தைப் பண்படுத்துகிறது. அத்வைத நிலை மட்டுமே பூரண நிலையை அளிக்க முடியும்.’
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 6, Chapter 11. கேள்வி-பதில் (பேலூர் மடத்து நாட்குறிப்பிலிருந்து திரட்டியது)